jkr

ஜி.எஸ் பி பிளஸ் சலுகைக்காக நாட்டின் இறைமை சுய கௌரவத்தை காட்டி கொடுக்க வேண்டியதில்லை- அமைச்சர் ஜி. எல். பீரிஸ்


ஜி.எஸ்.பி. பிளஸ் சலுகையினை 2008 ஆம் ஆண்டிலிருந்து இன்னும் மூன்று வருடங்களுக்கு வழங்குமாறு கோரினோம். அந்த சலுகையானது பயனுள்ளதாகும். அதற்காக நாட்டின் இறைமையையோ, சுயகௌரவத்தையோ காட்டிக்கொடுக்கவேண்டிய தேவையில்லை என்று ஏற்றுமதி அபிவிருத்தி சர்வதேச வர்த்தக அமைச்சர் ஜி. எல். பீரிஸ் தெரிவித்தார். எமக்கு நாட்டின் இறைமை, ஒருமைப்பாடு முக்கியமானது. அதற்காக எந்தவொரு விடயத்திற்குமான விசாரணையிலும் நாம் பங்குபற்றமாட்டோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான தகவல்களை நாம் தந்துதவவில்லை என கூறுவது தவறானதாகும் என்றும் அவர் சொன்னார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அமைச்சர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் மேலும் கூறியதாவது;

வி.எஸ்.பி. பிளஸ் சலுகை எமது கிடைக்கும் என்றோ , கிடைக்காது என்றோ அல்லது தருவார்கள் என்றோ கூறமுடியாது. தரமாட்டோம் என்று அவர்கள் கூறவும் இல்லை. எனினும், அந்த சலுகை எங்களுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கையிருக்கின்றது. சலுகையை பெறுவதற்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் நால்வர் கொண்ட குழுவினூடாக தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. எனினும் அரசாங்கத்தை விசாரிப்பதற்கு வெளிநாடுகளுக்கு அனுமதியளிக்க முடியாது. அதற்கு நாம் தயாரில்லை. எமக்கு நாட்டின் இறைமை ஒருமைப்பாடு முக்கியமானது. அதற்காக எந்த விடயத்திற்குமான விசாரணையில் நாம் பங்குபற்றமாட்டோம். ஆனால் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு தேவையான தகவல்களை நாம் தந்துதவ மாட்டோம் என்று கூறுவது தவறானதாகும். வி.எஸ்.பி. பிளஸ் சலுகை 2008 ஆம் ஆண்டிருலிருந்து இன்னும் மூன்று வருடங்களுக்கு வழங்குமாறு கோரினோம் பிரஸல்ஸிலுள்ள இலங்கை தூதுவரினூடாக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

உலக நாடுகள் எதுவுமே எதிர்ப்பார்க்காதவிதத்தில் மிககொடூரமான புலிப்பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு இலங்கையில் புதிய நிலைமையொன்று உருவாகியுள்ளது என்பதனை உலக நாடுகள் புரிந்துக்கொள்ளவேண்டும்.

சலுகையை வழங்கி எமது நாட்டின் பொருளாதாரத்திற்கு புதிய உத்வேகத்தை ஊட்டவேண்டும். அதற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளித்து கைக்கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்யாவிடின் அது பெரும் பிரச்சினையாக அமையும். வி.எஸ்.பி. பிளஸ் சலுகை கிடைக்குமானால் 20 நாடுகளுக்கு சலுகையடிப்படையில் உள்ளூர் உற்பத்தி பொருட்களை அனுப்பமுடியும். அது மட்டுமல்லது கிராமங்களில் வாழ்கின்ற மக்களின் வாழ்க்கை தரத்தையும் கட்டியெழுப்பி அவர்களின் குடும்பங்களை பாதுகாக்கவேண்டும். ஐரோப்பிய ஒன்றியத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள விமர்சனத்திற்கு பதில் கொடுத்துள்ளோம் என்பதனால் சலுகை விவகாரம் விவாத்திற்கு உட்படுத்தப்படவேண்டிய விடயமல்ல. இலங்கையில் சுயாதீன நிறுவனம் இல்லை என்று கூறுகின்றனர் எனினும் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு அமைவாக சோதனை சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன.

வி.எஸ்.பி. பிளஸ் சலுகை பயனுள்ளது. அதற்கான சகலவிதமான சாதாரண நடவடிக்கையும் எடுக்கப்படும் அதற்காக நாட்டின் சுயகௌரவத்தையும் இறைமை ஒருமைப்பாட்டையும் காட்டிக்கொடுக்க தேவையில்லை. சலுகையின்றி வாழமுடியும் அதற்காக நாம் எதற்கும் தயார் என்று அர்த்தப்படாது. பணவீக்கம் குறைந்துள்ள அதேவேளை வட்டி வீதமும் குறைந்துள்ளது இதனால் போட்டி சந்தையில் உற்பத்தியின் வீதம் அதிகரித்துள்ளது இதன் மூலமாக தேசிய கைத்தொழிலாளர்கள் நன்மையடைந்துள்ளனர்.

1994 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தலும் ஆகஸ்டில் பொதுத்தேர்தலும் நடத்தப்பட்டமையினால் அன்று பிரதி நிதியமைச்சராக இருந்த நான் இரண்டிற்கும் இடைப்பட்ட காலத்தில் கணக்கு வாக்கெடுப்பொன்றை நடத்தினேன். அன்று கணக்கு வாக்கெடுப்பை யாரும் விமர்சிக்கவோ, அதற்கெதிராக யாரும் நீதிமன்றமும் செல்வதற்கு முயற்சிக்கவில்லை. அதனை சம்பிரதாயமாக பயன்படுத்தலாம் அதில் எவ்விதமான சட்டப்பிரச்சினையும் இல்லை
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஜி.எஸ் பி பிளஸ் சலுகைக்காக நாட்டின் இறைமை சுய கௌரவத்தை காட்டி கொடுக்க வேண்டியதில்லை- அமைச்சர் ஜி. எல். பீரிஸ்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates