புலிகளால் கொல்லப்பட்ட அமரர் சு. நடேசுவின் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்!
பனை வளம் சார்ந்த சமூகத்தின் மேம்பாட்டுக்காக அயராது உழைத்த வலிகாமம் பனை தென்னைவள அபிவிருத்திக் கூட்டுறவு சங்கங்களின் கொத்தணியின் முன்னாள் ஸ்தாபகத் தலைவர் அமரர் சு. நடேசு பாசிசப் புலிகளால் கொல்லப்பட்ட தினத்தை நினைவு கூருவதை முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாகக் கருதுவதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தெரிவித்தார்.
வலிகாமம் பனை தென்னைவள கூட்டுறவுச் சங்கங்களின் கொத்தணியும் அங்கத்துவ சங்கங்களும் இணைந்து அதன் ஸ்தாபத் தலைவர் சு. நடேசு மறை;ந முன்னால் பொது முகாமையாளர் சு. சந்திரராசா ஆகியோரின் நினைவு தினத்தையும் கூட்டுறவு தினம் மற்றும் புலமைப்பரிசில் வழங்குதல் போன்ற நிகழ்வுகள் இன்று நடைபெற்றன.
இந்நிகழ்வில் தொடர்ந்தும் உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது தொழிலை மேற்கொண்டு வரும் தொழிலாளர்கள் மற்றும் சங்க உறுப்பினர்களை ஊக்குவிக்கும் வகையிலான இத்தகைய நிகழ்வுகள் பரந்தளவில் நடைபெற வேண்டுமெனத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் தமது சமூகத்தின் உண்மையான விடிவுக்காக உழைத்த பல நேர்மையான உண்மையான தலைவர்கள் ஜனநாயக விரோதிகளால் கொள்ளப்பட்டுள்ளதாகவும் அந்த வரிசையில் அமரர் நடேசுவை நினைவு கூறும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வை பெரிதும் வரவேற்பதாகவும் தெரிவித்தார்.
எமது கடந்த கால அனுபவங்களை சரியாக செரிமானம் செய்து கொள்ள வேண்டுமென்றும் வாய்ப்புகள் கிடைக்கும் போது அதனைச் சரியாக பின்னபற்ற வேண்டுமெனவும் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் எமது மக்களின் இனப்பிரச்சனைக்கான தீர்வுக்காக கடந்த காலத்தில் கிடைத்த பல சந்தர்ப்பங்களை தமிழ் தலைமைகள் உதாசீனம் செய்ததன் விளைவுதான் இன்று எமது மக்கள் எதிர்கொள்ளும் அவலங்களாகுமென்றும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் ஈபிடிபியின் தேசிய அமைப்பாளர் பசுபதி சீவரத்தினம் கொத்தணியின் தலைவர் த. சிவலிங்கம் உட்படப் பலரும் கலந்து கொண்டனர்.
0 Response to "புலிகளால் கொல்லப்பட்ட அமரர் சு. நடேசுவின் நினைவு தினத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்!"
แสดงความคิดเห็น