jkr

சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிக்கை


பிரிக்கப்படாத இலங்கைக்குள் சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்துகொள்ளும் முறையினை ஏற்படுத்த வேண்டும். போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சியை ஏற்படுத்துவதற்கு அதிகாரங்களை மாகாணங்களுக்கும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். அதிகாரப் பரவலாக்கல் குறித்து நேற்று வி÷சட அறிக்கை ஒன்றினை விடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க அதில் மேலும் தெரிவித்திருப்பதாவது:

பயங்கரவாதம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதுடன் ஆயுதப் போராட்டமும் முடிவுக்கு வந்தது. எமது நாட்டில் பயங்கரவாதம் மீண்டும் தலைதூக்காமல் இருப்பதை உறுதிசெய்வதாயின் தமிழ் பேசும் மக்களின் அரசியல், பொருளாதார மற்றும் சமூக பிரச்சினைகளுக்கு பின்வரும் காரணிகளை அடிப்படையாகக் கொண்ட நிரந்தர தீர்வுத் திட்டம் பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும்.:

அ. சகல இனத்தவர்களுக்கும் பாதுகாப்புடன் வாழக்கூடிய சூழல் உருவாக்கப்பட்டு, மனிதப் பெறுமானங்களை மதிக்கின்ற இலங்கையர் என்ற தனித்துவத்தை ஊக்குவித்தல்.:

ஆ. சகல இனத்தவர்களினதும் கலாசார புனிதத் தன்மையை பேணிபாதுகாத்தல், மதத்தைப் பின்பற்றல், மொழியைப் பேணிப்பாதுகாத்து வளர்ச்சியடைச் செய்து தம் தனித்துவத்தை மேம்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்கும் வாய்ப்பளித்தல்.:

இ. சகல பிரஜைகளுக்கும் எதுவித பேதமுமின்றி, சட்டத்தின் முன் சமத்துவம் மற்றும் நியதி பேணப்பட்டு முழுமையாக மனித உரிமைகள் மற்றும் அடிப்படை உரிமைகளை அனுபவிக்கும் சுதந்திரம்.:

ஈ. தமது விருப்பத்தின் பிரகாரம் தான் விரும்பிய அரச கருமமொழியில் கருமமாற்றுவதற்கான உரிமை.:

உ. சகலரும் சமமாக மதிக்கப்படுவதை ஊக்குவித்தல்:

* பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கும் அதேவேளை, சகல பிரஜைகளுக்கும் தத்தமது மதங்களை சுந்திரமாகவும் தடையின்றியும் பின்பற்றும் உரிமையை ஊக்குவித்தல்.* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான சலுகையை மற்றொரு மதத்திற்கோ அல்லது சமூகத்திற்கோ காட்டாதிருத்தல்.:

* ஓர் இனத்தை அல்லது மதத்தை விடவும் கூடுதலான பொறுப்புகளை மற்றுமொரு இனத்திற்கோ அல்லது மதத்திற்கோ வழங்காதிருத்தல்.:

ஊ. புதிய பாராளுமன்றத்தின் மூலம் இலங்கைவாழ் அனைத்து மக்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய புதிய அரசியல் யாப்பு சட்டம் ஒன்றை சட்டமாக்கும்வரை நடைமுறையிலுள்ள அரசியல் யாப்பு சட்டத்தை அமுல்படுத்தல்.:

எ. மாகாண மற்றும் அங்கு வாழும் இனங்களை நிலையான பன்முக ஜனநாயகத்தின் சரத்திற்கு பங்காளிகளாக்குவதனை ஊக்குவிப்பதனூடாக சகல பிரஜைகளுக்கும், மத்திய மாகாண சபை மற்றும் உள்ளூராட்சிமன்ற மட்டத்தில் தேசத்திற்கு உயிரூட்டும் செயற்பாட்டால் முழுமையாக இணைந்து செயற்படுவதனை உறுதிப்படுத்தல்.:

ஏ. பிரிக்கப்படாத இலங்கைக்குள் சிங்கள, தமிழ், முஸ்லிம், பறங்கியர்கள் ஆகிய சகல இனத்தவர்களும் ஏற்றுக்கொள்ளக் கூடிய அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை ஒன்றை ஏற்படுத்தல், போதியளவு நிதி மற்றும் நீதி அதிகாரம் உட்பட மாகாணத்தில் சுபீட்சம் மற்றும் நல்லாட்சிகளைக் கொண்டு நடத்துவதற்கும் சமூக பொருளாதார அபிவிருத்திக்கு தேவையான பரவலான அதிகாரங்களை மாகாணங்களுக்கு வழங்குதல்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சகல இனத்தவர்களும் ஏற்கும் விதத்தில் அதிகாரங்கள் பரவலாக்கப்பட வேண்டும்- எதிர்க்கட்சித் தலைவர் ரணில் அறிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates