பிலிப்பைன்ஸில் கடும் மழை வெள்ளம்

பிலிப்பைன்ஸில் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர், ஐந்து பேர் பலியாகியுள்ளனர். கடந்த நாற்பது ஆண்டு காலத்தில் இதுவே மிக அதிக அளவு பெய்த மழையாகும்.
பருவகால சூறாவளியால் ஒரு மாத காலத்தில் பெய்ய கூடிய மழை, ஆறே மணி நேரத்தில் தலைநகர் மணிலாவில் கொட்டியுள்ளது.
உள்ளூர் தொலைக்காட்சிகளில், கூரை மேல் நின்று கொண்டிருந்த மக்கள் நீரில் அடித்து செல்லப்படுவது காண்பிக்கப்படுகிறது.
தலைநகர் மணிலா மற்றும் இருபத்து நான்கு மாகாணங்களில் அரசாங்கம் பேரிடர் காலநிலையை அறிவித்துள்ளது.
0 Response to "பிலிப்பைன்ஸில் கடும் மழை வெள்ளம்"
แสดงความคิดเห็น