jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பசில் ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பசில் ராஜபக்ஷ แสดงบทความทั้งหมด

வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் விரைவில் மீள் குடியேற்றம்:பசில் ராஜபக்ஷ


யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ளவர்களில் முதற் கட்டமாக 4500 பேரை மீளக் குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக 'வடக்கின் வசந்தம்' செயலணிக் குழுவின் தலைவரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நேற்று முன் தினம் ஜனாதிபதி செயலகத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களான என். ஸ்ரீகாந்தா மற்றும் செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இதனை அவர் தெரிவித்துள்ளார்.

யாழ். வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள ஒரு லட்சத்திற்கு மேற்பட்டவர்களை அவர்களின் சொந்த இருப்பிடங்களில் மீள் குடியேற்றம் செய்ய வேண்டியதன் அவசியம் தொடர்பாக குறிப்பிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதியின் ஆலோசகரிடம் இச்சந்திப்பின் போது சுட்டிக் காட்டியுள்ளனர்.

இதற்கு பதிலளித்த பசில் ராஜபக்ஷ முதற்கட்டமாக 4500 பேரை விரைவில் மீள் குடியேற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதோடு ஏனையோரின் மீள் குடியேற்றம் தொடர்பாக வலிகாமம் வடக்கு இடம் பெயர்ந்தோர் நலன்புரிச் சங்கத்தின் பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்திக்க ஏற்பாடுகள் செய்து தரப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மூதூர் கிழக்கு சம்பூர் உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள பத்திரகாளி அம்மன் ஆலயம் ,வலிகாமம் வடக்கு உயர் பாதுகாப்பு வலயத்தில் அமைந்துள்ள மாவிட்டபுரம் கந்தசாமி ஆலயம் ஆகியவற்றிற்கு மக்கள் தமது வழழிபாட்டின் நிமித்தம் சென்று வர அனுமதியழிக்கப்படல் வேண்டும் என்ற கோரிக்கை தங்களால் முன் வைக்கப்பட்ட போது இதற்கான ஏற்பாடுகளை செய்து தருவதாக ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷ தங்களிடம் உறுதியளித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா கூறுகின்றார்.

அவசரகால சட்ட விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் சதாசிவம் கனகரத்தினத்தின் விடுதலையை துரிதப்படுத்துதல் ,மன்னார் - மதவாச்சி வீதியில் தற்போது அமுலிலுள்ள 5 வீதித் தடைச் சோதனைகளுக்கு பதிலாக பறையனாளன்குளத்தில் மட்டும் பயணிகள் சோதனையிடுதல் போன்ற விடயங்கள் குறித்தும் இந்த சந்திப்பின் போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரின் கவனத்திற்கு கொண்டு வந்ததாகவும் இதற்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நலன்புரி நிலையங்கள் அனைத்தும் திறந்த முகாம்களாக்கப்படும் : பசில்


புலிகளுடனான போரின் போது அகதிகளாக்கப்பட்ட மக்களுக்கு விமோசனம் ஏற்படுத்தும் முகமாக, எதிர்வரும் டிசம்பர் முதலாந் திகதி அனைத்து நலன்புரி நிலையங்களும் திறந்த முகாம்களாக்க மாற்றுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும், வடக்கின் வசந்தம் செயலணியின் தலைவருமான பசில் ராஜபக்ஷ இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அறிவுறுத்தலின் பேரில் இந்த அறிவிப்பை வெளியிடுவதாக பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.

செட்டிக்குளத்திற்கு விஜயம் செய்த பசில் ராஜபக்ஷ அமைச்சர்களான றிசாத் பதியூதீன், பீலிக்ஸ் பெரேரா, வடமாகாண ஆளுனர் ஜீ.ஏ. சந்திரசிறி ஆகியோர் இராமநாதன் நிவாரணக் கிராமங்களில் தங்கியுள்ள மக்களுடன் கருத்துப் பரிமாறல்களை மேற்கொண்டனர்.

இதனையடுத்து பசில் ராஜபக்ஷ தெரிவிக்கையில்,

"2010 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆந் திகதிக்குள் நடைமுறையிலுள்ள அனைத்து நலன்புரி நிவாரணக் கிராமங்களிலுமுள்ள மக்கள் அவர்களது சொந்த பிரதேசங்களில் மீள் குடியமர்த்தப்படுவர்கள். அத்துடன், டிசம்பர் மாதம் முதலாந் திகதி முதல் அங்குள்ள மக்கள் சுதந்திரமாக எவ்வித கெடுபிடிகளுமின்றி நடமாடும் வகையில் அவை திறந்த முகாம்களாக மாற்றப்படும்.

தற்போது மீள்குடியேறும் மக்களுக்கு வழங்கப்படும் 25ஆயிரம் ரூபா கொடுப்பனவு 50ஆயிரமாக டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி முதல் அதிகரிக்கப்படும்.

மேலும் வன்னியிலிருந்து பயங்கரவாதிகளின் பிடியிலிருந்து விடுபட்டு அரசாங்கத்தின் பாதுகாப்பைத் தேடி வந்த மக்களுக்கு எமது ஜனாதிபதி தலமையிலான அரச பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளும் முழுமனதுடன் அனைத்து வசதிகளையும் செய்து கொடுத்துள்ளதை இவர்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள்.

நிவாரணக் கிராமங்களில் இருந்து இடம் பெயர்ந்த 2 லட்சத்து 80ஆயிரம் மக்களின் தொகை இன்று 50 சதவீதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அரசாங்கத்தின் நேர்மையான தூய்மையான மீள்குடியேற்ற கொள்கையே காரணமாகும்.

அந்த வகையில் கிழக்கு மாகணத்தில் இடம் பெயர்ந்த மக்களை மிகவும் துரிதமாக நாம் மீளகுடியமர்த்தினோம். இன்று பல நாடுகளிலும் அகதி முகாம்கள் பல வருட காலமாக காணப்படுகின்றன. அம்மக்கள் தொடர்ந்தும் முகாம்களிலேயே அகதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

ஆனால் எமது அரசாங்கம் இடம்பெயர்ந்த இம்மக்களது நலனில் அதிகூடிய அக்கறை செலுத்தி உட்கடடமைப்பு வசதிகள் உட்பட ஏனைய தேவைகளையும் பெற்று கொடுத்துள்ளது" என்றார்.

இந்நிகழ்வில் மீள்குடியேற்ற, அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் றிசாத் பதியுதீனும் உரையாற்றினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விசேட உரையாற்றியதன் பின்னர் பசில் எம்.பி. நாளை இராஜிநாமா


தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ எம்.பி. பாராளுமன்றத்தில் நாளை செவ்வாய்க்கிழமை விசேட உரையாற்றியதன் பின்னர் தனது எம்.பி. பதவியை இராஜிநாமா செய்துகொள்ளவுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவிருக்கும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரசார நடவடிக்கைகளை ஒழுங்கமைக்கும் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்காகவே அவர் தனது எம்.பி பதவியை இராஜிநாமா செய்துக்கொள்ளவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜிநாமா செய்துக்கொண்டாலும் எதிர்வரும் பொதுத்தேர்தலில் அவர் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது. 2006 ஆம் ஆண்டு தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக பதவியேற்றுக்கொண்ட பசில் ராஜபக்ஷ அன்வர் ஸ்மைல் எம்.பியின் வெற்றிடத்திற்கே நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

பசில் எம்.பியின் வெற்றிடத்திற்கு தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிட்ட மாத்தறை மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளை பெற்றவரை நியமிப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தென் மாகாண சபைத்தேர்தல் முடிவுகள் தொடர்பான விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியானதன் பின்னரே எம்.பியின் பதவிவெற்றிடத்தை நியமிப்பது தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி தேர்தலையா? அல்லது பாராளுமன்ற தேர்தலையா? முதலில் நடத்துவது என்பது தொடர்பில் அடுத்தமாதம் 15 ஆம் திகதி நடைபெறவிருக்கின்ற ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் வருடாந்த மாநாட்டிலேயே உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்று அரசாங்க வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates