jkr
แสดงบทความที่มีป้ายกำกับ கைது แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ கைது แสดงบทความทั้งหมด

தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கி பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சூடு வைத்த தந்தை கைது


தனது எட்டுவயது மகளைக் கடுமையாகத் தாக்கியதுடன் பழுக்கக் காய்ச்சிய இரும்பினால் சிறுமிக்கு சூடு வைத்த சந்தேகத்தின்பேரில் சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு அவிசாவளைப் பொலீசார் தெரிவித்துள்ளனர். இச்சிறுமியின் தாய் தொழிலுக்காக வெளியில் சென்றிருந்தபோது தந்தை கூறிய ஏதோ ஒரு வேலையை செய்யாமல் சிறுமி அடம்பிடித்தார் எனவும், இதனால் கோபமுற்ற தந்தை, மகளை சரமாரியாக தாக்கியதுமல்லாமல் இரும்புக் கம்பியொன்றை சூடாக்கி அவரது உடலில் சூடு வைத்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது. சிறுமியின் கதறலைக் கேட்டு அங்கு திரண்ட அயலவர்கள் உடனடியாக பொலீசாருக்கு தகவல் வழங்கியதைத் தொடர்ந்து அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தீக்காயத்துக்கு உள்ளான குழந்தை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!


கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!


எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று திருமணம் செய்ய முயன்ற 26வயதானவர் கைது, சிறுமியும் மீட்பு!


12வயது சிறுமியை ஏமாற்றி அழைத்துச்சென்று திருமணம்செய்ய முயன்ற 26வயதானவர் கைது செய்யப்பட்டதுடன் சிறுமியும் மீட்கப்பட்டுள்ளார். இச்சம்பவம் பண்டாரகம பகுதியில் இடம்பெற்றுள்ளது. பண்டாரகம பொலிசாருக்கு கிடைத்த தகவல்படி இளைஞருக்கும் சிறுமிக்கும் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்தமாதம் 19ம்திகதி சிறுமியின் தாயார் பண்டாரகம நகரம் சென்றிருந்த போது சிறுமி பக்கத்து கடையில் ஜஸ்பெக்கட் வாங்கச் சென்றதாகவும், அச்சமயம் குறித்த இளைஞர் சிறுமியை ஏமாற்றி அழைத்துச் சென்று பண்டாரகம விலாச்சியப் பகுதியிலுள்ள உறவினர் வீட்டிற்கு பத்துநாட்கள் தங்கியிருந்ததாகவும் தெரிய வருகிறது. பின்னர் சிறுமியை இளைஞர் தனது வீட்டுக்கு அழைத்து வந்து திருமணம் செய்வதற்கு பெற்றோரிடம் சம்மதம் பெற்று திருமண ஏற்பாட்டை செய்து கொண்டிருந்த நிலையில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். வீட்டைவிட்டு வெளியேறி தன்னைச் சந்திக்குமாறு இளைஞர் சிறுமிக்கு எழுதிய கடிதமும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சிறுமி பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விசாரணைகள் தொடர்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட மாணவர்கள் உள்ளிட்ட நால்வர் கைது!


போலி ஆயிரம் ரூபாய் நாணயகத் தாள்களை அச்சிட்ட நால்வரை புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். அண்மையில் யுத்த வெற்றியை நினைவுகூரும் வகையில் வெளியிடப்பட்ட ஜனாதிபதியின் படத்துடன் கூடிய ஆயிரம் ரூபா நாணயத்தாள்களே இவ்வாறு போலியாக அச்சிடப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட நான்கு சந்தேகநபர்களில் மூவர் பாடசாலை மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. கைது செய்யப்பட்ட மாணவர்களில் இருவர் கணனி டிப்ளோமாவை பூர்த்தி செய்தவர்கள் எனவும், மற்றயைவர் தற்போது கணனி பயிற்சி நெறியொன்றை பயின்று வருபவரென்றும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த சந்தேகநபர்களுடன் 212போலி ஆயிரம்ரூபாய் நோட்டுக்களும் மீட்கப்பட்டுள்ளன. கொழும்பு, ரத்மலானை, அவிசாவளை, மற்றும் மகரகம ஆகிய பகுதிகளில் வைத்து சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதேவேளை போலி நாணயத் தாள்கள் தொடர்பில் மக்கள் விழிப்புடன் செயற்பட வேண்டுமென பொலீசார் கோரிக்கை விடுத்துள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தனது 15வயது மகளிடம் தந்தையின் தகாத உறவு வெளிச்சத்துக்கு வந்தது..


தனது 15வயது மகளிடம் தகாதஉறவு கொண்டு வந்த தந்தையொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். புளத்சிங்கள பிரதேசத்தைச் சேர்ந்த வெல்கம என்ற இடத்தி;ல் வசிக்கும் 42வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப் பட்டவராவார். கடந்த ஒருவருட காலமாக இடம்பெற்று வந்த இந்த முறைக்கேடான உறவு சம்பந்தப்பட்ட மகள் கருவுற்று ஹொரணை வைத்தியசாலையில் சிகிச்சையின் பொருட்டு அனுமதி பெறச்சென்ற வேளையிலேயே சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. குறித்த பெண்ணின் தாயார் மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் தான் தனிமையில் இருக்கும் வேளையில் குறி;த்த மகளிடம் காமுக தந்தை சில்மிஷங்களையும் உடலுறவையும் வைத்துக் கொள்வதை வழமையாகக் கொண்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கட்டுகஸ்தோட்டை இராணுவவீரர் ஆயுதங்களுடன் கைது


கட்டுகஸ்தோட்டை பஸ்கொல்லாமட பகுதியில் இராணுவக் கோப்ரல் ஒருவர் துப்பாக்கிகள், மற்று ஒருதொகை ரவைகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கண்டி குற்றத் தடுப்புப் பிரிவின் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் உள்ளிட்ட குழுவினரால் இன்று அதிகாலை குறிப்பிட்ட இராணுவக் கோப்ரல் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

சந்தேக நபரின் வீட்டிலிருந்து ரீ 56 ரகத் துப்பாக்கிகள் 4, மெகசீன்கள் 4, கைத்துப்பாக்கி 1, மற்றும் துப்பாக்கி ரவைகள் என்பன கைப்பற்றப்பட்டதாகப் பொலிசார் தெரிவித்தனர்.

இந்த இராணுவ கோப்ரல் ஆனையிறவு இராணுவ முகாமில் கடமையாற்றியவரென விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கிளிநொச்சி உழவு யந்திரத்துடன் படைவீரர் கைது


கிளிநொச்சி கனகராயன்குளத்தில் கைவிடப்பட்டிருந்த உழவு யந்திரத்தை எடுத்துவந்ததாகக் கூறப்படும் இராணுவ வீரரொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.

மதவாச்சிபொலிசார் இவரைக் கைதுசெய்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

உழவு யந்திரத்துடன் அதன் 'ட்றெய்லர்' பெட்டியையும் மதவாச்சிப் பொலிசார் கைப்பற்றியதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

காணாமல்போன வர்த்தகரும் தோழர்களும் இரகசியப் பொலிசில்

நேற்று நள்ளிரவுமுதல் காணாமல் போனதாக நம்பப்படும் வத்தளைப் பகுதியைச் சேர்ந்த தேயிலை வர்த்தகரும் அவரின் நண்பர்கள் மூவரும் இரகசியப் பொலிசாரின் பொறுப்பில் உள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஐ.எம்.கருணரத்ன இதனை உறுதி செய்தார்.

வர்த்தகரின் நண்பர்களுள் உப பொலிஸ் இன்ஸ்பெக்டர் ஒருவரும் உள்ளார்.

இவர்கள் பயணம் செய்த 'கப்' வாகனம் காசல் வீதியில் வைத்து நேற்று அதிகாலை பொலிசாரினால் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து இரண்டு விசேட பொலிஸ் குழுக்கள் இது தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்தன.

ஆனால் காணாமல் போனவர்கள், 'கப்' வண்டியிருந்த இடத்திலேயே இரகசியப் பொலிசாரினால் கைது செய்யப்பட்டதாகத் தகவல் கிடைத்ததும், விசாரணைகள் இடை நிறுத்தப்பட்டதாக விசாரணையை நடத்திய பொலிஸ் உயரதிகாரி குறிப்பிட்டார்.

