எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!
எட்டுவயது சிறுமிக்கு சொக்லட் வாங்கிக் கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய நபரொருவரை தங்கொட்டுவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சிறுமியின் தாய் தங்கொட்டுவ பொலிஸில் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு விளையாட்டு வைபவங்கள் இடம்பெற்றுக் கொண்டிருக்கையில் சிறுமிக்கு சொக்லேட் வாங்கித் தருவதாக கூறிய நபர் மறைவான இடத்திற்கு அழைத்துச் சென்று வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார் எனவும் அப்பகுதியினூடாக சென்றுக் கொண்டிருந்த பெண்ணொருவர் இதைக்கண்டு தாயாருக்கு தகவல் வழங்கியுள்ளார் எனவும் பொலிஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதன் பின்னர் சிறுமி மீட்கப்பட்டுள்ளதோடு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
0 Response to "எட்டு வயது சிறுமிக்கு சொக்லட் கொடுத்து வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்தவர் கைது!"
แสดงความคิดเห็น