இலங்கை இராணுவ அணிக்கு விசா வழங்க அயர்லாந்து மறுப்பு
அயர்லாந்தில் நடைபெறவுள்ள இராணுவத்தினருக்கான சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ள தேர்வு செய்யப்பட்ட இலங்கை இராணுவ அணிக்கு விசா வழங்க அயர்லாந்து தூதரகம் மறுத்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த காலங்களில் இலங்கை இராணுவ அணி வெளிநாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டதில்லை என்பதால் விசா வழங்க இயலாது என்றும், மேலும் அதற்கான விண்ணப்பங்கள் கால தாமதமாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது என்றும் அயர்லாந்து தூதரகம் விளக்கம் அளித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அத்துடன், இதற்காக இலங்கை இராணுவ குழுவில் உறுப்பினர்களின் எண்ணிக்கை அதிகம், மற்றும் இலங்கையில் மனித உரிமை மீறல் உள்ளிட்ட ஐந்து காரணங்களை அயர்லாந்து தூதரகம் முன்வைத்துள்ளது.
அயர்லாந்து விளையாட்டுப் போட்டியில் கலந்துகொள்வதற்காக 13 பேர் கொண்ட இலங்கை இராணுவ அணியில் எட்டு வீரர்களும் ஐந்து அதிகாரிகளும் உள்ளடங்கியிருந்தனர்.
என்று கூறப்படுகிறது.

0 Response to "இலங்கை இராணுவ அணிக்கு விசா வழங்க அயர்லாந்து மறுப்பு"
แสดงความคิดเห็น