வெளிவிவகார அமைச்சராக பசில் ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள்
விரைவில் மேற்கொள்ளப்படவுள்ள அமைச்சரவை மாற்றத்தின்போது வெளிவிவகார அமைச்சர் பதவியை ஜனாதிபதியின் சிரே~;ட ஆலோசகர் பசில் ராஜபக்ஷவிற்கு வழங்கத் திட்டமிட்டிருப்பதாக அரசாங்கத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மகிந்தராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் வெளிவிவகார அமைச்சராக ரோகித்த போகொல்லாகம நியமிக்கப்பட்டார். அவர் ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க ஆட்சிக் காலத்தில் அரசாங்கத்தில் இணைந்துகொண்டிருந்தார்.
ரோகித்த போகொல்லாகம வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்ட பின்னர், அவர் அடிக்கடி வெளிநாட்டுப் பயணங்களை மேற்கொண்டதுடன், அந்தப் பயணத்தின் போது குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், தனக்கு நெருக்கமானவர்கள் பலரை தன்னுடன் அழைத்துச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தார். இந்தப் பயணங்களுக்காக பெருமளவில் மக்களின் பணம் செலவிடப்பட்டு, ஆடம்பர விடுதிகளில் தங்கியிருந்ததாக ஊடகங்கள் தொடர்ந்தும் தகவல்களை வெளியிட்டுவந்தன. இதனைத்தவிர வெளிவிவகார சேவையும் சீர்குலைவை எதிர்நோக்கியுள்ளது. இந்தப் பின்னணியிலும் ரோகித்த போகொல்லாகமவைப் பாதுகாத்துவந்த ஜனாதிபதி கடந்த வாரத்தில் அவரை கடுமையாக சாடியதாக வார இதழ்கள் அனைத்தும் செய்திகளை வெளியிட்டிருந்தன.
இதன் அடுத்தக் கட்ட நடவடிக்கையாக ரோகித்த போகொல்லாகமவை வெளிவிவகார அமைச்சர் பதவியிலிருந்து நீக்கிவிட்டு பசில் ரராஜபக்ஷவை அந்தப் பதவியில் அமர்த்தவுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
சமீபத்தில் இரவு விருந்தொன்றில் இந்த விடயம் பேசப்பட்டபோது பெருமளவானவர்கள் பஸிலையே விரும்பினர் எனக் கூறப்படுகிறது. விடுதலைப் புலிகளுடனான யுத்தம் மிகவும் தீவிரமடைந்திருந்த வேளை அதனை நிறுத்துமாறு சர்வதேச சமூகங்கள் இலங்கை மீது கடும் அழுத்தங்களைப் பிரயோகித்த வேளை, பஸில் ராஜபக்ஷ இந்தியாவுடனான உறவைக் கையாண்ட விதத்தைப் பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர். அதேவேளை, பஸில் ராஜபக்ஷ இந்தப் பதவியை ஏற்றுக்கொள்வாரா என்ற கேள்வியும் சுட்டிக்காட்டப்படுகின்றது வெளிவிவகார அமைச்சர் முழுமையாக வெளிநாட்டு விடயங்களில் கவனம் செலுத்தவேண்டும். உள்நாட்டு அரசியல் குறித்து சிந்திப்பதற்கு அவருக்கு நேரமிருக்காது. பஸில் ராஜபக்ஷவைப் பொறுத்தவரை தனது அரசியல் எதிர்காலம் குறித்த எதிர்பார்ப்புகள் அவருக்கு இருக்கலாம். தனது அரசியல் செல்வாக்கைக் கட்டியெழுப்ப அவர் விரும்பலாம்.மேலும் வடக்கினதும் கிழக்கினதும் மீள்குடியேற்ற, புனர்வாழ்வு நடவடிக்கைகள் அவர்மீது சுமத்தப்பட்டுள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் பதவி இதிலிருந்து அவர் தூர விலகவேண்டிய நிலையை உருவாக்கும்.
விடுதலைப் புலிகளின் பிரசாரம் தீவிரமாகப் பல வழிகளில் முன்னெடுக்கப்படுகின்ற சூழ்நிலையில், யுத்தத்திற்குப் பிந்திய இராஜதந்திர அணுகுமுறைகளைமேற்கொள்ள வேண்டிய தேவை இலங்கைக்கு உள்ளது எனவும் அரசியல் வட்டாரங்கள் கருதுகின்றன
அதுமாத்திரமல்லாது ஊடகத்துறை அமைச்சை அநுர பிரியதர்~ன யாப்பாவிடமிருந்து பெற்று தனக்குக் கீழ் கொண்டுவந்து அமைச்சரவை அந்தஸ்தற்ற ஊடகத்துறை அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தனவை அந்தப் பதவியில் வைத்துக்கொள்ள ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
0 Response to "வெளிவிவகார அமைச்சராக பசில் ராஜபக்ஷவை நியமிக்க முயற்சிகள்"
แสดงความคิดเห็น