பாகிஸ்தானில் இருமுறை நிலநடுக்கம் : சேத விவரம் குறித்துத் தகவல் இல்லை
கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.
இந்த பீதி அடங்குவதற்குள் இப்பகுதியில் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் பெரும்பாலான நகரங்கள் குலுங்கின.
பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர், ராவல் பிண்டி, சாக்லால், சுவாத், உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.
சுமார் 30 வினாடிகள் தொடர்ந்து பூமி குலுங்கியது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். பயந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு ஓடிவந்தனர்.
பயத்தில் உறைந்த மக்கள் தூங்காமல் வீதிகளில் வெட்ட வெளியிலேயே தங்கியிருந்தனர். நில நடுக்கம் ஏற்படுத்திய சேத விபரங்கள், மரணங்கள் குறித்த தகவல் உடனடியாகத் தெரிய வரவில்லை.
நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது. பாகிஸ்தானின் சித்ரால் நகரில் பூமிக்கு அடியில் 202 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஷாபராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கும் மக்கள் பீதி அடைந்தனர்.
காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரிலும் நள்ளிரவு 11.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
24 மணி நேரத்தில் மற்றுமொரு நில நடுக்கம் இன்று நண்பகல் 12.45 மணியளவில் உணரப்பட்டது. எனினும் இது குறித்த சேத விபரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
0 Response to "பாகிஸ்தானில் இருமுறை நிலநடுக்கம் : சேத விவரம் குறித்துத் தகவல் இல்லை"
แสดงความคิดเห็น