இரகசியப் பொலிசார் இவர்களைக் கைது செய்ததற்கான காரணமெதுவென இன்னும் தெரிய வரவில்லையெனப் பொலிசார் கூறினர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குண்டு பொருத்திய வாகனம் நீர்கொழும்பில் கண்டு பிடிப்பு


குண்டு பொருத்திய வாகனம் நீர்கொழும்பில் கண்டு பிடிப்பு

குண்டுகள் பொருத்தப்பட்ட நிலையில் ஏதேனுமொரு தாக்குதலுக்குத் தயாராக வைத்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் வேன் ஒன்றை நீர் கொழும்பு விஷேட புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். அத்துடன் யாழ்ப்பாண வாஸியான எஸ். தயாபரன் எனும் நபரும் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந் நபர் 1990ம் வருடம் முதல் நீர்கொழும்பு பகுதியில் வசித்து வருபவர் என்றும் 2008ம் வருடம் கொள்வனவு செய்யப்பட்டுள்ள மேற்படி வேன் பாடசாலை மானவர்களின் போக்குவரத்திற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது என்றும் தெரியவந்துள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கட்டுநாயக்காவில் நான்கு இளைஞர்கள் கைது


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலைய உயர்பாதுகாப்பு பகுதியில், நான்கு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இரண்டு தமிழ் இளைஞர்களும் இரண்டு சிங்கள இளைஞர்களுமே கைது செய்யப்பட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தம்மை அடையாளப்படுத்த தவறியமையே கைதுக்கான காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடங்களில் உள்ள இளைஞர்களும் யுவதிகளும், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுவதற்காக கட்டுநாயக்க பிரதேசத்தில் தங்கியுள்ள நிலையிலேயே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தியாகோகார்சியாத் தீவில் இலங்கை மீனவர்கள் கைது


பிரித்தானியாவுக்குச் சொந்தமான தியாகோ கார்சியாத் தீவுக் கடற்பிரதேசத்தி இலங்கை மீனவர்கள் குழுவொன்றை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த மீனவர்கள் பயன்படுத்திய படகினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.

நீர்கொழும்புப் பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற இந்தப் படகில் ஐந்து மீனவர்கள் பயணித்துள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.

இந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளூடாக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.

இதே வேளை 13 படகுகளில் சென்ற 68 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

சர்வதேசக் கடல் எல்லைகளைத் தாண்டிச் செல்லாமல் தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளபோதிலும், மீனவர்கள் சட்டங்களைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்வதால் சிக்கல் நிலை தோன்றுவதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே ஏ பியசேன தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய கரையோர படையினரால் இலங்கை மீனவர்கள் 68 பேர் கைது-படகுகளில் பிடித்த மீன்களும் பறிமுதல்


இந்தியாவின் பிரத்தியேக பொருளாதார வலயத்திற்குள் மீன் பிடித்தமைக்காக அந்நாட்டு கரையோர காவற்படையினர் 68 இலங்கை மீனவர்களை கைது செய்ததோடு 13 படகுகளையும் அவர்கள் பிடித்த 6,600 கிலோகிராம் மீன்களையும் கைப்பற்றியுள் ளனர். சனிக்கிழமை கைது செய்யப்பட்ட மீனவர்கள் அவர்களது படகுகளுடன் காசிமேடு மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு துறைமுக பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்கள்.

கரையோர காவற்படையின் பிரதம பொதுஜன தொடர்பு அதிகாரி கமாண்டர் ராஜேந்திர நாத் காசிமேடு துறைமுகத்தில் செய்தியாளர்கள் மத்தியில் பேசிய போது, ஒருங்கிணைக்கப்பட்ட கடல் மற்றும் ஆகாய மார்க்க ரோந்து நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னையிலிருந்து கரையோர வேவுக் கடமையில் ஈடுபடுத்தப்பட்ட காவற்படை விமானத்தினால் தமிழ் நாட்டின் வட பகுதியிலும் ஆந்திரா பிரதேசத்தின் தென் பகுதியிலும் உள்ள இந்திய கடற்பரப்புக்குள் இந்த இலங்கை மீன் பிடிக் கப்பல்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று தெரிவித்தார்.

வேவு விமானம் கரையோர காவற்கரைக் கப்பலுக்கு அறிவித்ததையடுத்து ஐ. சி. ஜி. எஸ். விக்ரம் என்ற கப்பல் அவ்விடத்திற்குச் சென்று படகுகளுடன் இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். கடந்த ஜனவரி மாதத்திலிருந்து இதுவரை கரையோர காவற்படையினரால் மொத்தம் 553 இலங்கை மீனவர்கள் கைது செய்யப்பட்டதுடன் 106 படகுகளும் கைப்பற்றப்பட்டதாக தெரிவித்த பொலிஸ் கமாண்டர் ராஜேந்திர நாத் கடந்த 6 மாதங்களில் மட்டும் 69 படகுகள் கைப்பற்றப்பட்டதுடன் 359 இலங்கை மீனவர்கள் கை

து செய்யப்பட்டார்கள் என்றும் கூறினார். கைது செய்யப்பட்ட மீனவர்களில் 547 பேர் 130 படகுகளுடன் பின்னர் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு விட்டதாகவும் அவர் தெரிவித்தார். தற்போது 40 இலங்கைப் படகுகள் காசிமேடு துறைமுகத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப விசாரணைகளிலிருந்து இந்த மீனவர்களுக்கு பயங்கரவாதிகளுடன் எவ்வித தொடர்பும் இல்லை என்றும் இந்திய கடற்பரப்புக்கள் மீன்பிடிப்பதில் அவர்கள் ஈடுபட்டார்கள் என்றும் தெரிய வந்துள்ளதாகவும் நாத் தெரிவித்தார். செய்தியாளர்களிடம் பேசிய மீனவர்கள், தாங்கள் தவறுதலாக இந்திய கடற்பரப்புக்குள் வந்துவிட்டதாகவும் தங்களை விரைவில் இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறும் கேட்டுக் கொண்டனர். காசிமேட்டை சேர்ந்த மீனவர் சி. சைமன் கருத்து தெரிவிக்கையில், இந்திய கரையோர காவற்படையினர் இலங்கை மீனவர்களை கைது செய்யும் போது, அவர்கள் கௌரவமாக நடத்தப்படுவதுடன் நன்கு பராமரிக்கப்படுகிறார்கள். அவர்களது படகுகளும் எங்கள் பொலிஸாரால் நன்கு பாதுகாக்கப்படுகின்றன. ஆனால் இலங்கை கடற்படையினர் எங்களை பிடிக்கும் போது நடப்பது வேறு. எங்களை நையப்புடைப்பது மட்டுமன்றி எங்கள் படகுகள் திருப்பித் தரப்படுவது பற்றிய பேச்சே இல்லை என்று கூறினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புத்தளத்தில் 11 வயது சிறுமி மூன்று பேரால் கற்பழிப்பு


புத்தளம் பாலாவியா பகுதியில் வீடு ஒன்றுக்குள் புகுந்த மூவர் அங்கிருந்த 11 வயது சிறுமியை மாறி மாறி கற்பழித்துள்ளனர். வீட்டுக்கதவை உடைத்துக்கொண்டு புகுந்த அம்மூவரும் சிறுமியின் தகப்பனாரையும், அம்மம்மாவையும் கட்டிப்போட்டுவிட்டு இந்த கொடூரத்தைச் செய்துள்ளனர். சிறுமியில் கூக்குரலையடுத்து அந்த வீட்டைச் சுற்றிவளைத்த அக்கம்பக்கத்தினரால் இருவர் கைது செய்யப்பட்டனர். மூன்றாவது நபர் தப்பியோடிவிட்டார்.

கைதுசெய்யப்பட்ட இருவரும் இரவு முழுவதும் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்தனர். நேற்று காலையில் புத்தளம் போலீசார் அவர்களைத் தமது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளனர். இச்சம்பவம் குறித்த விசாரணைகளைத் தாம் ஆரம்பித்துள்ளதாக போலீஸ் கூறியுள்ளது. சிறுமியின் தாயார் வெளிநாடு ஒன்றில் உள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சீமான் கனடாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.


கனடாவில் இடம்பெறவுள்ள மாவீரர் நாள் நிகழ்வுகளில் கலந்து கொள்ளச் சென்றிருந்த இந்திய பட இயக்குனர் சீமான் கனடிய பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று இரவு கனடாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் அவர் நிகழ்த்திய உரையில் பயங்கரவாதத்தை தூண்டும் கருத்துக்கள் காணப்பட்டதை தொடர்ந்தே, அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக நம்பப்படுகின்றது. கைவிலங்கிட்டு கனடிய குடிவரவு குடியகல்வு தடுப்பு நிலையத்திற்கு அழைத்து வந்த பொலிஸார் அவரை அங்கு தடுத்து வைத்துள்ளதாகவும், அவர் நாடுகடத்தப்படலாம் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றது. இதே வேளை கனடாவில் ஒழுங்கு செய்யப்பட்டு இருந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்ததின நிகழ்வில் இன்று இரவும் சீமான் உரையாற்ற இருந்தார் என்றும், நாளை நடைபெறும் நிகழ்விலும் உரையாற்ற இருந்தார் என்றும் கனேடியத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கனடாவில் இருக்கும் இலங்கைத் தூதரகம் கனேடிய அரசாங்கத்திற்கு வழங்கிய அழுத்தம் காரணமாகவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதாகவும் நாளை நடைபெறவுள்ள மாவீரர் தினத்தில் சீமான் ஆற்ற இருந்த உரையை தடுப்பதுவே சீமான் அழைத்துச் செல்லப்பட்டதற்கான பிரதான காரணம் எனவும் இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சார்ள்ஸ் அன்ரனியின் சாரதிகள் கைது


புலித்தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வர் சார்ள்ஸ் அன்ரனியின் சாரதிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

சார்ள்ஸ் அன்ரனிப் படைப்பிரிவை வழிநடத்திய பிரபாகரனின் புதல்வரது பிரத்தியேக சாரதிகளாக குறித்த நபர்கள் கடயைமாற்றியுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. போல் எனப்படும் பபாலீமா மற்றும் உகா ஆகியோர் அடம்பன் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. வவுனியா இடம்பெயர் கிராமமொன்றிலிருந்து குறித்த நபர்கள் மீள் குடியேற்ற கிராமம் ஒன்றுக்கு சென்றிருந்த வேளையில் தகவல் ஒன்றினை அடுத்து கைது செய்யப்பட்தாக மன்னார் பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புத்தளத்தில் கைதான பொறியியலாளர்,தொழில்நுட்ப அதிகாரிகள் பிணையில் விடுதலை


புத்தளத்தில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட மீள்குடியேற்ற,அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சின் கீழ் இயங்கும் உலக வங்கி வீடமைப்புத்திட்ட பொறியியலாளர் இருவர் மற்றும் ஒரு தொழில் நுட்ப அதிகாரி ஆகியோரை இம்மாதம் 25 ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

பிறமாவட்டங்களில் இருந்து வந்து தங்குவோர் பதியும் 23 படிவங்களைப் பதிவு செய்யாததாலேயே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புத்தளம் அநுராதபுரம் வீதியில் தமது தங்குமிடத்தில் இருந்த போது, புத்தளம் பொலிஸாரால் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு புத்தளம் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர். தாங்கள் அரசாங்க நிறுவனத்தில் பணியாற்றுவதாகப் பொலிஸாரிடம் தெரிவித்த போதும், பலன் கிட்டவில்லை.

பின்னர் நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்திய போது,இவர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ஏ.எம்.கமர்தீன்,ஜ.நிஸ்மி ஆகியோர்,தமது கட்சிக்காரர்கள் அரச அதிகாரிகள் என்பதால் அவர்களுக்கு பிணை வழங்குமாறு விண்ணபித்தனர். இதன்போது,இம்மூவரையும் சரீர பிணையில் செல்ல அனுமதித்த நீதவான்,வார நாட்களில் புத்தளம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள புத்தகத்தில் கையொப்பமிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட அதிகாரிகள் யாழ்ப்பாணம் புத்தூர்,யாழ்ப்பாணம்,சாவகச்சேரி பகுதிகளைச் சேர்ந்த விஜயநாதீஸ்வரன் துஷ்யந்தன்,குகனேஸ்வரன் பிரதீபன்,ஜெகதீஸ்வரன் பிரேம்குமார் ஆகியோர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலஞ்சம் பெற்ற நீதிமன்றத்தின் பதிவாளர் அதிகாரிகளால் கைது- அம்பாறையில் சம்பவம்


நீதிமன்றப் பதிவாளர் ஒருவர் மனுதாரரொருவரிடமிருந்து இலஞ்சம் பெற்ற போது, இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளிடம் கையும் மெய்யுமாகப் பிடிபட்ட சம்பவமொன்று அம்பாறை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள பதிவாளர் அலுவலகத்துக்குள் வைத்து குறித்த மனுதாரரிடமிருந்து மூவாயிரம் ரூபா பணத்தொகையினை இலஞ்சமாகப் பெந்றுக்கொள்ளும் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பிரதிப் பணிப்பாளரும் பொலிஸ் அத்தியட்சருமான சோமவீர லொகுகே தகவல் தருகையில் கூறியதாவது :

சீட்டுப் பணத்தை வழங்கத் தவறினார் என்ற குற்றச்சாட்டின் பேரில் சந்தேக நபர் ஒருவருக்கு எதிராக அம்பாறை நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கொன்று தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையை அடுத்து குறித்த சந்தேக நபர் குற்றவாளியென தீர்ப்பு வழங்கப்பட்டதுடன் அவருடைய சொத்துக்களை ஏலத்தில் விடவும் நீதிமன்றத்தினால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் குற்றவாளியின் சொத்துக்களை ஏலத்தில் விடுவதற்காக அண்மைக்காலத் திகதியொன்றைப் பெற்றுக்கொடுக்குமாறு மனுதாரரினால் குறித்த பதிவாளருக்கு மூவாயிரம் ரூபா பணம் இலஞ்சமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த இலஞ்சப் பணத்தை மேற்படி பதிவாளர் பெற்றுக்கொள்ளும் தருவாயில் அவ்விடத்துக்குச் சென்ற இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகள் அவரைக் கையும்மெய்யுமாகக் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் தடுத்து வைக்கப்பட்டு தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றார். உரிய விசாரணைகளை அடுத்து அவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கொழும்பு கண்டி தனியார் பஸ் ஒன்றில் வைத்து 16வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சேஷ்டைக்கு


கொழும்பு கண்டி தனியார் பஸ் ஒன்றில் வைத்து 16வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் சேஷ்டைக்கு உட்படுத்த எத்தனித்த அதே பஸ்வண்டியின் நடத்துனர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார் பிரஸ்தாப சந்தேகநபரை பொலிஸார் கண்டி பிரதம மஜிஸ்ரேட் சுமுது பிரேமசந்திர முன்னிலையில் ஆஜர் செய்யப்பட்ட வேளையில் நடத்துனர் விளக்கமறியலில் வைக்கப்பட்டார். கடவத்தை பிரதேசத்தில் வசிப்பவரான இந்த சந்தேகநபரின் பெயர் சாந்தகீர்த்தி என தெரிவிக்கப்படுகிறது மாத்தளைப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரஸ்தாப பாடசாலை மாணவி தனது தந்தையுடனும் சகோதரியுடனும் கொழும்பில் இருந்து கண்டி நோக்கி தனியார் பஸ்ஸில் பிரயாணம் செய்தவேளையில் பஸ்தரிப்பு நிலையத்தில் இவ்விதம் பாலியல் சேஷ்டைக்கு எத்தனித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். கண்டி தலைமைப் பொலிஸ் நிலைய பிரதம இன்ஸ்பெக்டர் அனுருத்த பண்டாரநாயக்கவின் உத்தரவின் பேரில் விசாரணை இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மத்திய வங்கி குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது


இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.செல்லத்தம்பி நவரட்ணம் எனப்படும் இச்சந்தேகநபர் செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி கட்டிட குண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீதிமன்றத்துற்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.

இந்நிலையில் இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.

இடம்பெயர்ந்தவர்களை, மீள பதிவு செய்யும் செயல் திட்டத்தின் கீழ் 60 வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதே 53 வயதான இவர் போலியான தகவல்களை வழங்கி உடரிக்குளம் பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவரது தேசிய அடையாள அட்டை முகவரியின்படி மருதநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates