jkr

யு.என்.எச்.சி.ஆர் வதிவிடப் பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு


ஐ.நாவின் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் (யு.என்.எச்.சி.ஆர்) இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதியாகப் புதிதாக நியமிக்கப்பட்ட மைக்கல் ஜேம்ஸ் செவக் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவிடம் தனது நியமனக் கடிதத்தை நேற்று முன்தினம் கையளித்தார்.

இலங்கை அரசுடனான யு.என்.எச்.சி.ஆரின் நெருங்கிய தொடர்புகள் குறித்து புதிதாக நியமனம் பெற்ற யு.என்.எச்.சி.ஆரின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதி சுட்டிக் காட்டினார்.

இதனையடுத்து உரையாற்றிய வெளிவிவகார அமைச்சர்,மோதல்கள் முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட சில மாதங்களிலேயே இலங்கை அரசாங்கம் இடம்பெயர்ந்தவர்களை மீளக்குடியமர்த்தும் பணிகளை மேற்கொள்வதாகவும், கடந்த 27ஆம் திகதியன்று மீளக் குடியேற வேண்டியோரின் எண்ணிக்கை 188,535 ஆகக் குறைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் மீளக்குடியமர்த்தப்படுபவர்களுக்கு தேவையான உலர் உணவுப் பொருட்கள், பண உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் இடம்பெயர்ந்து முகாம்களில் உள்ள சிறுவர்களதும், மீளக்குடியமர்த்தப்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களதும் கல்வி தொடர்பில் அரசாங்கம் உதவி வருவதாகவும் வெளிவிவகார அமைச்சர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரையாற்றிய மைக்கல் ஜேம்ஸ் செவக், எதிர்கால தலைவர்களான சிறுவர்களின் கல்வி தொடர்பில் யு.என்.எச்.சி.ஆர் துரிதமாக செயற்படும் எனத்தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யு.என்.எச்.சி.ஆர் வதிவிடப் பிரதிநிதி - வெளிவிவகார அமைச்சர் சந்திப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates