jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தியா แสดงบทความทั้งหมด

மஹிந்தவின் வெற்றி குறித்து இந்தியா அகமகிழ்ந்துள்ளது


ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தேர்தல் வெற்றிக்குறித்து இந்திய அரசாங்கம் அகமகிழ்ந்துள்ளதாக புதுடில்லி தகவல்கள் தெரிவிக்கின்றன.
யார் தேர்தலில் வெற்றிபெற்றாலும் அவருடன் இணைந்து செயற்படப்போவதாக இந்தியா அறிக்கையை வெளியிட்டாலும், அமைதியான முறையில் அந்த நாடு மஹிந்த ராஜபக்சவுக்கே தமது ஆதரவை வழங்கி வந்தது.

இந்தியா, இராணுவத்துடன் அல்லது முன்னாள் இராணுவ கட்டமைப்பை விரும்பவில்லை என அடிக்கடி கூறிவந்துள்ளது.

இந்தநிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இனப்பிரச்சினை தீர்வுக்கு உரியமுனைப்புகளை மேற்கொள்வார் எனவும், அவர் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளக்கூடிய தீர்வுப்பொதி ஒன்றை சமர்ப்பிப்பார் என இந்தியா எதிர்பார்க்கிறது.

இதேவேளை பொதுத்தேர்தலின் பின்னர் தாம் தீர்வு குறித்து அறிவிக்கவுள்ளதாகவும், தமிழ் தலைமைகளுடன் கலந்துரையாடப்படும் எனவும், எனினும் இனப்பிரச்சினைத் தீர்வுக்கு பெரும்பான்மை மக்களின் அங்கீகாரம் அவசியமானது எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே இந்தியா எதிர்பார்த்துள்ள வடக்கு, கிழக்கு மாகாண இணைப்பு ஒருபோதும் சாத்தியமில்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச திட்டவட்டமாக அறிவித்திருப்பது இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இராணுவப்புரட்சி தொடர்பாக சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டை இந்தியா மறுப்பு


இலங்கையில், இராணுவப்புரட்சி ஒன்று இடம்பெறலாம் என்ற எச்சரிக்கையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டதாக வெளியான தகவலை இந்தியா மறுத்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சசி தருர் இந்த மறுப்பை வெளியிட்டுள்ளார்.

இலங்கையில் கடந்த ஒக்டோபர் நடுப்பகுதியில் இராணுவப்புரட்சி ஒன்று மேற்கொள்ளப்படலாம் என்ற அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளின்படி இந்திய படையினர் விழிப்புடன் வைக்கப்பட்டனர் என கூட்டுப்படை தலைமையதிகாரி சரத் பொன்சேகா தமது பதவி ஓய்வு தொடர்பில் ஜனாதிபதிக்கு அனுப்பிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார்.

எனினும் இவ்வாறான வேண்டுகோளின் அடிப்படையில் இந்திய படையினர் ஆயத்தநிலையில் வைக்கப்பட்டனர் என்று சரத் பொன்சேகா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவலை இந்திய அமைச்சர் மறுத்துள்ளார். இது அடிப்படையற்ற செய்தி எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கு வாடகைக்குக் கொடுத்த யுத்தக் கப்பல்களை இந்தியா திரும்பக் கோருகிறது


இந்தியா வருடாந்தம் புதுப்பிக்கும் ஒப்பந்த அடிப்படையில் இலங்கை கடற்படைக்கு 2007ஆம் ஆண்டில் வழங்கிய இரண்டு யுத்தக் கப்பல்களை தற்போது திரும்பப் பெறுவது குறித்து இந்திய கரையோரக் காவல்படையினர் நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்று இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

இலங்கை, தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்த நடவடிக்கைக்குத் தயார் செய்து கொண்டிருந்த போது ஹெலிகொப்டர்கள், துரிதமாக சுடும் இயந்திரத் துப்பாக்கிகள் ஆகியன பொருத்தப்பட்ட 'வரஹா', 'விக்ரஹ' என்ற இரண்டு கரையோர காவல் கப்பல்களை இலங்கைக்கு வாடகைக்கு இந்தியா வழங்கியிருந்தது.

ஆனால், தற்போது இந்திய கரையோர காவல் படையினர் மேற்படி யுத்தக் கப்பல்கள் இரண்டையும் திருப்பிக் கேட்கவே இலங்கை கடற்படையினர்,'வரஹா' கப்பலுக்கு சாகர என்றும் 'விக்ரஹ' கப்பலுக்கு 'சயுரல' என்றும் பெயர் மாற்றம் செய்த நிலையில் என்ன பதிலளிப்பது என்ற சங்கடமான நிலையில் உள்ளனர்.

இரண்டு கப்பல்களையும் தந்து உதவியமை குறித்து இலங்கை இந்தியாவுக்கு நன்றிக் கடன்பட்டுள்ளது என்று இலங்கை கடற்படை பேச்சாளர் கப்டன் அதுல சேனாரத் தொலைபேசி மூலம் இந்தியாவுடன் தொடர்பு கொண்டு தெரிவித்துள்ளார்.

கரையோர காவற்படையின் கோரிக்கைக்கு இணங்குவதற்காக இலங்கையுடன் ராஜதந்திர தொடர்பை ஒதுக்குவது இந்திய அரசாங்கத்திற்கு சிரமமாக இருக்கலாம்.

அதேவேளை, இலங்கையின் இராணுவ தேவைகளை நிறைவேற்றிவரும் சீனா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளுக்கு விட்டுக் கொடுக்கவும் அது விரும்பவில்லை.

தம்மை இனங்காண்பிக்க விரும்பாத இலங்கையின் சிரேஷ்ட பாதுகாப்பு அமைச்சு அதிகாரி ஒருவர், தற்போது விடுதலைப் புலிகள் மடிந்து போன வேளையில் இலங்கை கடற்படைக்கு இக்கப்பல்கள் தேவைப்பட மாட்டா என்று இந்திய கரையோர காவற்படையினர் கருதியிருக்கலாம் என்று கூறினார்.

இலங்கைக்கு தந்த கப்பல்களுக்கு பதிலாக இந்திய அரசாங்கம் கரையோர காவற்படைக்கு புதிய கப்பல்களை வழங்கவும்கூடும் என்று அவர் தெரிவித்தார். மும்பாய் பயங்கரவாத தாக்குதல்களை அடுத்து கரையோர காவற் படைக்கு இந்திய அரசாங்கம் மேலும் 55 யுத்தக் கப்பல்களையும் 45 விமானங்களையும் கொள்வனவு செய்ய அங்கீகாரம் அளித்துள்ளது.

இத்தகைய சொத்துக்களை ஒரேநாளில் பெற்று பொருத்திவிட முடியாது. பல்வேறு கப்பல் கம்பனிகளுக்கு கொள்வனவு கட்டளைகள் அனுப்பப்பட்டுள்ளன.

ஆனால் இவற்றை விநியோகிக்க இரண்டு வருடங்களாயினும் எடுக்கும்.

இந்த நிலையில் தங்களுக்கு கப்பல் பற்றாக்குறை இருந்து வருகிறது என்று கரையோர காவற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்திய கரையிலிருந்து 12 மைல் தூரம் கடற்பரப்புக்குள் பாதுகாப்புக்கு கரையோர காவற் படையே பொறுப்பாகும். இந்திய கடற்படையின் மேற்பார்வையில் கரையோர காவற்படையினர் செயற்பட்டு வருகின்றனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

24 ஓட்டங்களால் இந்திய அணியை வென்றது அவுஸ்திரேலியா


மொஹாலி ஒரு நாள் போட்டியில் இந்தியா 24 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைச் சந்தித்தது. இதன் மூலம் இடத்திற்கு முன்னேறும் வாய்ப்பை இழந்தது இந்தியா அணி.இந்தியா, அவுஸ்திரேலியா இடையிலான 4வது ஒரு நாள் போட்டி மொஹாலியில் இடம்பெற்றது.நாணய சுழற்சியில் வென்றி பெற்ற இந்திய அணி தலைவர் டோணி, முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தார். இதையடுத்து விளையாடிய அவுஸ்திரேலிய அணி 250 ஓட்டங்களை பெற்றது.

வாட்சன் 49 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவுஸ்திரேலிய அணி தலைவர் பான்டிங் 52 ஓட்டங்களில் வீழ்ந்தார். ஒயிட் 62 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். மைக் ஹஸ்ஸி சிறப்பாக விளையாடி துரிதமாக 40 ஓட்டங்களை பெற்றுக் கொடுத்தார். இறுதியில், 49.2 ஓவர்களிலேயே ஆஸ்திரேலியா அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சரியாக 250 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தது.கேப்டன் பான்டிங், ஒயிட், மனோ, போலிங்கர் ஆகியோர் ரன் அவுட் ஆனார்கள். இல்லாவிட்டால் அவுஸ்திரேலியா பெரிய ஸ்கோரை எட்டியிருக்கும்..

இந்தியத் தரப்பில் ஆஷிஷ் நெஹ்ரா 3 விக்கெட்களை வீழ்த்தினார். ஹர்பஜன் 2 விக்கெட்களையும், யுவராஜ் சிங் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர் களம் இறங்கிய இந்தியா எளிதில் இலக்கை எட்டி விடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்தியாவின் வழக்கமான மோசமான துடுப்பாட்டம் வெளிப்பட்டது..

ஷேவாக் அதிரடியாக விளையாடி 30 பெற்றார் .கொடுத்து விட்டு வேகமாகப் போய் விட்டார். டெண்டுல்கர் வழக்கம் போல நிதானமாக ஆடி 40 ஓட்டங்களை பெற்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டு 5 மணிநேரத்தின் பின் மீட்பு


ஒரிசா மாநிலம் புவனேஸ்வரில் இருந்து நேற்றுக் காலை 9.30 மணியளவில் ராஜதானி எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று டில்லி நோக்கிப் புறப்பட்டது. பிற்பகல் 3.30 மணி அளவில் ஜார்கண்ட் - மேற்கு வங்காள எல்லையில் உள்ள மேற்கு மிட்னாபுர் மாவட்டத்துக்கு அந்த ரயில் வந்த போது வழிமறிக்கப்பட்டது.

ஜார்கிராம் என்ற ரயில் நிலையத்தைக் கடந்து பன்ஸ்தாலா ரெயில் நிலையத்தை நோக்கி அந்த ரயில் சென்றது. அந்த பகுதி முழுவதும் அடர்ந்த காடுகளைக் கொண்டதாகும்.

ஜார்கிராமில் இருந்து 10 கி.மீ. தொலைவில் சென்றபோது தண்டவாளத்தின் குறுக்கே மரங்களும், மரக்கிளைகளும் போடப்பட்டு இருப்பதைப் பார்த்த டிரைவர் ஆனந்த ராவ் உடனே, ரயிலை நிறுத்தினார். அதைத் தொடர்ந்து, அருகில் உள்ள புதர்களில் மறைந்திருந்த சுமார் 300-க்கும் மேற்பட்ட மாவோயிஸ்ட்கள் ஓடி வந்து ரயிலைச் சூழ்ந்து கொண்டனர்.

மேலும், ரயில் சாரதி ஆனந்த ராவ் மற்றும் உதவி சாரதி கே.ஜே.ராவ் இருவரையும் மாவோயிஸ்ட்டுகள் கடத்திச் சென்றனர். அதே நேரத்தில், ரயிலைச் சுற்றிலும் மற்றவர்கள் நின்று கொண்டனர். எனவே ரயிலும், அதில் இருந்த சுமார் ஆயிரம் பயணிகளும் சிறைப் பிடிக்கப்பட்டனர்.

பொலிசாருக்குத் தகவல்

இது குறித்து, ரயில்வே உயர் அதிகாரிகளுக்கும், பொலிசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாகப் பொலிசார் மற்றும் துணை இராணுவப்படையினர் பன்ஸ்தாலா காட்டுக்கு விரைந்தனர். அப்போது நடந்த தேடுதல் வேட்டையில், தண்டவாளத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் கண்ணி வெடிகள் புதைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டன.

இதற்கிடையே, ரயில் சாரதிகள் கடத்தல் குறித்து, 'பொலிஸ் அடக்குமுறைக்கு எதிரான மக்கள் அமைப்பி'ன் புதிய தலைவர் சந்தோஷ் பத்ரா சில நிபந்தனைகளை விதித்தார்.

"ரயில் சாரதிகளை நாங்கள் கடத்தவில்லை. `பந்த்' அழைப்பை மீறி ரயிலை ஓட்டி வந்ததால், எங்களுடன் அழைத்து வைத்திருக்கிறோம். அவர்களுக்கோ, ரயில் பயணிகளுக்கோ நாங்கள் எதிரானவர்கள் அல்லர். விரைவில் விடுதலை செய்து விடுவோம். எங்களுடைய தலைவர் மகோதாவை விடுவிப்பது உட்பட 22 அம்ச கோரிக்கைகள் உள்ளன.

