மத்திய வங்கி குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது

இலங்கை மத்திய வங்கி குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.செல்லத்தம்பி நவரட்ணம் எனப்படும் இச்சந்தேகநபர் செட்டிக்குளம் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த 1996 ஆம் ஆண்டு இடம்பெற்ற மத்திய வங்கி கட்டிட குண்டு தாக்குதலில் 100 இற்கும் மேற்பட்ட பொதுமக்கள் உயிரிழந்ததுடன் பலர் காயமடைந்தனர்.இச்சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் நீதிமன்றத்துற்கு சமூகமளிக்காத நிலையில் அவருக்கு 200 வருட சிறைத்தண்டனை வழங்கப்பட்டது.
இந்நிலையில் இவர் தற்போது கைதுசெய்யப்பட்டு குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
இடம்பெயர்ந்தவர்களை, மீள பதிவு செய்யும் செயல் திட்டத்தின் கீழ் 60 வயதானவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டிருந்த போதே 53 வயதான இவர் போலியான தகவல்களை வழங்கி உடரிக்குளம் பிரதேசத்தில் மீள் குடியேறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவரது தேசிய அடையாள அட்டை முகவரியின்படி மருதநகர் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்ததை அடுத்து, அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.







0 Response to "மத்திய வங்கி குண்டு தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேக நபர் கைது"
แสดงความคิดเห็น