விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்! - ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அச்சம்

தமிழீழ விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கும் அபாயம் நிலவுவதாக சிறீலங்கா பிரதமர் ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அச்சம் வெளியிட்டுள்ளார்.
நியூயோர்க்கில் இடம்பெற்ற ஆசிய சமூக மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் பொழுதே இவ்வாறு சிறீலங்கா பிரதமர் தெரிவித்துள்ளார்.
மூன்று தசாப்தங்களாக இடம்பெற்ற யுத்தத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளை தமது படையினர் தோற்கடித்துள்ள பொழுதும், அவர்கள் மீண்டும் தலைதூக்கக்கூடிய அபாயம் நிலவுவதாகவும், இதனை தடுத்து நிறுத்துவதற்கான முயற்சிகளிலேயே தாங்கள் தற்பொழுது ஈடுபடுவதாகவும், சிறீலங்கா பிரதமர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
0 Response to "விடுதலைப் புலிகள் மீண்டும் தலைதூக்கக்கூடும்! - ரட்ணசிறீ விக்கிரமநாயக்க அச்சம்"
แสดงความคิดเห็น