கருணாநிதியின் கோரிக்கைக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாராட்டு
தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங் கைத் தமிழ் மக்களுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கவேண்டும் என மத்திய அரசாங்கத்தைக் கோரவிருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை, வாழும் கலை மன்றத்தின் தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாராட்டியுள்ளார். இலங்கை அகதிகள் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் பெற்றுள்ளார்கள். இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை கோரும் வாழும் கலை மன்றம், இந்தக் கோரிக்கையை ஆதரித்து ஒரு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்தக் கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர இருக்கும் வேளை யில் கருணாநிதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
முதலமைச்சர் இக்கோரிக்கையை முன்னெடுப்பதால் வாழும் கலை மன்றம் கையெழுத்து வேட்டையைக் கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
செப்டெம்பர் மாதம் காஞ்சிபுரத்தில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர், மத்தி அரசுடன் ஆலோசனை நடத்தி இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவரை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.
முப்பெரும் விழாவில் உரையாற்றிய கலைஞர் கருணாõநிதி, மத்திய அரசாங்கத் தின் கவனத்திற்கு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முகாம்களிலும், வேறு இடங்களிலும் வாழ்ந்துவரும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்கப் போவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.







0 Response to "கருணாநிதியின் கோரிக்கைக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாராட்டு"
แสดงความคิดเห็น