இந்தியாவில் 30 கோடி பேர் இறப்பர்
இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே அணு ஆயுத சண்டை போர் நிகழ்ந்திருந்தால், பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக அழிந்திருக்கும். அதே நேரத்தில், 50 கோடி இந்தியர்கள் இந்த சண்டையில் பலியாகி இருப்பர்’ என, அமெரிக்க முன்னாள் அதிபர் கிளின்டன் ஆட்சி காலம் குறித்து எழுதப்பட்டுள்ள புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் அதிபர் பில் கிளின்டன். 1993 முதல் 2001 வரை எட்டு ஆண்டு காலம், இவர் அதிபராக இருந்தார். அவரது ஆட்சி காலத்தில் இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே, 1999ல் கார்கில் போர் சமயத்தில் அணு ஆயுத போர் ஏற்படும் சூழ்நிலை உருவானது.அப்போது, அமெரிக்க வெளியுறவு இணை அமைச்சராக இருந்தவர் ஸ்டிரோப் டால்போட். இவர் கூறிய தகவலின் அடிப்படையில், பிரபல எழுத்தாளர் டைலர் பிராஞ்ச் என்பவர், “தி கிளின்டன் டேப்ஸ்’ என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார்.இதில் கிளின்டன் ஆட்சி காலத்தில் நடந்த முக்கிய சம்பவங்கள், குறிப்பாக, இந்தியா - பாக்., உறவு குறித்த விஷயங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை கிளின்டன் ஆட்சி பற்றி எழுதப்படாத தகவல்கள் என்பதால், நேற்று இப்புத்தகம் விற்பனைக்கு வந்ததும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த புத்தகத்தில் கிளின்டன் கூறிய தகவலாக எழுதப்பட்டுள்ளதாவது: இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே பதட்டமான சூழ்நிலை உள்ளது. இதுபோன்ற நேரத்தில் இரு நாடுகளுக்கும் இடையே அணு ஆயுத போர் நடந்தால், பாகிஸ்தான் ஒட்டு மொத்தமாக அழிந்து விடும். அதே நேரத்தில் 30 கோடியில் இருந்து 50 கோடி இந்தியர்களும் இந்த சண்டையில் பலியாகி விடுவர்.இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னையால், சர்வதேச நாடுகளுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இந்த இரு நாடுகளுக்கும் இடையேயான பிரச்னை தொடர்ந்து முரண்பாடாகவே உள்ளது.
பாகிஸ்தானிடம் எத்தனை அணு குண்டுகள் உள்ளன என்பதை, இந்திய அதிகாரிகள் ஓரளவுக்கு தெரிந்து வைத்திருப்பர். அணு ஆயுத சண்டையில் ஒட்டு மொத்த பாகிஸ்தானும், 50 கோடி இந்தியர்களும் அழிந்த பின், மீதமுள்ள தங்கள் மக்களுடன், போரில் வெற்றி பெற்றதாக இந்தியா அறிவிக்கும்.பாகிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள மலைப்பகுதியில் தப்பும் மக்கள் மட்டும் உயிர் தப்புவர் என்று அவர்கள் கருதினர். இருநாடுகளுக்கும் இடையே அவ்வளவு கசப்பான உறவு இருந்தது.இவ்வாறு கிளின்டன் கூறியதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிளின்டன் ஆட்சி காலத்தில், பாகிஸ்தானுக்கு எப்-16 ஹெலிகாப்டர்களை அமெரிக்கா விற்பனை செய்தது. இதனால், இந்தியா கடும் அதிருப்தியில் இருந்தது என்றும் அந்த புத்தகத்தில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
0 Response to "இந்தியாவில் 30 கோடி பேர் இறப்பர்"
แสดงความคิดเห็น