jkr

அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்த இந்தியா!

india-srilankaஇந்தியாவின் புதுடில்லியில் உள்ள சிறிலங்கா தூதரகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் இன்று பிற்பகல் தாக்கப்பட்டதற்கு இந்தியா அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்துள்ளது.
“இராஜதந்திர அலுவலகத்திற்கு எதிராக நடைபெற்ற துரதிர்ஷ்டவசமான இந்த வன்முறை குறித்து நாங்கள் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளோம்” என இந்திய வெளிவிவகார அமைச்சு சற்று முன்னர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வன்செயலில் ஈடுபட்டவர்கள் மீது உனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்தியா தெரிவித்துள்ளது.

“சட்டத்தை நிலைநிறுத்தும் அமைப்புக்கள் உடனடியான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. இந்தச் செயலில் ஈடுபட்டவர்கள் மீது சட்டப்படியான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்” என்று அமைச்சு அறிக்கை தெரிவிக்கிறது.

சிறிலங்கா தூதரகம் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 3:30 நிமிடமளவில் கோபம் மிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் குழு ஒன்றால் தாக்கப்பட்டது. இதில் தூதரகத்தின் சொத்துக்கள் சிலவற்றுக்குச் சேதம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

இந்தத் தாக்குதல் குறித்து அதிர்ச்சி தெரிவித்துள்ள சிறிலங்கா தூதரகம் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.

“நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். உடனடியாக இந்த விடயத்தை வெளிவிவகார அமைச்சிற்கும் காவல்துறையினருக்கும் நாம் எடுத்துச் சென்றோம்” என்றார் எஸ்.குணரத்ன. தூதரகத்தில் முதல் செயலராகக் கடமையாற்றுகிறார் இவர்.

இந்தத் தாக்குதலில் தூதரகத்தில் இருந்த 10 முதல் 15 பூச்சட்டிகள் சேதமடைந்துள்ளன என காவல்துறையினர் தெரிவித்தனர்.

“பிற்பகலில், சுமார் 40 முதல் 50 பேர் வரையிலானோர் சிறிலங்காவுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினர். அவர்கள் பார்ப்பதற்குத் தமிழர்கள் போன்று இருந்தனர். அவர்கள் தமது கைகளில் சிறிலங்கா அரசைத் தாக்கும் வாசகங்கள் அடங்கிய அட்டைகளைத் தாங்கி இருந்தனர்.

இன்று விடுமுறை நாள் என்பதால் சுற்று வட்டாரத்தில் பெரும் கூட்டம் இருக்கவில்லை. அவர்கள் பூச்சாடிகள் பலவற்றை சேதப்படுத்தியதுடன் முழக்கங்களையும் எழுப்பினர்.

சிறிலங்கா பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களை அங்கிருந்து கலைப்பதில் ஒருவாறு வெற்றி கண்டனர்.

யாரும் காயமடையவில்லை. எல்லாமே இரண்டு நிமிடங்களுக்குள் நடந்து முடிந்து விட்டது. காவல்துறையினர் நடவடிக்கையில் இறங்குவதற்கு முன்னர் அவர்கள் தப்பி விட்டனர். ஒருவரும் கைது செய்யப்படவில்லை.

அவர்கள் தமிழர்கள், இலங்கையில் உள்ள தமிழர்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிப்பவர்கள். அவர்கள் எல்லா ஏற்பாடோடும்தான் வந்துள்ளார்கள். ஊடகவியலாளர்களை மட்டுமே தம்மோடு அழைத்து வந்துள்ளனர்.

தூதரகத்தை முற்றுகையிட்டு தாக்கியவர்கள் யார் என்பதை அடையாளம் காண்பதற்காக, செய்தி தொலைக்காட்சி நிறுவனங்களிடம் இருந்து காணொலிகளை நாம் கேட்டுள்ளோம்.

இவ்வாறு தூதரகத்தின் முதல் செயலாளர் எஸ்.குணரத்ன மேலும் தெரிவித்தார்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அவசர அவசரமாக வருத்தம் தெரிவித்த இந்தியா!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates