நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல

நேற்று கொழும்பில் நடந்த வைபமொன்றில் உiரையாற்றியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
"இலங்கை இறைமையுள்ள ஒரு நாடு. ஜனநாயக முறைப்படி மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம் நாட்டை ஆட்சி செய்கின்றது. அதன் தலைவர் முப்படைகளுக்கும் தளபதியாவார். எனவே இறைமையுள்ள நாடொன்றுக்கு வெளியிலிருந்து அழுத்தம் பிரயோகித்து பக்கச் சார்புடன் நடந்துகொள்வதை எந்த விதத்திலும் ஏற்க முடியாது.
சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுச் சக்திகள் இத்தகைய அழுத்தங்களைப பிரயோகிக்க முயலுகின்றன. இலங்கையின் இறைமையைப் பாதுகாக்க இத்தகைய சக்திகளுக்கு எதிராக அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்கும்" என்றார்.
0 Response to "நாட்டின் இறைமைக்குக் குந்தகம் விளைவிக்க எவருக்கும் உரிமையில்லை : கெஹெலிய ரம்புக்வெல"
แสดงความคิดเห็น