மேற்கு வங்காள மாநில அரசு அதிகாரிகள் அல்லது ரயில்வே மந்திரி மம்தா பானர்ஜி இங்கு வந்து எங்களுடைய மக்களின் நிலைமையைப் பார்க்க வேண்டும். அவ்வாறு வந்தால் ரயில் சாரதிகளை விடுதலை செய்து விடுவோம்."

இவ்வாறு சந்தோஷ் தெரிவித்தார்.

அதே நேரத்தில், ரயில் டிரைவர்கள் கடத்தப்பட்ட சம்பவத்துக்கும், தங்களுக்கும் எந்த தொடர்பும் கிடையாது என்று மாவோயிஸ்ட்டுகள் அறிவித்தனர்.

அதே நேரத்தில், மேற்கு வங்காள முதல்-மந்திரி புத்ததேவ் பட்டாச்சார்யாவை உள்துறை மந்திரி ப.சிதம்பரம் தொடர்பு கொண்டு ரயில் கடத்தல் பற்றிய தகவல்களை கேட்டார். மாநில உள்துறை செயலாளர் மற்றும் பொலிஸ் டி.ஜி.பி. ஆகியோரை மத்திய உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தொடர்பு கொண்டு சம்பவம் குறித்து விசாரித்தார்.

மாவோயிஸ்ட்டுகளின் கோரிக்கை குறித்து கொல்கத்தாவில் பேட்டியளித்த முதல்-மந்திரி புத்ததேவ்,

"மாவோயிஸ்ட் ஆதரவுடன் செயல்படும் மக்கள் அமைப்புத் தலைவர் மகோதாவை விடுதலை செய்யும் பேச்சுக்கே இடமில்லை" என்றார்.

இராணுவத்துக்கு உத்தரவு

இந்நிலையில், ரயில் சிறைப்பிடிக்கப்பட்டிருக்கும் இடத்துக்கு செல்லுமாறு மத்திய துணை இராணுவப் படைகளுக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. மேற்கு வங்காள மாநிலம் மேற்கு மிட்னாபுர் மாவட்டத்தில் முகாமிட்டுள்ள அத்தனை படைகளும் தேடுதல் வேட்டைக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டன.

மத்திய அரசின் உத்தரவைத் தொடர்ந்து மத்திய ரிசர்வ் பொலிஸ் உள்ளிட்ட துணை இராணுவப் படையைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். மாவோயிஸ்ட்டுகளுடன் துப்பாக்கிச் சமர் நடந்தது.

எனினும், கூடுதலாக துணை இராணுவப்படையினர் வருவதை பார்த்ததும், இரவு 7.00 மணியளவில் ரயில் சாரதிகளை விடுதலை செய்துவிட்டு மாவோயிஸ்ட்டுகள் தப்பி ஓடி விட்டனர்.

சுமார் 5 மணி நேரமாக நீடித்த ரயில் கடத்தல் முடிவுக்கு வந்தது. பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை வந்துள்ள இந்திய இராணுவக் குழு - கோத்தபாயா சந்திப்பு


இலங்கை வந்துள்ள உயர் கட்டளை கற்கைநெறியை பயிலும் இந்திய இராணுவ அதிகாரிகள் குழு பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.

கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இந்தச் சந்திப்பு இடம்பெற்றது.

பிரிகேடியர் மொனி சன்டி தலைமையில் 14 அதிகாரிகள் அடங்கிய இந்தக் குழுவில் இந்தியாவின் இராணுவ மற்றும் விமானப்படை உயர் அதிகாரிகள் அடங்குகின்றனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய பெருங்கடலில் சிங்கப்பூர் கப்பல் கடத்தல்


இந்தியப் பெருங்கடலில், ஏடன் வளைகுடா அருகே சென்ற சிங்கப்பூர் கப்பலை, சோமாலிய கடல்கொள்ளையர்கள் கடத்திச் சென்றனர். இந்த கப்பலில் இருந்த இரண்டு இந்தியர்களும் கடத்தப்பட்டுள்ளனர்.

சோமாலியா நாட்டில் நிரந்தர அரசு ஏதும் இல்லை. வன்முறையாளர்கள் ஒவ்வொரு குழுவாக செயல்பட்டு ஒவ்வொரு பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டுள்ளனர். இந்த வன்முறையாளர்களில் சிலர் கடல் கொள்ளையர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏடன் வளைகுடா பகுதியில் செல்லும் சர்வதேச கப்பல்களைத் துப்பாக்கி முனையில் நிறுத்தி கடத்திச் செல்வதும், கணிசமான பிணைத் தொகையைப் பெற்றுக் கொண்டு கப்பலை விடுவிப்பதும் வாடிக்கையாக உள்ளது.

இந்த ஆண்டில் மட்டும், நூற்றுக்கும் அதிகமான கப்பல்களை சோமாலிய கடல் கொள்ளையர்கள் கடத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ஆம் திகதி 'எம்.வி.கோட்டா வாஜர்' என்ற சிங்கப்பூர் கப்பல், செஷல்ஸ் தீவுக்கு அருகே சென்ற போது, சோமாலிய கடல் கொள்ளையர்களால் கடத்தப்பட்டது.

இந்தக் கப்பலில் இரண்டு இந்தியர்களுடன் இலங்கை, இந்தோனேஷியா, பாகிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஊழியர்களும் இருந்தனர். கப்பலையும், கப்பலில் இருக்கும் ஊழியர்களையும் மீட்க, கப்பல் நிறுவனம் சிங்கப்பூர் அரசின் உதவியை கோரியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

170 இலங்கை மீனவர் இந்தியச் சிறைகளில்!


இலங்கை மீனவர்கள்170 பேர் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.

இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறுகிறது.
இவர்கள் அந்தமான் தீவு, விசாகப்பட்டினம்,சென்னை ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான், விசாகப்பட்டினம் சிறைகளில் மாத்திரம் 100க்கும் அதிகமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறுகிறது. இவர்களை வெகு விரைவில் நாட்டுக்கு அழைத்துவர முடியுமென நம்பப்படுகிறது.

இந்தியச் சிறைகளிலுள்ள சகல இலங்கை மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பாக இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் கூறுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது நடவடிக்கை


அவதூறாக பேசிய நடிகர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக பத்திரிகையாளர் சங்கங்கள் கொடுத்த புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளது. நிபுணர்களின் கருத்து கிடைத் தவுடன் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் கூறினார்.

விபசார வழக்கில் நடிகை புவனேஸ்வரியை விபசார தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர். இது தொடர்பாக அவதூறு செய்தி வெளியிட்டதாக நடிகர் சங்க புகாரைத் தொடர்ந்து, “தினமலர்’ செய்தி ஆசிரியர் லெனின் கடந்த 7ம் தேதி கைது செய்யப்பட்டார். பின்பு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் அவதூறாக பேசிய நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, “சிடி’ ஆதாரங்களுடன் சென்னை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் பத்திரிகையாளர் சங்கங்கள் சார்பில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகார் மனு மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது என, போலீஸ் கமிஷனர் ராஜேந்திரனிடம் கேட்டபோது, “புகார் மனு, சட்ட நிபுணர்களின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள் ளது. சட்ட நிபுணர்களின் கருத்து கிடைத்தவுடன் நடிகர், நடிகைகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.

அவர் மேலும் கூறியதாவது: விபத்தில்லாத தீபாவளி கொண்டாடுவதற்காக சென்னை நகரில் 466 தற்காலிக பட்டாசு கடைகள், வடசென்னையில் 19 நிரந்தர பட்டாசு கடைகளுக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள் ளது. விபத்து நடந்து ஒரு மணி நேரம் வரை கோல்டன் ஹவர்ஸ் என்பர். அந்த சமயங்களில் 108 மற்றும் போலீஸ் கட்டுப்பாட்டறைக்கு பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தொடர்பு கொள்ளலாம். பட்டாசுகளை வெடிப்பவர்கள் ஐகோர்ட் மற்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி, இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வெடிப்பதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு போலீஸ் கமிஷனர் கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழுவை அனுப்ப இந்திய மத்திய அரசு முடிவு

இலங்கை முகாம்களில் அவலப்படும் தமிழர்களின் நிலையை அறிய, இந்த மாத இறுதிக்குள் அந்த நாட்டுக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்பி வைக்க இந்திய மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

இலங்கை அகதி முகாம்களில் வசிக்கும் தமிழர்களுக்கு இதுவரை இந்திய அரசு மற்றும் தமிழக அரசு சார்பாக அனுப்பி வைக்கப்பட்ட நிவாரண பொருட்கள் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு அளிக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக தமிழக அரசால் முதலில் அனுப்பப்பட்ட 80 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு மற்றும் துணிவகைககளும், 2 வது முறையாக 2 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்களுக்கு தேவையான உணவு, துணிவகைகள் மற்றும் பாத்திரங்களும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் மூலம் அளிக்கப்பட்டுள்ளன.

மேலும் இந்திய அரசின் சார்பாக 2 முறை தேவையான மருந்துகளும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. விரைவில் போரில் ஊனமுற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையிலும் செயற்கை கை மற்றும் கால்களை பொருத்தும் வகையில் பிரபல ஜெய்ப்பூர் செயற்கை கை, கால் தயாரிக்கும் நிறுவனத்தின் மருத்துவ குழுவை மத்திய அரசு அனுப்புகிறது. இந்த மருத்துவ குழு சுமார் 7 ஆயிரம் பேருக்கு செயற்கை கால் மற்றும் கைகளை பொருத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பருவமழை தொடங்குவதற்கு முன்பு அகதி முகாம்களில் இருப்பவர்கள் தங்கள் சொந்த இடங்களுக்கு குடிபெயரும் வகையில் அவர்களது இல்லங்களை சரி செய்யவும், தேவையாகும் பட்சத்தில் புதிய வீடுகள் நிர்மாணிக்கத் தேவையான சுமார் 2,600 மெட்ரிக் தொன் வீடு கட்டும் பொருட்களை இந்திய அரசு ஏற்கனவே அனுப்பி வைத்துள்ளது.

இதேபோல் மேலும் கூடுதலாக 2,600 மெட்ரிக் தொன் வீடு கட்டும் பொருட்களை அனுப்ப அனைத்து நடவடிக்கைகளையும் இந்திய அரசு மேற்கொண்டுள்ளது.

கண்ணி வெடிகளை அகற்றும் பணியில் இந்தியாவின் சார்பாக சர்வத்ரா மற்றும் ஹாரிசன் என்ற அமைப்புகளை இந்திய அரசு சார்பாக ஈடுபடுத்தியுள்ளது.

இந்த குழுக்களை கடந்த ஜுலை மாதத்தில் இந்திய அரசு இலங்கைக்கு அனுப்பி வைத்தது. மேலும் 3 குழுக்களை விரைவில் அனுப்பவுள்ளது.

குழந்தைகளின் கல்விக்கு தேவையான கணினிகளையும் இந்திய அரசு வழங்க முன்வந்துள்ளது. போரினால் கணவர்களை இழந்த இலங்கை தமிழ் பெண்களுக்கு தேவையான உதவிகளையும், மேலும் அவர்கள் சுயமாக தங்களது வாழ்க்கையை நடத்த அனைத்து உதவிகளையும் சேவா என்ற அமைப்பின் மூலமாக வழங்க முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இலங்கை முகாம்களில் வசிக்கும் தமிழர்களின் உண்மை நிலைமையை கண்டறியும் வகையில் இந்திய அரசு இந்த மாத இறுதிக்குள் அரசியல் கட்சி உறுப்பினர்களை கொண்ட ஒரு குழுவை அனுப்ப முடிவு செய்துள்ளது.

இந்த குழுவில் யார், யார் இடம்பெறுவார்கள் என்பது குறித்து விரைவில் அதிகாரப்பூர்வமான அறிக்கை வெளிவரவுள்ளது. இந்த குழுவில் இந்திய அரசு அதிகாரிகள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள்.

இந்திய அரசுக்கும், இலங்கை அரசுக்கும் இடையே 1974 மற்றும் 1976 ம் ஆண்டுகளில் ஏற்பட்ட உடன்படிக்கையின் அடிப்படையில் கச்சதீவு பகுதிகளில் இந்திய மீனவர்கள் மீன்பிடிக்க உரிமை இல்லை. இந்திய அரசை பொறுத்தவரை இந்த பிரச்சினை முடிந்துபோன பிரச்சினை. திரும்ப இப்பிரச்சினையில் இந்திய அரசு தலையிடாது.

இந்தியாவில் வசிக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பது குறித்து உள்துறை அமைச்சகம்தான் முடிவு எடுக்க வேண்டும். இப்பிரச்சினையில் இந்திய வெளியுறவு அமைச்சகத்துக்கு எந்த பங்கும் கிடையாது.

மேற்கண்ட தகவல்களை மத்திய வெளியுறவு அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

இலங்கைக்கு தமிழக அனைத்துக்கட்சி குழு 10-ந் தேதி பயணம்

தமிழக முதலமைச்சர் கருணாநிதியின் கோரிக்கையை ஏற்று, இலங்கைக்கு அனைத்து கட்சி குழுவை அனுப்ப மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

துணை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஒரு குழுவை இலங்கைக்கு அனுப்புவது என முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

வருகிற 10-ந் தேதி (சனிக்கிழமை) அன்று அந்த குழு, இலங்கை செல்கிறது. இந்தியாவில் இருந்து இலங்கைக்கு அனைத்துக் கட்சி குழு செல்வது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு, நாளை வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒரு இலட்சம் ரூபாவில் ஒரு கார்

உலகத்திலே பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய இந்திய நிறுவனமாகிய டாடா நிறுவனத்தின் ரூ.1 லட்சம் காராகிய "டாடா நானோவை" டாடா நிறுவன அறிமுகப்படுத்தப்பட்டது.இந்திய தொழில் துறையின் முன்னணி நிறுவனமான டாடா மோட்டார்ஸ் உலகத்திலேயே மலிவு விலை காரை அறிமுகப்படுத்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.இதை அறிமுகப்படுத்தி ரத்தன் டாடா பேசுகையில்இ நான்கு வருடங்களுக்கு முன்பு மலிவு விலை கார் தயாரிப்பு திட்டத்தில் இறங்கினோம். அப்போது ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்துவோம் என்று உறுதி மொழி அளித்தோம். கடந்த நான்கு வருடங்களில் கார் தயாரிக்க தேவையான பல பொருட்களின் விலை அதிகரித்து உள்ளது. ஆனால் நாங்கள் முன்பு கூறிய உறுதி மொழியின் படி ரூ.1 லட்சத்தில் காரை அறிமுகப்படுத்தி உள்ளோம் என்று கூறினார். இக்கார் செப்டம்பர் மாதமளவில் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன் விற்பனை விலை ரூ.1 லட்சம; (2500 அமெரிக்டொலர் அல்லது 1277 ஸ்ரேலங் பவுண்ஸ்) இந்திய ரூபா என்பது இங்கு குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

டெல்லியை பிடிக்க 2 நாள் போதும் - சீனாவின் மிரட்டல் இமெயில்

டெல்லி: டெல்லியை கைப்பற்ற தங்களுக்கு இரண்டு நாங்கள் தான் ஆகும் என சீன வெப்சைட் ஒன்று தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் இந்திய சுற்றுலா நிறுவனங்களுக்கும் இமெயிலை அனுப்பியுள்ளது அந்த தளம்.

சீனா கடந்த 1ம் தேதி தனது 60வது தேசிய தினத்தை கொண்டாடியது. அப்போது தனது ராணுவ பலத்தையும், தங்களது வளர்ச்சியையும் உலகிற்கு காட்டியது.

ஆனால், அதே நேரத்தில் இந்திய மாநிலமான அருணாச்சல பிரதேசம் தங்களுக்கு சொந்தமானது என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதனால் அந்த மாநிலத்தை சேர்ந்தவர்களுக்கு விசா கொடுப்பதில்லை. மேலும், ஆசிய வளர்ச்சி வங்கி மற்றும் உலக வங்கிகள் அருணாசல பிரதேசத்துக்கு நிதி உதவி செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

மேலும், இந்தியாவுடனான எல்லைக்கோடான மெக் மோகன் கோட்டை தாண்டி பல முறை அத்துமீறல் செய்து வருகிறது.

இதையடுத்து தற்போது இந்தியா, சீனா எல்லை பகுதி பதற்றம் நிறைந்தவையாக மாறியுள்ளது. இந்நிலையில் தற்போது அருணாச்சல பிரேதசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்களுக்கு சில மிரட்டல் இமெயில் வந்துள்ளது. அதில் சில வரைபடங்கள் இணைக்கப்பட்டுள்ளது.

அதில் ஒன்றில் அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. மற்றொன்றில் டெல்லி மீது ஒரு வட்டம் போடப்பட்டுள்ளது. அதன் அருகே இந்த இடத்தை சீன ராணுவம் பிடிக்க இரண்டு நாட்கள் தான் தேவைப்படும் என கூறப்பட்டுள்ளது.

இவை இரண்டும் ஒரு சீன இணையதளத்தில் இருந்து தான் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து ஹிமாலயன் ஹாலிடேஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் டேரிங் வாங்கே கூறுகையில்,

அருணாச்சல பிரதேசத்தில் இருக்கும் சுற்றுலா நிறுவனங்கள் அனைத்துக்கும் இது போன்ற மிரட்டல் இமெயில் வருகிறது. எங்களுக்கு சில இமெயில்கள் வந்துள்ளது. இது அருணாச்சல பிரதேசம் சீனாவின் ஒரு பகுதி என குறிப்பிடப்பட்டுள்ளது. இது எங்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

இந்த விஷயத்தை மத்திய அரசு சாதாரணமாக எடுத்து கொள்ள கூடாது. இதன்மூலம் அருணாச்சலம் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை உறுதியாக தெரிவிக்க வேண்டும். அங்கு கூடுதல் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றார்.

Tags: war, delhi, pla, email threat, india, arunchala pradesh, போர், டெல்லியை பிடி, சீன ராணுவம், இமெயில் மிரட்டல், இந்தியா, அருணாச்சல பிரதேசம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்த இந்தியா!

india-srilankaஇந்தியாவின் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று பிற்பகல் தாக்கப்பட்டதற்கு இந்தியா அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்துள்ளது.
“இராஜதந்திர அலுவலகத்திற்கு எதிராக நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான இந்த வன்முறை குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம்” என இந்திய வெளிவிவகார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

“சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புக்கள் உடனடியான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சு அறிக்கை தெரிவிக்கிறது.

