இரானின் ஏவுகணைச் சோதனைக்கு சர்வதேச சமூகம் விசனம்
நீண்ட தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை இரான் சோதித்திருப்பது விசனத்தை தூண்டும் செயல் என்று கூறி, அதை பிரிட்டனின் வெளியுறவுச் செயலர் டேவிட் மிலிபாண்ட் கண்டித்துள்ளார்.
எனினும் இந்தச் சோதனைகள், இந்த வாரத்தின் இறுதிப் பகுதியில் இரானுடைய அணுத்திட்டம் தொடர்பாக அந்த நாட்டுடன் சர்வதேச சமூகம் நடத்தவுள்ள பேச்சுவார்த்தைகளை திசை திருப்பிவிடக் கூடாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரான் நடத்தியுள்ள இந்தச் சோதனகள் கவலையளிக்கக் கூடிய வகையில் இருக்கின்றன என்று ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவு கொள்கை தலைவரான ஹாவியேர் சொலானா கூறியுள்ளார்.
ஆனால் சர்வதேச சமூகம் பொறுமை காக்க வேண்டும் என்று ரஷ்யா வலியுறுத்துகிறது.
வளைகுடாப் பகுதியில் இருக்கும் அமெரிக்க தளங்களை தாக்கும் வல்லமை கொண்ட இந்த ஏவுகணைகளை இரான் தனது தற்காப்பை முன்னிட்டே சோதித்ததாக அந்த நாடு கூறுகிறது.
இரான் தன்னிடம் இரண்டாவது அணுச் செறிவூட்டல் ஆலை ஒன்று உள்ளது என்ற உண்மையை வெளியிட்ட சில தினங்களிலேயே இந்தச் சோதனை இடம்பெற்றுள்ளது.
0 Response to "இரானின் ஏவுகணைச் சோதனைக்கு சர்வதேச சமூகம் விசனம்"
แสดงความคิดเห็น