வேலணையில் சிறுவர் மற்றும் முதியோர் தின விழா!

இங்கு உரைநிகழ்த்திய அமைச்சர் அவர்கள் கடந்த கால அனுபவங்களை கொண்டிருக்கின்ற முதியவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் எமது சமுதாயத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம் என்றும் அதே நேரம் சிறுவர்களின் கருத்துகளுக்கு செவிமடுத்து அவர்களது எதிர்கால வாழ்க்கையை செப்பனிட வேண்டிய பொறுப்பு எம்மிடம் உள்ளது என்றும் தெரிவித்தார்.
கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களை எமது மக்கள் பயன்படுத்துவதற்கு தவறான அரசியல் வழிகாட்டல்கள் தடையாக இருந்து விட்டதை இங்கு சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இனிமேல் அவ்வாறான நிலை தோன்றுவதற்கு இடமில்லை என்பதால் கிடைக்கும் அனைத்து சந்தர்ப்பத்தை எமது மக்கள் சரிவரப் பயன்படுத்திக் கொள்ள முன்வர வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்.
இவ்வைபவத்தின் போது புலமைப்பரிசில்களில் வெற்றி பெற்ற 7 மாணவர்களுக்கும் வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வந்த 25 மாணவர்களுக்கும் அங்கவீனமான 3 பேருக்கும் துவிச்சக்கர வண்டிகள் வழங்கப்பட்டதுடன் 11 அங்கவீனமான குடும்பங்களுக்கு சுயதொழில் முயற்சிக்கென தலா 50 ஆயிரம் ரூபா நிதி உதவியும் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.













0 Response to "வேலணையில் சிறுவர் மற்றும் முதியோர் தின விழா!"
แสดงความคิดเห็น