சகல இனமக்களும் பங்கெடுக்கும் வகையில் அரச கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா. சம்பந்தன்!
பாராளுமன்ற தேர்தல் முறைமை தொடர்பாக சிந்திப்பதைவிடுத்து இந்த நாட்டில் இணக்கப்பாடுகளை ஏற்படுத்தக்கூடிய அனைத்து இன மக்களும் பங்கெடுக்க கூடியதானதொரு அரச கட்டமைப்பை உருவாக்க இடமளிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் குழுக்களின் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அரச கட்டமைப்பை உருவாக்குவதற்கு இடமளிக்காவிடின் எந்தவிதமான அர்த்த புஷ்டியான விடயத்தையும் செய்துவிட முடியாது என்றும் அவர் சொன்னார்.
பாராளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற பாராளுமன்ற திருத்தச் சட்டமூல விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்; இந்த சட்டமூலததின் மூல வடிவம் சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை. அதில் அரசின் அர்த்தமான சிந்தனையை புரிய முடிகிறது என்பதுடன் திருத்தங்களும் மாற்றங்களும் முன்வைக்கப்பட்டுள்ளன. அதனை வரவேற்கின்றோம். சிறுபான்மை எண்ணிக்கை கொண்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற கட்சிகளுக்கு சட்டமூலத்தின் இரண்டாம் பந்தியில் 6ஆம் சரத்தின் உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளமை பிரச்சினையாகவே அமையும். இன, சமய ரீதியிலான அரசியல் கட்சிகளை அங்கீகாரம் இழக்கச் செய்வதற்கு எதிராக உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அவ்வாறான சொற்களை ஏற்கமுடியாது என்றும் அதனை எதிர்ப்பதாகவும் தீர்ப்பளித்துள்ளது. வாக்குரிமை இறைமையுடன் ஏற்புடையது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு பின்னர் இன, மத போன்ற சொற்கள் அகற்றப்படும் என்றும் அதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அரசாங்கம் அறிவித்திருக்கின்றமை வரவேற்கத்தக்கதாகும். சமூகம்இ சமயம் சார்ந்த முக்கியத்துவத்தை ஒரு வரலாற்று ரீதியிலேயே பார்க்க வேண்டும். சோல்பரி யாப்பை பொறுத்தமட்டில் அந்த சட்டமோ சமயத்தை தடைச் செய்வதாகவோ, பிரித்து வைப்பதாகவோ கூறவில்லை. ஏனைய சமூகங்களின் பால் பாதிக்கப்படுவதையும் கூறவில்லை. பாகுபாடுகளையும் காட்டவில்லை. காட்டவும் கூடாது.
1972, 1978 ஆம் ஆண்டு அரசியலமைப்பு திருத்தங்கள் ஒரு கருவியாக செயற்பட்டுள்ளன. இந்த நாட்டில் விசேடமாக தமிழ் மக்கள் 72-78ஆம் திருத்தங்களில் இருந்து விலக்கப்பட்டிருந்தனர்.
சிங்களமொழி, பௌத்த மதம் என்று கூறப்பட்டு ஒரு சமய, சமூகத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டது. சோல்பரி யாப்பே பல பிரிவுகள் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தன.இன்றைய சூழ்நிலையில் சமூகஇ பொருளாதார அரசியல் நன்மைகளை அவர்களே வளர்ப்பதற்கு தேவையான வகையில் ஏற்புடையதான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையேல் அரசியலமைப்பில் அர்த்தபுஷ்டியை ஏற்படுத்த முடியாது.
0 Response to "சகல இனமக்களும் பங்கெடுக்கும் வகையில் அரச கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்-இரா. சம்பந்தன்!"
แสดงความคิดเห็น