கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!
கிறடிற்காட் மோசடிகளுக்காக கனடட்டை தகவல்களை இணையதளம் ஊடாக வெளியிட்ட இலங்கை தமிழரான ரேணுகாந் சுப்பிரமணியம் என்பவர் பிரித்தானியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியா, அமெரிக்க பொலிஸாரின் கூட்டு நவடிக்கை மூலம் கைது செய்யப்பட்ட மேற்படி நபர் லண்டன் வெம்பிளி பகுதியில் பீற்ஷா டிலிவரியை தொழிலாக கொண்டிருந்தவர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
100 மில்லியன் பவுண்ஸ் பிரித்தானிய நாணயத்தை மோசடி மூலம் பெறும் நோக்கடன் செயற்பட்டுவந்தபோதே இவரை நீண்டநாட்களாக பின்தொடர்ந்த அமெரிக்கா, பிரித்தானிய கூட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இவருடன் சம்பந்தப்பட்ட 60பேர் வரை பிரித்தானியா, அமெரிக்கா, கனடா, ஜேர்மனி, பிரான்ஷ், ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்தும் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள ரேணுகாந் சுப்பிரமணியத்தின் வழக்கு லண்டன் பிளாக் கிறவுண் நீதிமன்றில் இடம்பெறவுள்ளது.
0 Response to "கடனட்டை தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டு பணமோசடியில் ஈடுபட்ட இலங்கையர் பிரதித்தானியாவில் கைது!"
แสดงความคิดเห็น