இந்திய மீனவர் மீது தாக்குதல் : கடற்படைப் பேச்சாளர் மறுப்பு
இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை என கடற்படையினர் அறிவித்துள்ளனர்.
இந்திய ஊடகங்களில் வெளியானது போன்று இலங்கைக் கடற்படையினர் மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தவில்லை எனக் கடற்படைப் பேச்சாளர் டி.கே.பி. தஸநாயக்கத் தெரிவித்துள்ளார்.
இலங்கைக் கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் திரிபுபடுத்தப்பட்ட தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக் கடற்படையினரால் 40 இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், அவர்களது உபகரணங்கள் சேததப்படுத்தப்பட்டதாகவும் 'டைம்ஸ் இந்தியா' செய்தி வெளியிட்டிருந்தது.
பிடிக்கப்பட்ட மீன் வகைகளை படையினர் மீண்டும் கடலில் எறிந்ததாகவும், ஒரு படகு முழுமையாக சேதப்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு தாக்கப்பட்ட மீனவர்கள் நீந்தி இந்தியாவை அடைந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்தக் குற்றச்சாட்டுக்கள் அடிப்படை அற்றவை எனவும், கடற்படையினருக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான செய்திகள் வெளியிடப்படுவதாகவும் கடற்படைப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "இந்திய மீனவர் மீது தாக்குதல் : கடற்படைப் பேச்சாளர் மறுப்பு"
แสดงความคิดเห็น