இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது

இந்திய கடல் பகுதிகளில் இந்திய கடலோர காவல் படையினர் இன்று காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது 6 படகுகளில் 46 இலங்கை மீனவர்கள் அத்துமீறி இந்திய எல்லையில் மீன் பிடிப்பதைக் கண்டனர்.
உடனே அங்கு விரைந்து சென்று, அவர்களை சுற்றிவளைத்து பிடித்து காசிமேடு மீன்பிடி துறைமுக போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து ஒப்படைத்தனர்.
அவர்கள் வந்த 6 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.
0 Response to "இந்திய கடல் பகுதிக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள் 46 பேர் கைது"
แสดงความคิดเห็น