jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ரணில் விக்கிரமசிங்க แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ரணில் விக்கிரமசிங்க แสดงบทความทั้งหมด

ரணிலின் வீட்டைச் சோதனையிட குற்றத்தடுப்புப் பிரிவினருக்கு நீதவான் தடை


ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்காகக் குற்றத்தடுப்பு பிரிவினரால் கோரப்பட்டிருந்த அனுமதியை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டைச் சோதனையிடுவதற்கான அனுமதியை குற்றத்தடுப்பு பிரிவினர் கடந்த சனிக்கிழமை கொழும்பு மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவிடம் கோரியிருந்தனர். இவ்வனுமதியைப் பெறுவதற்காக மஜிஸ்ரேட் நீதவான் சந்தனி மீகொடவின் வீட்டுக்குக் குற்றத்தடுப்பு பிரிவினர் சென்றபோதே அவர் அனுமதி வழங்க மறுத்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டில் சட்டவிரோத சுவரொட்டிகள், துப்பாக்கிகள் உட்பட சட்டவிரோத ஆயுதங்கள் இருப்பதாகப் பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த தகவல் ஒன்றின் அடிப்படையில் சோதனையிடுவதற்கான அனுமதியைக் குற்றத்தடுப்பு பிரிவினர் கோரியிருந்தனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் வீட்டை சோதனையிட முயற்சிக்கின்றமை அரச அராஜகங்களில் மற்றுமொரு செயற்பாடாகும். அரச அதிகாரங்களைப் பயன்படுத்தி தமக்குத் தேவையானதை சாதித்துக் கொள்ள சிலர் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இறுதி முடிவுகளை அறிவிக்காது இராணுவரீதியில் நிர்வாக கட்டமைப்பை ஏற்படுத்த அரசு திட்டம் தலைநகருக்குள் கவசவாகனம் எதற்கு; ரணில் விக்கிரமசிங்க கேள்வி


நாளை செவ்வாய்க்கிழமை நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலில் இறுதி முடிவுகளை அறிவிக்காது இருப்பதற்கும் அதேவேளை, எதிர்வரும் 27 ஆம் திகதியின் பின்னர் மக்களின் தீர்ப்பை ஏற்றுக்கொள்வதற்கு திராணி இல்லாது தொடர்ந்தும் அதிகாரத்தை நீடித்துக் கொள்ளும் பொருட்டும் இராணுவ ரீதியிலான நிர்வாக கட்டமைப்பொன்றை ஏற்படுத்துவதற்கான திட்டங்களை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது என்று ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க குற்றம்சாட்டியுள்ளார்.

