அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு என்றுமில்லாதவாறு பெரும் பற்றாக்குறை கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் திண்டாட்டம்
அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு ஏற்பட்டுள்ள பெரும் கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தியாளர்கள் திண்டாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவும், ஜனநாயக கட்சியின் கட்டுப்பாட்டிலுள்ள அமெரிக்கப் பாராளுமன்றமும் துப்பாக்கி பாவனைக்கு எதிரான சட்டமூலம் ஒன்றை நிறைவேற்றக் கூடும் என்ற அச்சம் காரணமாக துப்பாக்கி பாவனையாளர்கள் ரவைகளை பெருந்தொகையாக வாங்கி கையிருப்பில் வைத்துக்கொள்ள ஆரம்பித்ததையடுத்தே இந்தத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பராக் ஒபாமா, துப்பாக்கி பாவனைக்கு எதிரான சட்டமூலம் தொடர்பில் இதுவரை எதுவித பிரேரணையையும் முன்வைக்காத நிலையிலேயே இந்த திடீர் அச்சம் பரவியுள்ளது. அதுமட்டுமல்லாது மக்கள் தேசிய பூங்காவுக்குள் துப்பாக்கியை எடுத்துச் செல்வதற்கு அனுமதிக்கும் சட்டமொன்றில் கடந்த மாதம் ஒபாமா கைச்சாத்திட்டமை குறிப்பிடத்தக்கது.
ஒபாமா ஒரு வருடத்திற்கு முன்பு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட போது துப்பாக்கி விற்பனை என்றுமில்லாது அதிகரித்ததுடன், அவர் பதவியேற்ற முதல் சில மாதங்களில் துப்பாக்கிகளுக்கான கொள்வனவு தொடர்ந்து கணிசமான அளவு அதிகரித்துள்ளது.
கடந்த ஜனவரி முதல் மே மாதம் வரையான காலப்பகுதியில், அதற்கு முந்திய வருடத்திலான இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில், துப்பாக்கி விற்பனையானது 25.6 சத வீதத்தால் அதிகரித்துள்ளதாக அமெரிக்க புலனாய்வு பணிமனையின் தேசிய குற்றவியல் பின்னணி பரிசோதனை முறைமை அமைப்பு அறிக்கையிட்டுள்ளது

0 Response to "அமெரிக்காவில் துப்பாக்கி ரவைகளுக்கு என்றுமில்லாதவாறு பெரும் பற்றாக்குறை கிராக்கியை ஈடுசெய்ய ஆயுத உற்பத்தி நிறுவனங்கள் திண்டாட்டம்"
แสดงความคิดเห็น