சிறிலங்கா தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 நிமிடமளவில் கோபம் மிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்றால் தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தின் சொத்துக்கள் சிலவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா தூதரகம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

“நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கும் காவல்துறையினருக்கும் நாம் எடுத்துச் சென்றோம்” என்றார் எஸ்.குணரத்ன. தூதரகத்தில் முதல் செயலராகக் கடமையாற்றுகிறார் இவர்.

இந்தத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த 10 முதல் 15 பூச்சட்டிகள் சேதமடைந்துள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“பிற்பகலில், சுமார் 40 முதல் 50 பேர் வரையிலானோர் சிறிலங்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பார்ப்பதற்குத் தமிழர்கள் போன்று இருந்தனர். அவர்கள் தமது கைகளில் சிறிலங்கா அரசைத் தாக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கி இருந்தனர்.

இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்று வட்டாரத்தில் பெரும் கூட்டம் இருக்கவில்லை. அவர்கள் பூச்சாடிகள் பலவற்றை சேதப்படுத்தியதுடன் முழக்கங்களையும் எழுப்பினர்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைப்பதில் ஒருவாறு வெற்றி கண்டனர்.

யாரும் காயமடையவில்லை. எல்லாமே இரண்டு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர் அவர்கள் தப்பி விட்டனர். ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் தமிழர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பவர்கள். அவர்கள் எல்லா ஏற்பாடோடும்தான் வந்துள்ளார்கள். ஊடகவியலாளர்களை மட்டுமே தம்மோடு அழைத்து வந்துள்ளனர்.

தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கியவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக, செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து காணொலிகளை நாம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தூதரகத்தின் முதல் செயலாளர் எஸ்.குணரத்ன மேலும் தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தியாவில் 30 கோடி பேர் இறப்பர்


இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத சண்டை போர் நிகழ்ந்திருந்தால், பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக அழிந்திருக்கும். அதே நேரத்தில், 50 கோடி இந்தியர்கள் இந்த சண்டையில் பலியாகி இருப்பர்’ என, அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் ஆட்சி காலம் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன். 1993 முதல் 2001 வரை எட்டு ஆண்டு காலம், இவர் அதிபராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, 1999ல் கார்கில் போர் சமயத்தில் அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது.அப்போது, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சராக இருந்தவர் ஸ்டிரோப் டால்போட். இவர் கூறிய தகவலின் அடிப்படையில், பிரபல எழுத்தாளர் டைலர் பிராஞ்ச் என்பவர், “தி கிளின்டன் டேப்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இதில் கிளின்டன் ஆட்சி காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள், குறிப்பாக, இந்தியா - பாக்., உறவு குறித்த விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை கிளின்டன் ஆட்சி பற்றி எழுதப்படாத தகவல்கள் என்பதால், நேற்று இப்புத்தகம் விற்பனைக்கு வந்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த புத்தகத்தில் கிளின்டன் கூறிய தகவலாக எழுதப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் நடந்தால், பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும். அதே நேரத்தில் 30 கோடியில் இருந்து 50 கோடி இந்தியர்களும் இந்த சண்டையில் பலியாகி விடுவர்.இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையால், சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை தொடர்ந்து முரண்பாடாகவே உள்ளது.

பாகிஸ்தானிடம் எத்தனை அணு குண்டுகள் உள்ளன என்பதை, இந்திய அதிகாரிகள் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பர். அணு ஆயுத சண்டையில் ஒட்டு மொத்த பாகிஸ்தானும், 50 கோடி இந்தியர்களும் அழிந்த பின், மீதமுள்ள தங்கள் மக்களுடன், போரில் வெற்றி பெற்றதாக இந்தியா அறிவிக்கும்.பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தப்பும் மக்கள் மட்டும் உயிர் தப்புவர் என்று அவர்கள் கருதினர். இருநாடுகளுக்கும் இடையே அவ்வளவு கசப்பான உறவு இருந்தது.இவ்வாறு கிளின்டன் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளின்டன் ஆட்சி காலத்தில், பாகிஸ்தானுக்கு எப்-16 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா விற்பனை செய்தது. இதனால், இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது என்றும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணாநிதியால் துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது - ஜெ

முல்லைப் பெரியாறு விஷயத்தில் தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா? என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கேள்வி எழுப்பியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்திருப்பது குறித்து சில நாட்களுக்கு முன்பு பதிலளித்த கருணாநிதி, “முல்லைப் பெரியாறு அணை பிரச்சனை, சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளதை மத்திய அரசு அறியும். எனவே, கேரள அரசுக்கு இதைப் போன்ற அனுமதியை கொடுத்திருக்காது என்று தான் நம்புகிறோம்” என்று தெரிவித்தார்.

மத்திய அரசில் அங்கம் வகித்துக்கொண்டு, இதுபோன்று “நம்புகிறோம்” என்று அறிக்கை விடுவதை கண்டித்ததோடு மட்டுமல்லாமல், அனுமதி அளிக்கப்பட்டிருக்கிறதா என்பதை மத்திய அரசிடம் கேட்டுத் தெரிந்து கொண்டு, அப்படி அனுமதி அளிக்கப்பட்டிருந்தால், அதைத் தடுத்து நிறுத்த முதலமைச்சர் கருணாநிதி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கை விடுத்திருந்தேன்.

மத்திய அரசை தட்டிக் கேட்டால், தமிழகத்தில் இருக்கும் தனது ஆட்சிக்கு பங்கம் வந்து விடுமோ என்ற பயத்தில், மத்திய அமைச்சரவையில் இருந்து திமுகவை கழற்றி விட்டு விடுவார்களோ என்ற அச்சத்தில், கேரள அரசுக்கு அளித்த அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற்று விட்டதாக ஒரு வதந்தி கருணாநிதியின் தூண்டுதலின் பேரில் பத்திரிகைகளில் பரப்பப்பட்டது.

அதாவது, இந்தப் பிரச்சனை குறித்து மத்திய அமைச்சர் ராசா, மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷை சந்தித்துப் பேசியதாகவும், அப்போது கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை நிறுத்தி வைக்க உத்தரவிடுவதாக ராசாவிடம் மத்திய அமைச்சர் ஜெயராம் ரமேஷ் உத்தரவாதம் அளித்ததாகவும் செய்திகள் வெளியாயின.

இந்தச் சூழ்நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சர் ஜெயராம் ரமேஷ், முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுப் பணிகளை மேற்கொள்ள மத்திய அரசு கேரள அரசுக்கு அனுமதி அளித்துள்ளதை உறுதிப்படுத்தியதோடு மட்டுமல்லாமல், கேரள அரசின் இந்தத் திட்டம் முடக்கப்படும் என்ற அளவில் தமிழ் நாட்டிற்கு உறுதிமொழி கொடுத்திருப்பதாக வந்துள்ள செய்தியையும் அவர் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த கேரள அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதன் காரணமாக, எதிர் காலத்தில் மதுரை, ராமநாதபுரம், திண்டுக்கல், தேனி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் குடிநீர் பற்றாக்குறை ஏற்படுவதுடன், விவசாய உற்பத்தியும் கடுமையாக பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும்.

மத்திய அரசில் அங்கம் வகிக்காத கேரள அரசு மத்திய அரசிடம் இருந்து அனுமதியை பெறுகின்றபோது, மத்திய அரசில் அங்கம் வகிக்கும் கருணாநிதி, அந்த அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க முடியாதா?.

தமிழகத்தின் நியாயமான கோரிக்கைக்கு கூட செவி சாய்க்க மறுக்கும் மத்திய அரசில் ஒட்டிக் கொண்டிருப்பது கருணாநிதிக்கு வெட்கமாக தெரியவில்லையா?.

மத்திய அமைச்சரான தன் மகன் நாடாளுமன்றத்தில் தமிழில் பேசுவதற்கான உரிமை குறித்தே அக்கறை செலுத்தாதவர் கருணாநிதி!. தனக்கு ‘வர வேண்டியது’ வந்தால் போதும் என்று நினைக்கிறார் போலும்!.

ஆய்வுக்கு பின்னர் முல்லைப் பெரியாறு அணையின் நீர் மட்டத்தை படிப்படியாக 152 அடி வரை உயர்த்திக் கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் 2006ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இது எனது ஆட்சிக்காலத்தில் உள்ள நிலைமை!.

கருணாநிதி முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு, இந்த நிலை மாறி, கேரள அரசு புதிய அணை கட்டிக்கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்து இருக்கிறது. அதாவது 2006ஆம் ஆண்டு தமிழகத்திற்கு சாதகமாக இருந்த சூழ்நிலை, 2009 ஆம் ஆண்டு கேரளாவிற்கு சாதகமாக மாறிவிட்டது! இதுதான் கருணாநிதியினுடைய நிர்வாகத் திறமை!.

நான் முதலமைச்சராக இருந்தபோது, மத்தியில் ஆட்சி அதிகாரத்தை வைத்துக்கொண்டு கடல் நீரை குடிநீராக்கும் திட்டம், பைக்காரா புனல் மின் திட்டம் ஆகியவற்றிற்கு அனுமதி தராமல் தமிழகத்திற்கு துரோகம் செய்தார் கருணாநிதி!.

அதாவது தமிழகத்தின் முதலமைச்சராக இல்லாமலேயே தமிழகத்திற்கு துரோகம் செய்தார். இன்று கருணாநிதியே தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கிறார். அவருடைய கட்சி மத்திய அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறது. அப்படி இருந்தும், உச்ச நீதிமன்ற ஆணையை மீறி கேரள அரசுக்கு மத்திய அரசு புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த அனுமதி அளிக்கிறது.

முதலமைச்சராக இருந்து கொண்டு தமிழகத்திற்கு துரோகம் செய்திருக்கிறார்! கருணாநிதி யால் தமிழகத்திற்கு துரோகம் தான் செய்ய முடியுமே தவிர நன்மை செய்ய முடியாது என்று கூறியுள்ளார் ஜெயலலிதா.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெகன்மோகனுக்கு முதல்வர் பதவி வழங்கக் கோரி ஆந்திராவில் கலவரம்

ஆந்திராவில் மறைந்த முதல்வர் ராஜசேகரரெட்டியின் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இரண்டு காங். அலுவலகங்களை அவர்கள் தீ வைத்துக் கொளுத்தினர்.

வன்முறையாளர்கள் 2 அரசு பஸ்களுக்கு தீ வைத்தனர். இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டுள்ளது.

ஆந்திரா முதல்வர் ராஜசேகர ரெட்டி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி இறந்தார். அவரது மறைவு மாநிலம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

தந்தையின் முதல்வர் பதவி மகன் ஜெகன்மோகன் ரெட்டிக்கு வழங்க வேண்டும் என அவரது ஆதரவு கோஷ்டியினர் ஆதரவு கரம் உயர்த்தினர்.

தற்காலிக முதல்வர் ரோசய்யாவுடன் மீண்டும் ஒரு முறை புதிதாக அமைச்சரவை பதவி ஏற்க வேண்டும் என்ற போது, ரெட்டி மகன் ஆதரவாளர்கள் சிலர் பதவி ஏற்க வருவார்களா என்ற சந்தேகம் எழுந்ததது.

காங். உயர் கமிட்டி ரோசய்யாவே முதல்வராக இருப்பார் என அறிவித்தது. மேலும் சோனியாவின் உத்தரவை அடுத்து ஜெகன்மோகன் ஆதரவாளர்கள் அமைதியாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரிட்டிஷ் எதிரிகளை இந்தியாவில் தீர்த்துக்கட்ட ஏற்பாடு செய்யும் கூட்டம்

பிரிட்டனில் வாழும் இந்தியர்கள், உறவுக்காரர்களிலும் தொழில் சகாக்களிலும் தமக்குள்ள எதிரிகளைத் தீர்த்துக்கட்டுவதற்கு, இந்தியா சென்று அங்கு பணத்துக்காக கொலை செய்யும் நபர்களை ஏற்பாடு செய்கிறார்கள் என்பது பிபிசி நடத்திய ஒரு புலனாய்வு செய்திச் சேகரிப்பில் தெரியவந்துள்ளது.

இந்த எதிரிகள் பிரிட்டனிலிருந்து இந்திய துணைக்கண்டத்துக்கு செல்லும்போது அங்கே வைத்து கொலை செய்யப்படுகிறார்கள்.

பணத்துக்காக கொலை செய்யும் ஆட்கள் குறைந்த பணத்திற்கே கிடைப்பார்கள் என்பதாலும், மாட்டிக்கொள்கிற ஆபத்து குறைவு என்பதாலும், எதிரிகளை இந்தியாவில் வைத்துத் தீர்த்துக்கட்டுவதை பிரிட்டிஷ் இந்தியர்கள் தெரிவுசெய்கிறார்கள்.

