'சண்டேலீடர்' ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்:விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு
'சண்டேலீடர்' செய்திப் பத்திரிகையின் இரண்டு ஊடகவியலாளர்களுக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உத்தரவிட்டுள்ளார்.
'சண்டே லீடர்' பத்திரிகையின் இரண்டு சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள இந்த அச்சுறுத்தல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நியூயோர்க்கைத் தளமாகக் கொண்ட ஊடகவியலாளர்களைப் பாதுகாக்கும் அமைப்பு, 'சண்டேலீடரி'ன் பிரதம ஆசிரியர் பிரெடெரிக்கா ஜென்ஸ் மற்றும் செய்தி ஆசிரியர் முனாஸ் முஸ்தபா ஆகியோருக்கு ஏற்பட்டுள்ள மரண அச்சுறுத்தல் தொடர்பாக உரிய விசாரணைகள் நடத்தப்படவேண்டும் எனக் கோரியுள்ளது.
'சண்டேலீடரி'ன் நிர்வாக ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க இந்த வருட ஆரம்பத்தில் அவரது அலுவலகத்திற்கு அருகில் சுட்டுக் கொல்லப்பட்டு விசாரணைகள் முடிவடையாத நிலையிலேயே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமையை குறித்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
ஜென்ஸுக்கும் முஸ்தபாவுக்கும் கடந்த வாரத்தில் பல அச்சுறுத்தல் கடிதங்கள் கிடைத்துள்ளன. அக்கடிதங்களில், "எழுதுவதை நிறுத்துமாறு" அவர்கள் எச்சரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "'சண்டேலீடர்' ஊடகவியலாளர்களுக்கு மரண அச்சுறுத்தல்:விசாரணை நடத்த ஜனாதிபதி உத்தரவு"
แสดงความคิดเห็น