யால வனப்பகுதிக்குள்புலிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது

இந்தத் தகவல் வெளியானதை அடுத்து யால வனப்பகுதியின் எல்லையில் சேனைப் பயிர்ச் செய்கையில் ஈடுபடும் விவசாயிகளை அந்தப் பிரதேசத்திற்குச் செல்ல வேண்டாம் எனக் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
யால வனத்திற்குள் விடுதலைப் புலிகள் அமைப்பில் தற்போது எஞ்சியிருக்கும் சிரேஸ்ட தலைவர்களான கேர்ணல் ராம் மற்றும் கேர்ணல் நகுலன் தலைமையிலான குழுக்கள் மறைந்திருப்பதாக பாதுகாப்புத் தரப்பினருக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
யால வனப்பகுதியின் எல்லையில் அமைந்திருக்கும் கிராமங்களுக்கு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல் எதிர்வரும் 29ம் திகதி மொனராகலை காவல்துறை அத்தியட்சகர் தலைமையில் கொட்டியாகல பிரதேசத்தில் நடைபெறவுள்ளதாக பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.
0 Response to "யால வனப்பகுதிக்குள்புலிகள் மறைந்திருப்பதாக பாதுகாப்பு தரப்பு கூறுகின்றது"
แสดงความคิดเห็น