இப்படியான குற்றங்களைச் செய்தவர்கள் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வார்கள் என்பது அங்கு அரிதாகவே நடக்கிறது. கடந்த காலங்களில் இவ்வாறாக இந்தியாவில் ஆள் வைத்தது கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை நூற்றுக்கணக்கில் உள்ளதாக இந்தியாவிலும் பிரிட்டனிலும் இவ்விஷயத்துக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருபவர்கள் நம்புகின்றனர்.

பிரிட்டனில் தீட்டப்பட்டு முக்கியமாக இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இப்படியான கொலைச் சதிகளில் கவனிக்கப்படாமல், விஷயம் வெளியில் வராமலேயே சென்றுவிட்டுள்ளன என்று ஆர்வலர்கள் நம்புகின்றனர்.

ஆனால் இது மிகைப்படுத்தப்பட்ட ஒரு எண்ணிக்கை என்று கூறும் பஞ்சாப் பொலிசார், தமது பொலிஸ் அணியில் ஊழல் சகஜம் என்ற குற்றச்சாட்டையும் மறுக்கின்றனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்கள் பல ஐக்கிய ராஜ்ஜிய அதிகாரிகளிடம் உதவிகளை நாடுகின்றனர். பிரிட்டிஷ் பிரஜைகள் கிட்டத்தட்ட ஆறு பேர் தில்லி மற்றும் பஞ்சாப் சென்றபோது காணாமல் போயுள்ளதாய் தற்போது தங்களுக்குத் தெரியவந்துள்ளதாக பிரிட்டனின் வெளியுறவுத்துறை அலுவலகம் கூறுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது

இந்திய கடல் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்துக்கொண்டிருந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 6 படகுகளில் 46 இலங்கை மீனவர்கள் அத்துமீறி இந்திய எல்லையில் மீன் பிடிப்பதைக் கண்டனர்.

உடனே அங்கு விரைந்து சென்று, அவர்களை சுற்றிவளைத்து பிடித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.

அவர்கள் வந்த 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

உ.பி. வந்தார் ராகுல் - தலித் வீட்டில் தங்கினார் - மாயா டென்ஷன்


ஷிரவஸ்தி (உ.பி): காங்கிரஸ் பொது செயலாளர் ராகுல் காந்தி நேற்று இரவு திடீரென உ.பி. வ்நதார். ஷிரவஸ்தியில் உள்ள கிராமம் ஒன்றில் தலித் ஒருவரின் வீட்டில் தங்கினார். இந்த வருகையை முதல்வர் மாயாவதி கட்சி குறை கூறியுள்ளது.

காங்கிரஸ் தலித்களின் நண்பன் என்பதை உணர்த்தும் நோக்கில் ராகுல் காந்தி தலித் மக்களின் வீடுகளில் தங்கி வருகிறார். குறிப்பாக உத்தர பிரேதசம் மாநிலத்தில் தலித்களின் வாக்கு வங்கியை தன்னிடம் வைத்திருக்கும் மாயாவதிடம் இருந்து அதை பறிக்க முயன்று வருகிறார்.

இதற்காக கிராமங்களில் இருக்கும் தலித் வீடுகளி்ல் தங்கும் தனது திட்டத்தை தொடர்ந்து செயல்படு்த்தி வருகிறார்.

நேற்று உத்தரபிரேதசம் மாநிலத்தில் உள்ள பாரபங்கி மாவட்டத்தில் ராம்நகர் பகுதிக்கு திடீர் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். பின்னர் அவர் ஷிரவஸ்தி மாவட்த்தில் உள்ள சுட்கய்தை கிராமத்தில் சேடி பஸி என்ற தலித் வீட்டில் தங்கினார்.

இன்று காலை அருகில் இருக்கும் தில்ஹர் கிராமத்தில் இருக்கும் பள்ளிகளுக்கு சென்றார். அங்கு குழந்தைகளை சந்தித்தார். பின்னர் அங்கிருந்த பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.

ராகுலின் இந்த வருகை உள்நோக்கம் கொண்டது என பகுஜன் சமாஜ் கட்சி வர்ணித்துள்ளது. ஆனால் இது வழக்கமான ஒன்று என காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ஜெயந்தி நடராஜன் விளக்கியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நளினி மற்றும் பயாஸ் உண்ணாவிரதத்தை கைவிட்டனர்


தம்மை விடுதலை செய்யக்கோரி, தமிழகம் வேலூர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்த ராஜீவ் காந்தி கொலை வழக்கின் தண்டனை கைதிகளான நளினி முருகன் மற்றும் ரொபட் பயாஸ் ஆகியோர் தமது போராட்டத்தை கைவிட்டுள்ளதாக தமிழக செய்திகள் தெரிவிக்கின்றன

இந்த நிலையில் வேலூர் மகளிர் சிறை அதிகாரிகள் நளினியின் கோரிக்கையை சட்டரீதியாக பரிசீலிப்பதாக உறுதியளித்தமையை அடுத்தே அவர் இன்று காலை தமது போராட்டத்தை விலக்கிக் கொண்டுள்ளார். அதேபோல நேற்று இரவு பயாஸ்சும் தமது போராட்டத்தை கைவிட்டார்.

ராஜீவ் காந்தியின் கொலை தொடர்பில் தண்டனை அனுபவித்துவரும் நளினி முருகன் மற்றும் ரொபட் பயாஸ் ஆகியோர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

நளினி வேலூர் சிறையில் கடந்த திங்கட்கிழமை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுவந்தார்.

பயாஸ் கடந்த 17 ம் திகதி முதல் தன்னை விடுதலை செய்யவேண்டும். இல்லையில் கருணை கொலைக்கு உட்படுத்தவேண்டும் என கோரி உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டு வந்தார்.

இந்திய பிரஜைகளான நளினியும் பயாஸ்சும் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களாவர்.

எனினும், கருணை அடிப்படையில் நளினிக்கு மரண தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

ராஜீவ் காந்தி கொலையில் பங்கேற்றவராக தானுவுக்கு உதவினார் என்ற குற்றச்சாட்டே நளினி மீது சுமத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கடந்த வாரம் சென்னை மேல் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்த நளினி தாம் 2005 ம் ஆண்டு ம் விடுவிக்கப்பட்டிருக்க வேண்டும என சுட்டிக்காட்டியிருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates