திருப்பதியில் ராஜபக்சே-ஏழுமலையானை தரிசித்தார்
திருப்பதி: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சே இன்று திருப்பதிக்கு விஜயம் செய்து வெங்கசடாசபதியை தரிசனம் செய்தார்.
நேபாளத்தில் புனிதப் பயணம் மேற்கொண்டிருந்த ராஜபக்சே திருப்பதிக்கும் பயணம் செய்யத் திட்டமிட்டிருந்தார். ஆனால் இந்தப் பயணம் குறித்த தகவல் படு ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில், நேற்று முன்தினம், இலங்கை பாதுகாப்பு அதிகாரிகள் சித்தூர் வந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சேஷாத்திரியுடன் ராஜபக்சேவுக்கான பாதுகாப்பு குறித்து ஆலோசனை நடத்தினர்.
இதைத் தொடர்ந்து இன்று காத்மாண்டுவில் இருந்து சிறப்பு விமானம் மூலம் ராஜபக்சே ரேணிகுண்டா வந்தார். பின்னர் கார் மூலம் அங்கிருந்து திருப்பதி கோவிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இன்று பிற்பகலில் திருப்பதி கோவிலில் வெங்கடாசலபதியை அவர் தரிசனம் செய்தார். தேவஸ்தான அதிகாரிகள் அவருக்கு சிறப்பு வரவேற்பு அளித்தனர்.
ரேணிகுண்டா விமான நிலையத்திலிருந்து கார் செல்லும் வழி நெடுகிலும் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.
சென்னையில் ஆர்ப்பாட்டம்...
இந்த நிலையில் ராஜபக்சேவின் திருப்பதி வருகையைக் கண்டித்து தமிழ் ஆர்வலர்கள் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான அலுவலகம் எதிரே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
0 Response to "திருப்பதியில் ராஜபக்சே-ஏழுமலையானை தரிசித்தார்"
แสดงความคิดเห็น