ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்
இலங்கைக்கு ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பது பற்றி பரிசீலனை செய்து வரும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆணைக்குழு இந்த வருட இறுதியில் இது சம்பந்தமாக இறுதித் தீர்மானம் எடுக்கவுள்ளது. அதற்கு முன்னதாக அடுத்த மாத நடுப்பகுதியில் இது தொடர்பாகக் கூடி ஆராய இருக்கிறது.
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றிய வட்டாரங்கள் இத்தகவலைத் தெரிவித்தன.
இலங்கைக்கு மேற்படி வர்த்தக சலுகை வழங்கப்பட வேண்டுமா என்பது பற்றி அடுத்த மாதம் 15 ஆம் திகதி ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும். அதன் பின்னர் அது பற்றி இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு மேலும் இரண்டு மாதங்கள் செல்லும் என்று இவ்வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.
மேற்படி வர்த்தக சலுகையைப் பெறுவதற்காக பிரஸ்ஸல்ஸிலுள்ள இலங்கைத் தூதரகம் அரசாங்கத்தின் சார்பில் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மனித உரிமைகளைப் பேணுவதற்கு அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளை ஐரோப்பிய ஒன்றியத்திற்கு விளக்கிக் கூறி, மிக முக்கியமான வர்த்தக சலுகையை பெற்றுக் கொள்வதற்கென அண்மையில் அமைச்சர்கள் மட்ட குழு ஒன்றையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

0 Response to "ஜி.எஸ்.பி. பிளஸ் தீர்வைச் சலுகையை நீடிப்பு : ஐரோப்பிய ஒன்றிய ஆணைக்குழு ஆராயும்"
แสดงความคิดเห็น