பயங்கரவாதம் அற்றுப்போயுள்ள சூழலில் யுத்த நடவடிக்கைகளுக்காக பாவிக்கப்படுகின்ற 15 கனரக கவச வாகனங்களை கொழும்பின் முக்கிய பகுதியான முகத்துவாரத்தில் அமைந்துள்ள இராணுவ முகாமில் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டியதன் அவசியம் என்ன? என்றும் அவர் கேள்வி எழுப்பினார். வடக்கில் கடமையில் இருந்த இராணுவ அதிகாரிகள் மூவரை அங்கிருந்து இடம் மாற்றி கொழும்புக்கு அழைத்து வந்து பங்களாதேஷக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் அவர் கூறினார். எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பங்குகொண்ட விசேட செய்தியாளர் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை ஜெனரல் பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது கருத்து வெளியிடுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்த செய்தியாளர் மாநாட்டில் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா, ஜே.வி.பி.யின் பாராளுமன்ற குழுத் தலைவர் அனுரகுமார திசாநாயக்க, ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் ஏற்பாட்டாளர் மங்கள சமரவீ ர ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தொடர்ந்தும் கூறுகையில், நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதித் தேர்தலின் முடிவுகளை எதிர்கொள்ள முடியாத அரசாங்கம் தற்போது அசாதாரண சூழல்களை உருவாக்கி வருகின்றது. தேர்தல் ஒன்றில் மக்கள் எவ்வாறான தீர்மானத்தை அளிக்கின்றார்களோ அதனை ஏற்றுக்கொள்வதுதான் ஜனநாயகமாகும். அதனை விடுத்து நாளை தேர்தலின் முடிவுகள் தமக்கு சாதகமற்றதாக அமையப் போவதை உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் கருத்தை ஏற்றுக்கொள்ளாதிருப்பதற்கும் அதேநேரம் தமது அதிகாரத்தை தொடர்ந்தும் நீடித்துக் கொள்வதற்குமான மோசமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது தொடர்பில் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அரசியல் அமைப்பின் 31ஆம் பிரிவின் பிரகாரம் மக்களின் தீர்ப்புக்கு அமைய வெற்றியோ தோல்வியோ எதனையும் ஏற்றுக்கொள்ள வேண்டியதே முறையாகும். இது இவ்வாறிருக்க யாழ்ப்பாணம், பூநகரி, வடமராட்சி மற்றும் கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இராணுவ உயரதிகாரிகள் திடீரென இடம் மாற்றப்பட்டு அவர்களை தலைநகருக்கு அழைத்து வந்திருந்தனர். அதுமட்டுமல்லாது டபிள்யு. இசட் 551 ரக 15 கவச வாகனங்கள் முகத்துவாரம் இராணுவ முகாமில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. பயங்கரமான அழிவுகளை ஏற்படுத்தும் இந்த வாகனங்கள் யுத்த காலத்தின்போதே பாவிக்கப்படுபவை. யுத்தம் நிறைவடைந்துள்ள நிலையில் அதுவும் தலைநகருக்குள் இவ்வாறான வாகனங்கள் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? என கேட்க விரும்புகிறேன்.

தேர்தல் காலத்தில் வன்முறைச் சம்பவங்கள் இடம்பெறுவது இயல்பானதாகும். எனினும், பாரிய வன்முறைச் சம்பவங்கள் எதுவும் தலைநகருக்குள் இடம்பெறுவதில்லை. வெளிப் பிரதேசங்களில் சில சம்பவங்கள் இடம்பெறலாம். இருப்பினும் நாளைய தினம் நடைபெறவிருக்கின்ற தேர்தலின் போது எந்த விதமான வன்முறைகளிலும் எவரும் ஈடுபடக்கூடாது என நாம் தெளிவாக பொது மக்களுக்கு அறிவித்திருக்கின்றோம். இந்நிலையில், வன்முறைகள் இடம்பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறைவு. அவ்வாறு வன்முறைகள் இடம்பெறுமானால் அது அரசாங்கத்தையே சாரும்.

இதேவேளை, நடைபெறவிருக்கின்ற ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள் அறிவிக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆணையாளருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் உள்ளிட்ட அரச ஊடகங்களில் அத்தியாவசிய சேவையாளர்களை தவிர ஏனையோருக்கு விடுமுறை வழங்குமாறு பணிக்கப்பட்டுள்ளது. இது ஜனநாயக விரோத செயற்பாடாகும்.

தேர்தல் முடிவுகள் தமக்கு நிச்சயமாக தோல்வியிலேயே அமையும் என்பதை தெளிவாக உணர்ந்துள்ள அரசாங்கம் மக்களின் ஜனநாயகத் தீர்ப்பின்படி முடிவுகளை ஏற்றுக்கொள்ள முடியாது இதன் பின்னணியில் இருந்து செயற்பட்டு வருகின்றது. ஆனால், எம்மைப் பொறுத்தவரையில் நாம் தேர்தலின் எந்த முடிவுகளையும் எதிர்கொள்வதற்கும் அதனை ஏற்றுக்கொள்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம். அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் ஜனநாயக விரோத செயற்பாடுகள் தொடர்பிலான அனைத்து தகவல்களும் ஜனநாயகத்தை ஆதரிக்கின்ற பொலிஸார், இராணுவ அதிகாரிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஊடாகவே எமக்கு கிடைக்கின்றன.

