jkr
แสดงบทความที่มีป้ายกำกับ அமெரிக்கா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ அமெரிக்கா แสดงบทความทั้งหมด

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்கள் இருவருக்கு அமெரிக்காவில் சிறைத்தண்டனை


தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகனைகளை கொள்வனவு செய்ய முயற்சித்ததாக கூறப்பட்டு கைது செய்யப்பட்ட இரண்டு கனேடிய பிரஜைகளான இலங்கை தமிழர்களுக்கு அமெரிக்காவில் 26 மற்றும் 14 வருட சிறைத்தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
30 வயதான சதாஜன் சராசந்திரன் மற்றும் 55 வயதான நடராசா யோகராசா ஆகியோருக்கே இந்த தண்டனை நேற்று வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டு ஜனவரியில் சராசந்திரன் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு விமான எதிர்ப்பு ஏவுகனைகளை கொள்வனவு செய்ய முயற்சித்தார் என்றும் அதே காலக்கட்டத்தில் நடராசா ஆயுத உதவிகளை தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு செய்துக்கொடுக்க முயற்சித்தார் என்றும் குற்றம் சுமத்தியே அமெரிக்க மாவட்ட நீதிவான் ரெமொன்ட் டேயரி தமது தீர்ப்பை அறிவித்துள்ளார்.

இதேவேளை இந்த தண்டனையின் மூலம் பயங்கரவாத அமைப்புகளையும் அதன் ஆதரவாளர்களையும் முழு சட்டத்தையும் பயன்படுத்தி கட்டுப்படுத்த தாம் நடவடிக்கை எடுக்கப்போவதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக அமெரிக்க சட்டத்தரணியான பென்டன் கெம்பல் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்க விமானத்தை தகர்க்க நைஜீரிய பயணி முயற்சி


அமெரிக்க விமானத்தைத் தகர்க்க முயன்ற நைஜீரிய பயணி ஒருவரை எப்.பி.ஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு உஷார்படுத்தப்பட்டுள்ளன.

நைஜீரியாவைச் சேர்ந்த அப்துல் முதல்லாத் (வயது 23) என்பவர் ஆம்ஸ்டர்டாமிலிருந்து டெட்ராய்ட் நகருக்கு வடக்கு மேற்கு ஏயர்லைன்ஸ் விமானத்தில் பயணித்தார். அப்போது விமானத்தில் ஒரு சாதனத்தை வெடிக்க வைக்க அவர் முயற்சித்துள்ளார்.

சக பயணிகள் மற்றும் விமானத்திற்குள் இருந்த பாதுகாவலர்கள் அவரை மடக்கிப் பிடித்து அவரது முயற்சியைத் தடுத்து விட்டனர். அப்துல்லுக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.

வெள்ளிக்கிழமை அந்த விமானம் டெட்ராய்ட்டில் தரையிறங்கவிருந்த சமயத்தில், தான் வைத்திருந்த அந்த சாதனத்தை வெடிக்க வைக்க அந்த நைஜீரியர் முயன்றுள்ளார். அப்போது ஏற்பட்ட தீயால் புகை வாசம் வந்ததைத் தொடர்ந்து அருகில் இருந்த பயணிகள் அப்துல்லை மடக்கிப் பிடித்தனர். மேலும் தீயை அணைக்கவும் முயற்சித்தனர்.

இந்த அமளியைப் பார்த்து பிற பயணிகளும் ஓடி வந்து அப்துல்லை தடுத்துப் பிடிக்கும் முயற்சியில் இறங்கினர்.

விமானத்தில் பயணம் செய்த அமெரிக்கரான சையத் ஜாப்ரி என்பவர் கூறுகையில், "நான் விமானத்தின் 16 ஆவது இருக்கை வரிசையில் அமர்ந்திருந்தேன். எனக்கு 3 வரிசைக்கு முன்புதான் அப்துல் அமர்ந்திருந்தார். எனக்கு முன்பு லேசான புகையும், அதைத் தொடர்ந்து சத்தமும் கேட்டது. என்ன என்று பார்க்க எழுந்தபோது பலர் அப்துல்லை மடக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன். 15 நிமிடங்கள் விமானத்தில் பெரும் அமளியாக இருந்தது" என்றார்.

இந்த முயற்சியின்போது அப்துல்லுக்கு தீக்காயம் ஏற்பட்டது. அவருக்கு அருகில் இருந்த மேலும் 2 பயணிகளுக்கும் லேசான காயம் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் விமானத்திற்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாமல் பத்திரமாக தரையிறங்கியது.

கைது செய்யப்பட்ட அப்துல்லிடம் எப்.பி.ஐ அதிகாரிகள் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முதல் கட்ட விசாரணையில் தனக்கு அல் கொய்தாவுடன் தொடர்பு இருப்பதாக தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவம் குறித்து ஹவாய் தீவில் விடுமுறையைக் கழித்து வரும் அதிபர் ஒபாமாவுக்குத் தகவல் தரப்பட்டது.இதுகுறித்து வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் பில் பர்டன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "அதிபரின் ராணுவ உதவியாளர், இந்த தீவிரவாத தாக்குதல் முயற்சி சம்பவம் குறித்து அதிபருக்குத் தெரிவித்துள்ளார்" என்றார்.

இதைத் தொடர்ந்து உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் தீவிரவாத தடுப்பு ஆலோசகர் ஜான் பிரன்னன், தேசிய பாதுகாப்புப் பிரிவு தலைவர் டெனிஸ் மெக்டொன்னாக் ஆகியோருடன் அவசர ஆலோசனையை மேற்கொண்டார் ஒபாமா.

நிலைமையை அதிபர் உன்னிப்பாக கவனித்து வருவதாகவும், அவருக்கு விசாரணையில் கிடைத்து வரும் தகவல்கள் உடனுக்குடன் வழங்கப்பட்டு வருவதாகவும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அப்துல் பயணம் செய்த விமானத்தில் பயணிகள், ஊழியர்கள் என மொத்தம் 278 பேர் இருந்தனர். உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை காலை 11.53 இக்கு அது தரையிறங்கியது.

இந்த தகர்ப்பு முயற்சியைத் தொடர்ந்து அமெரிக்காவின் அனைத்து விமான நிலையங்களும், விமானங்களும் தீவிர பாதுகாப்பு மற்றும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. அனைத்துப் பயணிகளும் அதி தீவிர பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர்.அமெரிக்க விமானத்தை தகர்க்க நடந்த முயற்சியால் அங்கு மீண்டும் தீவிரவாத பீதி அதிகரித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை மீதான மனித உரிமைமீறல் விசாரணைக்கு உதவத் தயார் : அமெரிக்கா

Flag USA animated gif 240x180ஐக்கிய நாடுகள் சபை மேற்கொள்ளும் இலங்கையின் மனித உரிமை மீறல்களுக்கான விசாரணைகளுக்கு தாம் ஒத்துழைக்கத் தயார் என அமெரிக்கா அறிவித்துள்ளது.

அதேவேளை, இலங்கை அரசாங்கமும், மனித உரிமை மீறல்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என அமெரிக்கா கோரிக்கை விடுத்துள்ளது. அத்துடன் தமிழர் பிரச்சினைக்கு உரிய தீர்வு காணப்படவேண்டும் என்றும் அமெரிக்க வேண்டுகோள் விடுத்துள்ளது.

அமரிக்க ராஜாங்க திணைக்களத்தின், நாளாந்த செய்தியாளர் சந்திப்பின் போது, அமெ. பொதுமக்கள் விவகாரங்களுக்கான பிரிவின் உதவிச்செயலாளர் பிலிப் ஜே க்ரெளலி இந்த கருத்துக்களை வெளியிட்டுள்ளார்.


முன்னர் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவேண்டும் என்றும் அமெரிக்க தொடர்ந்தும் வலியுறுத்தி வருவதாக பிலிப் க்ரௌலி மேலும் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்கர் இருவரை இலங்கை நாடு கடத்தியுள்ளது


அமெரிக்காவில் பல மோசடிக்குற்றச்சாட்டுக்கு உள்ளான தம்பதியரை இலங்கை நாடு கடத்தியுள்ளது. இவர்கள் இருவரும் நேற்று இரவு நாடு கடத்தப்பட்டதாக குற்றப் புலனாய்வுதுறை திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஜோன் மற்றும் மாரியன் மோர்கன் என்ற இந்த தம்பதியினர்,அமரிக்காவின் பங்கு பரிமாற்ற ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தனர் எனினும் இவர்கள் இருவரும் இலங்கைக்கு தப்பி வந்துள்ளனர்.

