அரசுக்கு திராணியிருந்தால் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவுசெலவு திட்டத்தை நவ. 5 ஆம் திகதி ..
ஜி.எஸ்.பி.வரிச்சலுகை எமது நாட்டுக்கு கிடைப்பதன் மூலம் மூன்றில் ஒருபங்கு வருமானத்தை எம்மால் ஈட்ட முடிகின்றது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக 27 அம்ச நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றிய விதித்திருக்கின்றது. இதன்படி ஒழுகி உத்தரவாதம்அளிப்பதன் மூலம் இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.
நாட்டில் இன்று சுமார் ஒரு இலட்சம்பேர் தொழில் இழந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கின்ற 150 மில்லியன் டொலர் சலுகை இல்லாமல் போவது குறித்து கவலையடையப் போவதில்லை என்று கூறுகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தொழில் இழந்துள்ள ஒரு இலட்சம் பேரின் நிலைமைகள் என்ன என்பதை ஆராய்ந்துள்ளாரா எனக்கேட்க விரும்புகிறேன்.
2002இல் ஐக்கிய தேசியக்கட்சியினால் பாதுகாக்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்ட அனைத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தகர்த்தெறிந்து விட்டது,
அரசாங்கம் நேர்மையாக நடந்திருந்தால் எம்மிடத்தில் கேள்வி கேட்கும் உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருந்திருக்காது. இன்று நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது. தொழிற்றுறை வீழ்ச்சி, உற்பத்தி, கடற்றொழில், விவசாயம் ஆகியவற்றின் வீழ்ச்சி என சகல விடயங்களிலும் அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.
யுத்தம் நிறைவடைந்ததும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் இன்று அதனை மறுந்துவிட்டது. மக்களை வரிசையில் காக்க வைத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உட்பட பல அரச தலைவர்கள் நாடு இக்கட்டõன நிலைமைகளை சந்தித்த காலகட்டத்திலும் கூட வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கத் தயங்கியதில்லை. ஆனால், இன்றைய அரசாங்கத்தை நிர்வகிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு திராணியற்றவராக இருக்கின்றார். மஹிந்த சிந்தனை இன்று செயலற்றுப் போயுள்ளது என்றார்
0 Response to "அரசுக்கு திராணியிருந்தால் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவுசெலவு திட்டத்தை நவ. 5 ஆம் திகதி .."
แสดงความคิดเห็น