பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் : ஜனாதிபதி

மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது :
"கடந்த மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தில் அதிகளவில் சிறுவர்களும் பெண்களுமே பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.
படை வீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்புவது நமது பொறுப்பாகும்.
சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
சிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.
'வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்' என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.
பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன.
பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்."
இவ்வாறு ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
0 Response to "பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் : ஜனாதிபதி"
แสดงความคิดเห็น