jkr
போர்ச் சூழலில் பாலியல் வன்முறைகளைத் தடுக்க விசேட பிரதிநிதி : ஐ.நா.சபையில் தீர்மானம்
இலங்கை உட்பட்ட நாடுகளில் யுத்தத்தின் போது பாலியல் வன்முறைகள் ஓர் ஆயுதமாக பயன்படுத்தப்பட்டுள்ளது எனவும், இவை இடம்பெறுவதைத் தடுக்கும் முகமாக பாலியல் வல்லுறவுகள் தொடர்பிலான விசேட பிரதிநிதி ஒருவரை நியமிக்க வேண்டும் எனவும் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அமெரிக்க, ராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளிண்டனின் தலைமையில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் இந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


ஆபிரிக்காவின் ருவான்டாவில் மாத்திரம் 1990 ஆண்டு காலப்பகுதியில், ஐந்து லட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குப் பலியாகியுள்ளனர்.
சியாரோ லினோனில் 64 ஆயிரம் பெண்கள் இவ்வாறான துன்புறுத்தலுக்கு உள்ளானார்கள்.
இந்நிலையில் பெணகள் தொடர்பான இந்தப் பிரச்சினை ஆபிரிக்காவுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்படாமல், இலங்கை மற்றும் பர்மாவிலும் யுத்தத்தின் போது ஓரு ஆயுதமாகப் பாலியல் வல்லுறவு பயன்படுத்தப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் : ஜனாதிபதி

இலங்கையில் கொடிய பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட பெருமிதத்துடன் உலக சிறுவர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது :

"கடந்த மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தில் அதிகளவில் சிறுவர்களும் பெண்களுமே பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

படை வீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்புவது நமது பொறுப்பாகும்.

சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.

'வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்' என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்."

இவ்வாறு ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

விசா கோரும் நடைமுறையில் மாற்றம் : பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகராலயம்

பிரித்தானியாவுக்கு மாணவர் விசா கோரும் நடைமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கைக்கான அந்நாட்டு உயர் ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.

இதன்படி, இன்றைய தினம் முதல் மாணவர் விசா கோரி விண்ணப்பம் செய்வோர் பிரித்தானிய குடிவரவு குடியகழ்வுத் திணைக்களத்தினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய சட்ட விதிகளுக்கு அமைவான முறையில் விண்ணப்பிக்க வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விண்ணப்பம் கோருவோரது நிதி நிலைமை குறித்த விதிமுறைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

விசா கோருவதற்குக் குறைந்தபட்சம் 28 தினங்களுக்கு முன்னர் இருந்தே கணக்கு மீதியைப் பேண வேண்டுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பம் கோரும் நபர், பெற்றோர் அல்லது சட்ட ரீதியான பாதுகாவலரின் கணக்கில் போதியளவு நிதி காணப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறைந்தபட்சம் 28 தினங்களுக்கு கணக்கு மீதியை பேணாத விண்ணப்பதாரிகளுக்கு விசா வழங்கப்பட மாட்டாது என வும் அறிவிக்கப்பட்டுள்ளது.

www.ukvisas.gov.uk என்ற இணைய தளத்தின் மூலம் மேலதிக விபரங்களைக் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியா பதில் வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த்தை தாமதமின்றி விடுதலை செய்யுமாறு கோரிக்கை


வவுனியா பொது வைத்தியசாலையில் பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய வைத்திய நிபுணர் டாக்டர் உமாகாந்த் புதன்கிழமை இரவு வவுனியா இறம்பைக்குளத்தில் உள்ள அவரது வீட்டில் இருந்தபோது புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்காகக் கூட்டிச் செல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவர் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்படுவதாக வவுனியா வைத்தியசாலை பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர் கைது செய்யப்பட்டதை அரச வைத்தியர் சங்க வவுனியா கிளையின் பேச்சாளர் ஒருவர் உறுதி செய்தார்.

அத்துடன், பதில் வைத்திய நிபுணராகக் கடமையாற்றிய இவரை அவரது பதவி நிலைக்கு ஏற்ற வகையில் நடத்த வேண்டும் என்றும், மேல் படிப்புக்காக விரைவில் வெளிநாடு செல்வதற்காக இருக்கும் அவரது தொழில் முன்னேற்றத்திற்குப் பாதகம் ஏற்படாத வகையில் விசாரணைகளை விரைவில் மேற்கொண்டு அவர் மீது குற்றமின்றேல் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரச வைத்தியர் சங்கம் கோரிக்கை விடு்ப்பதாகவும் அந்தப் பேச்சாளர் தெரிவித்தார்.

வைத்திய நிபுணர் உமாகாந்த் கைது செய்யப்பட்டுள்ளமை தொடர்பாக தமது தாய்ச் சங்கத்தின் கவனத்திற்கும் தாங்கள் கொண்டு வந்திருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜாதிக ஹெல உறுமய ஆர்ப்பாட்டம்

இலங்கை விவகாரத்தில் அமெரிக்காவின் தலையீட்டிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஜாதிக ஹெல உறுமய இன்று ஆர்பாட்டம் நடத்தியது.ஆர்ப்பாட்டட்த்தில் கலந்துகொண்டோர் கோஷங்களை எழுப்பியதுடன் பதாதைகளையும் தாங்கியிருந்தனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணாநிதியால் துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது - ஜெ

முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதிலளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப் போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, இதுபோன்று “நம்புகிறோம்” என்று அறிக்கை விடுவதை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய அரசிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அதைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

மத்திய அரசை தட்டிக் கேட்டால், தமிழகத்தில் இருக்கும் தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை கழற்றி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், கேரள அரசுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதாக ஒரு வதந்தி கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பத்திரிகைகளில் பரப்பப்பட்டது.

அதாவது, இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத் திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ் நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர் காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா?.

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா?.

மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி!. தனக்கு ‘வர வேண்டியது’ வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!.

ஆய்வுக்கு பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை!.

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!.

நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி!.

அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது.

முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதி யால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நித்தியப்பிரளயம்!

நித்தை

மாழாம்பலம்

சோர்தல்

சொக்குதல்

கோடித்தூங்கல்

கிடத்தல்

அயர்தல்

அனந்தல்

ஏல்தல்

உறங்குதல்

களித்துயிலுதல்


மடிதல்

துஞ்சுதல்

தூங்குதல்

நித்திரித்தல்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates