வலைப்பூ என்னும் கடலில் கவிதை
வலைப்பூ என்னும் கடலில் கவிதை தேடி முக்குளித்த பொது கவிஞரே வந்து கை குலிக்கிக் கொண்டான் face book முலம் அவரிடம் அனுமதி வாங்கிய பின் இதை நான் அனுமதியுடன் புடம் போட்டு தருகின்றேன் தனி பதிவாக இடுகின்றேன்
கடல் தன் அலைகளைக் கொஞ்சம் நிறுத்தி
வானமெங்கும் விரவிக் கிடக்கிற உன் வட்ட
முகத்தைத் தன்னில் விரிக்கிறது............
மழை தன் தூறலுக்குப் பல வண்ணங்களை அடித்துத்
தன்னை மறந்து கிடந்த மாலைப் பொழுதொன்றில்..........
எனைப் பார்த்து வழக்கமாய்த்தான்
இமைத்திருக்...கும் உன் விழிகள்.............
என்னுலகில் மட்டும் ஏனடி இத்தனை திருவிழாக்கள்???
உன்விழி பார்த்த கணங்களில் வழிமாறிய
நதியொன்று என் வாசலில் வழிந்தோட.............
பின்னர் வருகிற பொழுதொன்றில் உன் இதழ்
பற்றும் கனவுகளில் துள்ளிக் குதித்து உடைந்தன
என் வீட்டுத் தேநீர்க் கோப்பைகள்..........
உன் நினைவுகளை ஏந்தியபடி மெல்ல
உதிக்கிறது எனக்கான உலகம்.................
முன்னொரு நாளில் நான் இறந்ததை
எண்ணியபடி மண்ணுக்குள் புதைந்திருந்தேன்....
மௌனத்தை அடைகாத்துக் கல்லறையின்
இருட்டறையில் கடைசியாய் நான் தள்ளப்பட்டேன்....
நன்றி கவிதை தந்த நண்பனுக்கு ;அறிவழகன் கைவல்யன்
0 Response to "வலைப்பூ என்னும் கடலில் கவிதை"
แสดงความคิดเห็น