jkr
แสดงบทความที่มีป้ายกำกับ தமிழ் தேசிய கூட்டமைப்பு แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ தமிழ் தேசிய கூட்டமைப்பு แสดงบทความทั้งหมด

பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து த.தே.கூ யாழ்ப்பாணத்தில் பொதுக்கூட்டம்


எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளார் சரத் பொன்சேகாவை ஆதரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பினால் நேற்று பிற்பகல் 4.30 மணிக்கு நல்லூர் சட்டநாதர் சங்கிலியன் தோப்பில் பொதுக்கூட்டம் இடம்பெற்றது. யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ்பிறேமச் சந்திரன் தலைமையில் இப்பொதுக்கூட்டம் இடம்பெற்றது.

இந்தக் கூட்டத்தில் பல வருடங்களின் பின்னர் பல ஆயிரக்கணக்கான பொது மக்கள் யாழ், குடா நாட்டின் பல பகுதிகளில் இருந்தும் கலந்து கொண்டதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இதில் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, சொலமன் சிறில், பத்மினி சிதம்பரநாதன், திருமலை நாடாளுமன்ற உறுப்பினர் துரைரட்ண்ச்சிங்கம், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், இமாம் மற்றும் தமிழ் தேசியக் கூட்மைப்பின் தலைரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆர்.சம்பந்தர் ஆகியோர் உரையாற்றினர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

40 ஆயிரம் சவப்பெட்டிகளை ஏற்ற முடியாமையால் தனியே விமானம் ஏறினார் குதிரை கஜேந்திரன்!


புலிகளின் தமிழ் தேசிய கூட்டமைப்பு(TNA) மூலம் பாராளுமன்றத்திற்குள் கால்பதித்த செல்வராஜா பத்மநாதன் என்ற குதிரை கஜேந்திரன்(பலக்லைகழகத்திற்கு இன்னுமொருவர் மூலம் பரீட்சை எழுதி உட்புகுந்தமையால் இவரை குதிரை கஜேந்திரன் என்று சக மாணவர்கள் அழைப்பதினால்தான் இவருக்கு குதிரை கஜேந்திரன் என்ற பட்டம் கிடைத்தது) அன்று பா.உ பதவியேற்பின்போது யுத்தம் ஒன்றை அரசு திணித்தால் யாழ்ப்பாணத்தில் இருந்து 40,000க்கு மேற்பட்ட சவப்பெட்டிகள் கொழும்புவரும் என்று பாராளுமன்றத்தில் முழக்கமிட்டிருந்தார்.

பின்னர் இவர் கூறிய சவப்பெட்டிகளை அரசு வன்னியில் தயாராக்கியபோது அங்கிருந்து தப்பித்து ஜரோப்பாவில் தஞ்சமடைந்தவர்தான் இந்த கஜேந்திரன். இன்று பதவி பறிபோகும் காலம் நெருங்கிவரும் நிலையில், மாவீரர்தினத்தில் பங்கு கொள்ளாமல் 40,000 சவப்பெட்டிகளை ஏற்றமுடியாமலும் கொழும்பு நோக்கி விமானம் ஏறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates