விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய நபர் ஒருவர் சிங்கப்பூரில் கைது
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களை விநியோகம் செய்த நபர் ஒருவர் சிங்கப்பூரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சிங்கப்பூர் சட்டவிரோத ஆயுத வர்த்தகரான பால்ராஜ் நாயுடு என்ற நபரே இவ்வாறு கைது செய்யப்பட்ள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.குறித்த நபர் தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதனின் மிக முக்கிய நண்பர் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்மையில் கிளிநொச்சி, முல்லைத்தீவு பகுதிகளிலிருந்து மீட்கப்பட்ட ஆயுதங்களைக் கொண்டு விசாரணைகள் நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூரில் தயாரிக்கப்பட்ட பெருந் தொகை ஆயுதங்கள் கிடைக்கப் பெற்றதனை அடுத்து புலனாய்வுப் பிரிவினர், சிங்கப்பூர் இரகசிய காவல்துறையினருக்கு இது குறித்து அறிவித்துள்ளனர்.
இந்தத் தகவல்களின் அடிப்படையில் குறித்த நபரை அந்நாட்டு இரகசிய காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
குறித்த நபர் சிங்கப்பூர் அரசியல் கட்சியொன்றின் உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.







0 Response to "விடுதலைப் புலிகளுக்கு ஆயுதம் வழங்கிய நபர் ஒருவர் சிங்கப்பூரில் கைது"
แสดงความคิดเห็น