இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்
இலங்கையில் இடம்பெயர்ந்து முகாம்களில் தங்கியுள்ள 3 இலட்சம் மக்கள் குறித்து அமெரிக்க இராஜாங்க செயலாளர் ஹிலாரி கிளின்டன் மற்றம் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா ஆகியோர் நேற்று முன் தினம் நியூயோர் நகரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதன்போது, தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி இராஜாங்க செயலாளர் ரொபர்ட் பிளக்கும் உடனிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த சந்திப்பின் போது இடம்பெயர்ந்த மக்கள் தொடர்ந்தும் முகாம்களில் தங்கவைக்கப்படாமல், விடுவிக்கப்பட வேண்டியதன் அவசியம் குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.அத்துடன் இதற்கான நடவடிக்கைகள் அனைத்தையும் துரித கதியில் முன்னெடுப்பதற்கு, இரண்டு தரப்பிலும் இணக்கம் காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது
0 Response to "இலங்கையில் இடம்பெயர் மக்கள் குறித்து ஹிலாரி - எஸ்.எம். கிருஷ்ணா நியூயோர்க்கில் கலந்துரையாடல்"
แสดงความคิดเห็น