நியூஸிலாந்து அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜெஸ்ஸி ரைடர் காயம் காரணமாக சாம்பியன்ஸ் கிண்ண தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதன்படி ஜெஸ்ஸி ரைடருக்கு பதில் அரோன் ரொட்மன்ட் சாம்பியன்ஸ் தொடருக்கான நியூஸிலாந்து அணியில் இணைக்கப்பட்டுள்ளார். நியூஸிலாந்து அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் மற்றும் 3 இருபது20 போட்டிகளில் விளையாடியுள்ள ரொட்மன்ட் இதுவரை ஒருநõள் சர்வதேச போட்டிகளில் விளையாடியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, இலங்கையுடனான போட்டியின்போது ஒழுங்கீனமாக செயல்பட்ட ரைடருக்கு ஐ.சி.சி. அபராதம் விதித்துள்ளது. நேற்று முன்தினம் நடந்த இந்த போட்டியில் 74 ஓட்டங்களை பெற்ற ரைடர் ஆட்டமிழந்து அரங்கு திரும்பியதன் பின் உடைமாற்றும் அரையில் இருந்த நாற்காலியை தனது துடுப்பாட்ட மட்டையால் தாக்கி உடைத்துள்ளார்.
இது ஐ.சி.சி. ஒழுங்கு விதி 1.2 ஐ மீறும் செயலாகும். இதனால் ரைடருக்கு ஐ.சி.சி. மத்தியஸ்தர் ஜவகல் ஸ்ரீனாத், போட்டிக் கட்டணத்தில் இருந்து 15 வீதம் அபராதம் விதித்தார்.

0 Response to " "
แสดงความคิดเห็น