“வணங்கா மண்” பொருட்களை கைவிடுவதாக செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு
தடுப்பு முகாம்களில் போரினால் உள்ள தமிழர்களுக்காக ஐரோப்பிய தமிழர்கள் “வணங்கா மண்” நிவாரணப் பொருட்களை சிறுக சிறுக சேகரித்து, பல இன்னல்கலுக்கு நடுவில் தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் ஆழுத்தங்கள் காரணமாய் கொழும்பு கொண்டு சேர்க்கப்பட்டது.
இப்பொருட்களை விநியோகிக்க சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் முடிவெடுத்து, அதற்கான பணிகளில் நிவாரணப் பொருட்கள் கொழும்பு அடைந்ததிலிருந்து செய்து வந்தது. இந்நிலையில் நேற்று சிறீலங்கா செஞ்சிலுவை சங்கத்தின் துணை இயக்குநர் சுரேன் பெரீஸ் ‘டெய்லி மிரர்’ என்னும் ஆங்கல நாளிதலுக்கு கொடுத்த செய்தியில், தங்களது சங்கத்தின் தலைவர் சிறீலங்கா அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில், நிவாரணப் பொருட்கள் கொழும்பு துறைமுகத்தில் கிடப்பதால், அதற்கான வரி தொடர்ந்து ஏறிக் கொண்டு போகும் நிலையில், இவ்வரியை எப்படி எதிர்நோக்குவது என சிறீலங்கா அரசு இதுவரை எவ்வித நிலைப்பாடும் எடுக்காமல் இருந்து வருகிறது.
ஆதலால், வணங்கா மண் நிவாரணப் பொருட்களை தனது வசம் எடுத்து முள்வேலிக்கு பின்னுள்ள தடுப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு தங்கள் சங்கம் விநியோகிக்கும் பொறுப்பிலிருந்து கைகழுவி விட எண்ணியுள்ளதாய் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், துறைமுக கட்டண தள்ளுபடிக்கான எழுத்து பூர்வமான ஆவணம் சென்ற வாரமே தங்களுக்கு துறைமுக அமைச்சகத்திடமிருந்து கிடைக்கப் பெற்றபோதிலும், சிறீலங்கா அரசுக்கு வரி பாக்கி செலுத்த வேண்டியுள்ளது. இந்த வரிக்கான சலுகை பற்றி எவ்வித பயனுள்ள பதிலும் கிடைக்கப்பெறவில்லை. “வாட் வரி” மற்றும் தேசிய கட்டமைப்பு வரி (என்.பி.டி) கடந்த ஜீலை முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை சுமார் இருபது லட்ச ரூபாய் செலுத்தப்பட வேண்டியுள்ளது, என தெரிவித்தார்.
27 பெரிய பெட்டகங்களில் 884 டன் வணங்கா மண் நிவாரணப் பொருட்கள் கொழும்புக்கு கொண்டு வரப்பட்டது முதல் பல இடையூறுகளை சந்தித்து வந்திருக்கிறது. முதலில், சோதனை என்ற பெயரிலும், பின்னர் துறைமுக கட்டணம் என்ற பெயரிலும், இப்போது வரிக்காகவும் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்ட நிலையில், முள்வேலிக்கு பின் உள்ள தமிழர்களுக்கு அனுப்பப்படாமல் கிடப்பில் இருந்து வருகிறது.
தமிழக முதல்வர் இந்திய அரசை கேட்டுக் கொண்டதற்கிணங்கி, சிறீலங்காவின் உயர்மட்ட குழு இந்தியா வந்தபோது உடன்பாடு ஏற்பட்டது. தமிழக சட்டமன்றத்தில் ஒருமனதாய் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. தமிழக முதல்வரும் இந்திய அரசிற்கு இதுவரை இரு முறை கடிதம் எழுதியும் வணங்காமண் நிவாரணப் பொருட்கள் தமிழர்களுக்கு சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இக்கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாய் இந்திய பிரதமரும், தமிழக முதல்வருக்கு நிவாரணப் பொருட்களை சிறீலங்கா செஞ்சிலுவை சங்கம் எடுத்துக்கொண்டுள்ளதாயும், அப்பொருட்கள் தமிழ் மக்களுக்கு விரைவில் விநியோகிக்க சிறீலங்கா அரசு பார்த்து கொள்ளும் என கடிதம் எழுதியிருந்தார்.
மனித நேய அடிபடையில் கூட முள்வேலிக்கு பின்னால் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட வேண்டும் என்ற அக்கறையும் இல்லையென்பதே காட்டுகிறது.
இந்திய அரசு மீது சிறீலங்கா அரசு மதிக்காததற்கு இந்தியாவில் உள்ள அமைச்சர்களின் மெத்தனப்போக்கும், அவர்கள் வடக்கில் வசந்த ஒப்பந்தத்தை செயல்படுத்தினால், கிடைக்கப்போகும் “கொமிசன்” பணத்திற்காக சிறீலங்காவிடம் கையேந்தி நிற்பதினால் தான் என டெல்லி உள்ள அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "“வணங்கா மண்” பொருட்களை கைவிடுவதாக செஞ்சிலுவை சங்கம் அறிவிப்பு"
แสดงความคิดเห็น