மேற்குக் கரையில் யூதக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையை அமெரிக்கா தளர்த்துவதாக பாலஸ்தீன் விசனம்
அமெரிக்கா அக்கறை
மத்திய கிழக்கில் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரைப் பகுதியில் யூதக் குடியேற்ற நடவடிக்கை அனைத்தையும் இஸ்ரேல் நிறுத்த வேண்டும் என்ற தனது கோரிக்கையை அமெரிக்கா தளர்த்திக்கொள்வதாய்த் தோன்றுவதையிட்டு தாங்கள் அதிருப்தி அடைந்துள்ளதாக பாலஸ்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
இஸ்ரேலிய மற்றும் பாலஸ்தீனத் தலைவர்களைச் சந்தித்திருந்த அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேல் தனது கட்டுமானப் பணிகளில் கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று கூறினாரே ஒழிய, குடியேற்றம் முழுமையாக நிறுத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தவில்லை.
அமைதியை விலைகொடுத்துவிட்டு அமெரிக்கா தனது நிலையில் இருந்து பின்வாங்கியுள்ளது என்று பாலஸ்தீன அதிகாரி ஒருவர் ராய்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் குறிப்பிட்டுள்ளார்.
யூதக் குடியேற்றங்கள் தொடர்பாகத் தரப்பட்ட சர்வதேச அழுத்தங்களுக்கு இஸ்ரேல் பணிந்துவிடவில்லை என்பது இப்போது தெளிவாகியுள்ளது என்று இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் அவிக்டோர் லியபெர்மன் முன்னதாகக் குறிப்பிட்டிருந்தார்.

0 Response to "மேற்குக் கரையில் யூதக் குடியேற்றத்தை நிறுத்துவதற்கான கோரிக்கையை அமெரிக்கா தளர்த்துவதாக பாலஸ்தீன் விசனம்"
แสดงความคิดเห็น