தியாகோகார்சியாத் தீவில் இலங்கை மீனவர்கள் கைது
பிரித்தானியாவுக்குச் சொந்தமான தியாகோ கார்சியாத் தீவுக் கடற்பிரதேசத்தி இலங்கை மீனவர்கள் குழுவொன்றை அந்த நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இந்த மீனவர்கள் பயன்படுத்திய படகினையும் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
நீர்கொழும்புப் பிரதேசத்திலிருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற இந்தப் படகில் ஐந்து மீனவர்கள் பயணித்துள்ளதாக கடற்றொழில் பிரதியமைச்சர் நியோமல் பெரேரா தெரிவித்தார்.
இந்த மீனவர்களை விடுவிப்பது தொடர்பாக சிங்கப்பூர் அதிகாரிகளூடாக விசேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் சொன்னார்.
இதே வேளை 13 படகுகளில் சென்ற 68 இலங்கை மீனவர்களை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேசக் கடல் எல்லைகளைத் தாண்டிச் செல்லாமல் தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளபோதிலும், மீனவர்கள் சட்டங்களைப் பொருட்படுத்தாமல் நடந்துகொள்வதால் சிக்கல் நிலை தோன்றுவதாக கடற்றொழில் அமைச்சின் செயலாளர் கே ஏ பியசேன தெரிவித்தார்.
0 Response to "தியாகோகார்சியாத் தீவில் இலங்கை மீனவர்கள் கைது"
แสดงความคิดเห็น