இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு
கிழக்கு மாகாணத்தில் 2006ஆம் ஆண்டு நடுப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம் பெயர்ந்த குடும்பங்கள் தங்கியிருந்த அனைத்து இடைத்தங்கல் முகாம்களும் இன்றுடன் மூடப்பட்டுள்ளன.
இதன் பிரகாரம் இன்று கொக்குவில் முகாம் மூடப்பட்டு அங்கு இறுதியாகத் தங்கியிருந்த சம்பூர், கடற்கரைச்சேனை மற்றும் கூனித்தீவு ஆகிய கிராமங்களின் 97 குடும்பங்களைச் சேர்ந்த 327 பேர் 15 பஸ்களில் அழைத்துச் செல்லப்பட்டு மூதூர் பிரதேச செயலக அதிகாரிகளிடம் வெருகலில் வைத்து ஒப்படைக்கப்பட்டனர் என மட்டக்களப்பு மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.ஷரீப் தெரிவித்தார்.
உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக இக்குடும்பங்கள் தமது சொந்தக் கிராமங்களில் மீள் குடியேற முடியாத நிலையில் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்த்தப்படவிருக்கின்றார்கள்.
இதற்கென அங்கு இடைத்தங்கல் முகாம்களும் அமைக்கப்பட்டுள்ளதால் அங்கு நேரடியாக இவர்களை அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
2006 ஆம் ஆண்டு கிழக்கு மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கை காரணமாக திருகோணமலை மாவட்டத்திலுள்ள வெருகல் மற்றும் ஈச்சிலம்பத்தை ஆகிய பிரதேசங்களிலிருந்து சுமார் 7,300 குடும்பங்களைச் சேர்ந்த 22 ஆயிரம் பேர் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இடம்பெயர்ந்து 75இற்கும் மேற்பட்ட முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
2007ஆம் ஆண்டு கிழக்கு மாகாணம், விடுதலைப் புலிகளிடமிருந்து முற்றாக விடுவிக்கப்பட்ட பின்பு இக்குடும்பங்களை மீள் குடியேற்றும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டு கடந்த வருடம் முற்பகுதியில் முடிவடைந்தன.
இருப்பினும் மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
அதிகாரிகளின் தகவல்களின் படி, மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள இக்குடும்பங்களை அப்பிரதேசத்திலுள்ள இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கைகள் கடந்த ஜூன் மாதம் 16ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டு இன்றுடன் முடிவடைந்துள்ளது.
இடைத்தங்கல் முகாம்கள் மூடப்பட்டாலும் 123 குடும்பங்களைக் கொண்ட 465 பேர் உறவினர் நண்பர்கள் வீடுகளில் தங்கியுள்ளனர். சுய விருப்பத்தின் பேரில் அவர்களையும் அடுத்த வாரம் அந்தந்தப் பிரதேசத்திற்கு அழைத்துச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

0 Response to "இன்று மட்டு. முகாம்கள் மூடப்பட்டன : மக்கள் சின்னக்குளத்தில் தற்காலிகமாக குடியமர்வு"
แสดงความคิดเห็น