எனவே, அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கும் மக்களின் தீர்ப்புகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் தொடர்பிலும் அதேவேளை, நடைபெறவிருக்கின்ற தேர்தலையும் அதன் பின்னரான நடவடிக்கைகளையும் குழப்பியடித்து வன்முறைகளில் ஈடுபடுவோர் தொடர்பிலும் உரிய கவனம் செலுத்தி அதற்கு இடமளிக்காதவாறு பொலிஸார், முப்படையினர், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் நடந்து கொள்ள வேண்டும் என சகலரிடமும் கோரிக்கை விடுக்கிறோம். அத்துடன், வன்முறைக்கு இடமளிக்க வேண்டாம் எனவும் கேட்டுக் கொள்கிறோம்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிக்கை


பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் முறையினை ஏற்படுத்த வேண்டும். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கல் குறித்து நேற்று வி÷சட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர தீர்வுத் திட்டம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.:

அ. சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக்கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.:

ஆ. சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையை பேணிபாதுகாத்தல், மதத்தைப் பின்பற்றல், மொழியைப் பேணிப்பாதுகாத்து வளர்ச்சியடைச் செய்து தம் தனித்துவத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தல்.:

இ. சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.:

ஈ. தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கருமமொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.:

உ. சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்:

* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுந்திரமாகவும் தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.:

* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.:

ஊ. புதிய பாராளுமன்றத்தின் மூலம் இலங்கைவாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பு சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு சட்டத்தை அமுல்படுத்தல்.:

எ. மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்கு பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும், மத்திய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.:

ஏ. பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல், போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டு நடத்துவதற்கும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் இந்தியாவுக்கு விஜயம்


ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்தியா பயணமானார்.

இந்திய மத்திய அரசின் உத்தியோகபூர்வ அழைப்பின்பேரிலேயே இந்த விஜயம் அமைந்திருப்பதாக எதிர்க்கட்சி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தியாவுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தி, வெளி விவகார அமைச்சர் எஸ். எம். கிருஷ்ணா மற்றும் இந்திய தேசிய பாதுகாப்புக்கான ஆலோசகர் எம். கே. நாராயணன் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களோடு பேச்சுக்கள் நடத்தவுள்ளார்.

இதன்போது இலங்கை இந்திய ராஜதந்திர உறவுகள் மற்றும் இலங்கையில் சூடுபிடித்துள்ள ஜனாதிபதித் தேர்தல் உட்பட பல விடயங்கள் குறித்து கலந்தாலோசிக்கப்படவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை இன்று திங்கட்கிழமை மாத்திரமே இந்தியாவில் தங்கியிருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இந்திய எதிர்க்கட்சி முக்கியஸ்தர்களை சந்திப்பதற்கான நிகழ்ச்சி நிரல் எதுவும் இல்லையென்றும் கூறப்படுகின்றது. கடந்த வாரம் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ, பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ ஆகியோரடங்கிய குழுவினர் இந்தியாவுக்கு விஜயம் செய்து அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர்கள் எம். கிருஷ்ணாவை சந்தித்து பேசியிருந்தனர். இந்த நிலையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐரோப்பிய நாடுகளுக்கு ரணில் இன்று பயணம்


எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கான விஜயத்தினை இன்று ஆரம்பிக்கவுள்ளார். ஒருவாரகால விஜயமொன்றை மேற்கொண்டு ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லும் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு தலைவர்களையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

இவர் பிரித்தானியாவுக்கும் விஜயம் செய்து அங்குள்ள முக்கியஸ்தர்களையும் சந்தித்துப் பேச ஏற்பாடாகியுள்ளது. ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் எதிர்க்கட்சிதத் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஐரோப்பிய நாடுகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அன்று புலிகளுக்குப் பணம் வழங்கிய ஜனாதிபதி இன்று அவர்களின் பணத்தில் வெற்றி பெற முயற்சி : ரணில்


"2005ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் விடுதலைப் புலிகளுக்குப் பணம் கொடுத்து வெற்றி பெற்று பதவியேற்ற மஹிந்த ராஜபக்ஷ, இம்முறை தேர்தலில் விடுதலைப் புலிகளிடமிருந்து பெற்ற பணத்தைக் கொண்டு வெற்றிபெற முயற்சிக்கின்றார்" என எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க கூறினார்.

நேற்று சிலாபத்தில் இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் புத்தளம் மாவட்டத்திற்கான புதிய அலுவலகத்தைத் திறந்து வைத்த பின் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டாரவின் மாதம்பை அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன கடந்த இரு மாதங்களுக்கு முன்னர் வன்முறைக் கும்பல் ஒன்றினால் தீவைத்து நாசம் செய்யப்பட்ட பின் அதற்கு பதிலாக புதிய அலுவலகம் சிலாபத்தில் அமைக்கப்பட்டு திறந்து வைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தலைமையில் இடம்பெற்ற இவ்வைபவத்தில் அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

"மாதம்பையில் அமைந்திருந்த எமது ரங்கே பண்டாரவின் அலுவலகம் மற்றும் கட்சியின் மாவட்ட அலுவலகம் என்பன பாதாளக் கும்பலினால் தீவைத்து நாசமாக்கப்பட்டது. அதிகூடிய முறை எரித்து நாசமாக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களின் அலுவலகம் என்ற வகையில் பாலித ரங்கே பண்டார கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடிப்பார்.

ஆனால் ஒன்றை மட்டும் அந்த பாதாளக்கும்பல் புரிந்து கொள்ள வேண்டும். தீ வைப்பதன் மூலமோ, குண்டு வீசுவதன் மூலமோ ரங்கே பண்டாரவின் வாயை மூடிவிட முடியாது.

இன்று நாம் இந்த ராஜபக்ஷவின் தனியாட்சிக்கு முடிவு கட்ட பல கட்சிகளை இணைத்தக் கொண்டு ஐக்கிய தேசிய முன்னணியை உருவாக்கியுள்ளோம்.

ஜெனரல் சரத் பொன்சேகவின் வரவினால் இன்று இந்த அரசு தடுமாறிப் போயுள்ளது. இந்த ராஜபக்ஷவின் தனியாட்சியை, குடும்ப ஆட்சியை ஒழித்து இந்நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த பல கட்சிகளுடன் நாம் ஒன்றிணைந்துள்ளோம்.

2005ஆம் ஆண்டில் விடுதலைப் புலிகளுக்குப் பணத்தைக் கொடுத்து பதவிக்கு வந்த ராஜபக்ஷ இன்று விடுதலைப் புலிகளின் பணத்தைக் கொண்டு தேர்தலில் ஈடுபடுகின்றார். நாம் இவரின் விளையாட்டுக்களுக்குப் பயப்படப் போவதில்லை. வருகின்ற ஜனவரி 26ம் திகதி நடைபெறப் போகும் தேர்தலில் ஜெனரல் சரத் பொன்சேகா நிச்சயம் வெற்றி பெறுவார். இந்நாட்டு மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது"என்றார்.

இவ்வைபவத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர, நாடாளுமன்ற உறுப்பினர்களான லக்ஷ்மன் கிரியெல்ல, ஜோசப் மைக்கல் பெரேரா, ஏ.ஆர். அப்துல் காதர், சம்பிக பிரேமதாச, உட்பட மாகாண சபை உறுப்பினர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி பிரமுகர்கள், பிரதேச தலைவர்கள், தொகுதி அமைப்பாளர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

இவ்வைபவத்தின் போது ரங்கே பண்டாரவின் www.bandaraonline.com என்ற உத்தியோகபூர்வ இணையத்தளம் கட்சித் தலைவர் ரணில் விக்கிரசிங்கவினால் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டதுடன், அவரின் bandaraunp@yahoo.com மின்னஞ்சல் முகவரியும் அறிமுகப்படுத்தப்பட்டது. அத்துடன் ஜனபலய (மக்கள் சக்தி) எனும் புத்தளம் மாவட்டத்திற்கான பத்திரிகையும் வெளியிட்டு வைக்கப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அரசியலமைப்பில் மாற்றம் அவசியம் -எதிர்க்கட்சித் தலைவர் தெரிவிப்பு


நல்லாட்சி மற்றும் பொருளாதார வளர் ச்சி உட்பட நாட்டின் முன்னுள்ள ஏனைய சவால்களை எதிர்கொள்ள இலங்கையின் அரசியலமைப்பிலும் நடைமுறை அரசியலிலும் மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். தகுதியற்றவர்களின் அரசியல் பிரவேசத்தினால் இலங்கை அரசியலில் தகுதியுடையவர்கள் கூட தகுதியற்றவர்களாகவே தெரிகின்றனர் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். ஐ.தே.க.வின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க எழுதிய எதிர்கால சவால்கள் என்ற நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை கொழும்பு வாறுகாராம விஹாரையில் நடைபெற்றது. இங்கு உரையாற்றுகையிலேயே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இவர் இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

கடந்த 60 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அடிமைத்தனத்திலிருந்து சுதந்திரம் அடைந்தது. இக்காலப் பகுதியில் ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கையில் இலங்கை பொருளாதாரம், சுகாதாரம் உட்பட ஏனைய துறைகளில் முன்னிலையில் இருந்தது. ஆனால், காலப்போக்கில் இலங்கை ஏனைய நாடுகளிடையே ஒப்பிடுகையில் பின்தள்ளப்பட்ட நிலையே காணப்படுகின்றது.

இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தின் பின்னர் நாட்டில் முன்னுள்ள சவால்களுக்கு எவ்வாறு முகம் கொடுக்க வேண்டும் என்ற திட்டக் கொள்கை சரியாக அமைத்து செயற்படுத்தப்படாமையால் நாட்டின் பொருளாதாரம், கல்வி, நல்லாட்சிப் போன்றவை சீர்குலைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இந்தியா, ஜப்பான், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகளில் அரசாங்கங்கள் காலத்திற்கு காலம் மாறினாலும் அந்த நாடுகளின் தேசிய கொள்கைகளில் என்றும் மாற்றம் ஏற்படுவதில்லை.

இவ்வாறானதொரு மாற்றமடையாத தேசியக் கொள்கை ஒன்று இலங்கைக்கு தற்போது தேவை. இலங்கையில் நல்லாட்சியை எவ்வாறு ஏற்படுத்த வேண்டும். ஜனநாயகம், பொருளாதார வளர்ச்சி போன்றவற்றை எவ்வாறு அடைவது என்பது தொடர்பாக புதிய கொள்கைகளை அமைத்து நடைமுறைப்படுத்த வேண்டும்.

இந்த செயற்பாடுகளையே தற்போதைய அவசர தேவையாக கொண்டு பேசப்பட வேண்டும். அரசியல் கட்சிகளும் சிவில் சமூகமும் ஏற்றுக் கொள்ளக்கூடிய கொள்கைகளை அமைக்க வேண்டும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படும் -எதிர்கட்சித்தலைவர் தெரிவிப்பு!


ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் சுமார் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹபரனவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாஸ போன்ற தலைவர்களைப் போன்று தாமும் இந்தநாட்டுக்கு பொருளாதாh வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார அபிவிருத்திநோக்கி நகர்த்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் புத்தஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் திட்டமிட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அரசுக்கு திராணியிருந்தால் நிவாரணம் வழங்கும் வகையிலான வரவுசெலவு திட்டத்தை நவ. 5 ஆம் திகதி ..


அரசாங்கத்திற்கு திராணியிருந்தால் அடுத்த வருடத்துக்காக மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையிலான வரவு செலவுத்திட்டத்தை நவம்பர் மாதம் 5ஆம் திகதி சமர்ப்பித்துக்காட்டுமாறு எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதிக்கு சவால் விடுத்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் காலில் விழுவதைவிடுத்து உரிமைகள் பறிக்கப்பட்ட மக்களிடத்தில் அரசாங்கம் மன்னிப்புக்கோர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார். மாத்தறை வெலிகமவில் இடம்பெற்ற கட்சியின் தென்மாகாண சபைத் தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். இங்கு அவர் மேலும் கூறுகையில், ஐக்கிய தேசியக்கட்சியினராகிய நாம் ஒருபோதும் நாட்டைக் காட்டிக்கொடுக்கத் தயாரில்லை. அதனை செய்யவும் மாட்டோம். அரசாங்கமே தவறிழைத்துவிட்டு ஜி.எஸ்.பி. பிளஸ் விவகாரம் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தை அவதூறாக பேசியது. தற்போது ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில்ராஜபக்ஷ, திறைசேரியின் செயலாளர் கலாநிதி பி.பி. ஜயசுந்தர ஆகியோர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகையை பெற்றுக்கொள்வதற்காக ஐரோப்பாவுக்கு சென்றுள்ளனர்.

ஜி.எஸ்.பி.வரிச்சலுகை எமது நாட்டுக்கு கிடைப்பதன் மூலம் மூன்றில் ஒருபங்கு வருமானத்தை எம்மால் ஈட்ட முடிகின்றது. இந்த சலுகையை பெற்றுக்கொள்வதற்காக 27 அம்ச நிபந்தனைகளை ஐரோப்பிய ஒன்றிய விதித்திருக்கின்றது. இதன்படி ஒழுகி உத்தரவாதம்அளிப்பதன் மூலம் இந்த சலுகையைப் பெற்றுக்கொள்ள முடியும்.

நாட்டில் இன்று சுமார் ஒரு இலட்சம்பேர் தொழில் இழந்துள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தினால் கிடைக்கின்ற 150 மில்லியன் டொலர் சலுகை இல்லாமல் போவது குறித்து கவலையடையப் போவதில்லை என்று கூறுகின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ. தொழில் இழந்துள்ள ஒரு இலட்சம் பேரின் நிலைமைகள் என்ன என்பதை ஆராய்ந்துள்ளாரா எனக்கேட்க விரும்புகிறேன்.

2002இல் ஐக்கிய தேசியக்கட்சியினால் பாதுகாக்கப்பட்ட ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச்சலுகை உள்ளிட்ட அனைத்தையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் தகர்த்தெறிந்து விட்டது,

அரசாங்கம் நேர்மையாக நடந்திருந்தால் எம்மிடத்தில் கேள்வி கேட்கும் உரிமை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இருந்திருக்காது. இன்று நாடு பாரிய பொருளாதார வீழ்ச்சி கண்டுள்ளது. தொழிற்றுறை வீழ்ச்சி, உற்பத்தி, கடற்றொழில், விவசாயம் ஆகியவற்றின் வீழ்ச்சி என சகல விடயங்களிலும் அரசாங்கம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளது.

யுத்தம் நிறைவடைந்ததும் மக்களுக்கான நிவாரணத்தை வழங்குவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம் இன்று அதனை மறுந்துவிட்டது. மக்களை வரிசையில் காக்க வைத்த முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்க உட்பட பல அரச தலைவர்கள் நாடு இக்கட்டõன நிலைமைகளை சந்தித்த காலகட்டத்திலும் கூட வரவு செலவுத்திட்டத்தை முன்வைக்கத் தயங்கியதில்லை. ஆனால், இன்றைய அரசாங்கத்தை நிர்வகிக்கின்ற ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வரவு செலவுத்திட்டத்தை சமர்ப்பிப்பதற்கு திராணியற்றவராக இருக்கின்றார். மஹிந்த சிந்தனை இன்று செயலற்றுப் போயுள்ளது என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates