10,000 புலிகளை என்ன செய்வது? அமெரிக்காவிடம் இலங்கை ஆலோசனை
வன்னிப்போர் நிறைவின் பின்னர் தாம் கைது செய்த மற்றும் சரணடைந்த புலி உறுப்பினர்கள் சுமார் 10,000 பேர்வரை உள்ளதாகக் கூறியுள்ள இலங்கை அரசு அவர்களைக் கையாளும் விதம் குறித்து அமெரிக்காவின் ஆலோசனை பெற உள்ளதாம். இதற்காக இலங்கை சட்டமா அதிபர் மோகன் பீரிஸ் நாளை வோஷிங்டனை சென்றடையவுள்ளார். குறிப்பாக நியூயோர்க் 9/11 தாக்குதலின் பின்னர் அல் கெய்தா அமைப்பினரை அமெரிக்கா எவ்வாறு கையாண்டது என்பதைக் கேட்டறிய உள்ளதாம் இலங்கை.
எனவே அமெரிக்க சட்டமா அதிபர், மற்றும் சட்டமா அதிபர் அலுவலக அதிகாரிகளுடன் இதுகுறித்து மோகன் பீரிஸ் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரக அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கமைய அவர்களே இந்த பயணத்தை ஒழுங்குபடுத்திக் கொடுத்துள்ளதாக ராஜாங்க வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.
0 Response to "10,000 புலிகளை என்ன செய்வது? அமெரிக்காவிடம் இலங்கை ஆலோசனை"
แสดงความคิดเห็น