2006 ஆம் ஆண்டு இந்த தம்பதியினர், சுமார் 100 முதலீட்டாளர்களிடம் இருந்து சுமார் 10 மில்லியன் டொலர்களை பெற்றுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் அமரிக்காவில், இந்த இருவருக்கும் எதிரான பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையில் புதிய அணுகுமுறைக்கு வலியுறுத்தி அமெரிக்கா அறிக்கை

Flag USA animated gif 180x135ஆசியப் பிராந்தியத்தில் அமெரிக்காவின் அக்கறையை எடுத்துக்காட்டி, அந்நாட்டு செனற் வெளியுறவுக்குழு தயாரித்துள்ள அறிக்கை ஒன்றில், இலங்கையில் முரண் பாட்டு அணுகுமுறையைத் தவிர்த்துக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தப் பட்டுள்ளது. மேற்படி அறிக்கை அடுத்த வாரம் வெளியிடப்பட இருக்கிறதுஇலங்கையின் வட பகுதியில் சிறுபான்மைத் தமிழ் மக்களுக்கென தனி நாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்வதற்காக போராடி வந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தை நடத்திய விதம் குறித்து அரசாங்கம் பரவலான விமர்சனத்திற்கு உள்ளான அதேவேளை, யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களை மீளக் குடியமர்த்துவதிலும், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியத்தை புனர்நிர்மாணம் செய்வதிலும் ஓரளவு முன்னேற்றம் அடைந்துள்ளதை அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது.

யுத்தம் முடிவுக்கு வந்ததும் நாட்டில் புதிய அரசியல், பொருளாதார சீரமைப்புக் களை ஏற்படுத்திக்கொள்வதில் இலங்கை யுடனான தொடர்புகளை அமெரிக்கா புதுப்பிக்க விரும்புவதாகவும் அறிக்கை தெரிவித்துள்ளது.

மனிதநேய அம்சங்கள் முக்கியமாக அவதானிக்கப்பட வேண்டிய அதேவேளை இலங்கை தொடர்பான அமெரிக்கக் கொள்கை, ஒரு விடயத்தை மட்டும் வைத்து கணிப்பிடப்படக் கூடியதல்ல என்று அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. குழுவின் ஜனநாயக கட்சித்தலைவரான செனற்றர் ஜோன் கெரியினாலும், சிரேஷ்ட குடியரசுக்கட்சி செனற்றர் றிச்சட் லூகரினாலும் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த இரு தரப்பு அறிக்கை, ஒபாமா நிர்வாகம் இலங்கை தொடர்பான அதன் புதிய கொள்கையை அறிவிக்க இருக்கும் இவ்வேளையில் வெளியிடப்படுவது குறிப்பிடத்தக்கது.

இலங்கையின் கடும் போக்கான அரசாங்கம் விடுதலைப்புலிகளுக்கெதிரான இராணுவ நடவடிக்கையைத் தீவிரப் படுத்திய அதேவேளை, கடந்த சில வருடங் களில் அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் மனித உரிமைகள் மற்றும் அவர்களுக்கான மனிதநேய உதவிகள் ஆகியன பற்றிய அக்கறையே மேலோங்கி நின்றது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப் பட்டுள்ளதாதவது:

இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அவரது இரு சகோதரர்களான கோத்தபாய, பஷில் ஆகிய மூவரினதும் கடுமையான நிலைப்பாடே இரண்டு தசாப்தகால யுத்தத்தை கடந்த மே மாதத்தில் தோற்கடிக்க உதவியது. சிறுபராய போராளிகள், பெண் தற்கொலைப் படையினர் போன்ற கொடிய தந்திரங்களை எல்லாம் தீவிரவாதிகள் பயன்படுத்தினார்கள். 1991ஆம் ஆண்டில் மீண்டும் பதவிக்கு வரும் நம்பிக்கையுடன் இருந்த முன்னாள் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைக்கும் விடுதலைப்புலி இயக்கமே பொறுப்பாகும்.

யுத்தத்தின் கடைசி வாரங்களில் சுமார் 3 லட்சம் தமிழ்ச் சிவிலியன்களுடன் விடுதலைப்புலிகள் சிக்கியிருந்த ஒடுக்கமான ஒரு கடற்கரைப் பிரதேசத்தை அரசாங்கப் படையினர் சுற்றிவளைத்து கைப்பற்றினர். இந்த இறுதி யுத்தத்தின் போது சிவிலியன்கள் நெருக்கமாக இருந்த பகுதிகளில் அரசாங்கப் படைகள் கனரக ஆயுதங்களை சகட்டுமேனிக்குப் பயன் படுத்தியுள்ளனர் என்று மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியுள்ளன. இந்த இறுதியானதும் இரத்தக்களரியை ஏற்படுத்தியதுமான யுத்தம் உட்படாத முன்னைய மோதல்களில் குறைந்தது 7,000 சிவிலியன்கள் இறந்திருக்கலாம் என்று ஐக்கியநாடுகள் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

யுத்தம் முடிவிற்கு வந்ததிலிருந்து மூடப் பட்ட முகாம்களில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் சுமார் 3 இலட்சம் தமிழ் மக்களை விடுவிக்குமாறும் அரசாங்கத் திற்கு நெருக்குதல்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. இடம்பெயர்ந்த மக்களுள் விடுதலைப்புலிகள் மறைந்திருக்கிறார்களா என்று சோதனை செய்யப்பட வேண்டு மென அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். ஆனால் பருவப்பெயர்ச்சி மழை ஆரம் பித்ததும் முகாம்களுக்குள் நிலைமை மோச மடையத் தொடங்கியுள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு சில கட்டுப் பாடுகளுடன் முகாம் வாசிகளுக்கு நட மாடும் சுதந்திரம் வழங்கப்பட்டதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.

யுத்தம் நடத்தப்பட்ட விதம் குறித்து சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கைகளை இலங்கை அரசாங்கம் நிராகரித்துவிட்டது. மேலும், பெருமளவு மனிதநேய உதவி களை வழங்கிய நாடுகளை ஏகாதிபத்திய நாடுகளெனக் கூறி உதாசீனம் செய்துள்ளது. தங்கள் நாட்டுக்கும், சீனாவுக்கும் இடையில் உறவுகள் வளர்ந்து வருவது அங்கு மேற்கு நாடுகளின் செல்வாக்கு வீழ்ச்சி அடைந்து வருவதற்கான அறி குறியே என்று இலங்கை அரச அதிகாரிகள் அடிக்கடி தெரிவித்து வந்துள்ளார்கள். யுத்த வெற்றியை தமது துரும்பாகப் பயன்படுத்தி, திரும்பவும் ஜனாதிபதியாக வருவதற்கு ஜனவரி மாதத்தில் நடை பெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் மஹிந்த ராஜபக்ஷ வெளிநாட்டு உதவி நிறுவனங்களையும் மேற்கு நாடுகளையும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடு வதாக குற்றம் சாட்டி வருகிறார்.

தமிழீழ விடுதலைப் புலிகளைத் தோற்கடித்த பின்னர் வெளிநாடுகளினால் பெருமளவிலான விமர்சனத்துக்குள்ளாவது குறித்து அரசாங்க அதிகாரிகள் ஏமாற்றம் தெரிவித்துள்ளனர்.

இந்த யுத்தம் பயங்கரவாதத்திற்கெதிரான உலகளாவிய யுததத்தின் ஒரு பகுதியே என்று தெரிவிக்கும் ஜனாதிபதி ராஜபக்ஷ, புலிகளை வெற்றிகொண்டமை ஏனைய பகுதிகளிலும் கிளர்ச்சி எதிர்ப்பு இராணுவ நடவடிக்கைகளுக்கு ஒரு எடுத்துக்காட்டாக அமைகிறது என்று குறிப்பட்டுள்ளார். பெருர் தொகையான சிவிலியன்கள் அரசாங்கப் படைகளினால் கொல்லப் பட்டார்கள் என்ற குற்றச்சாட்டை இலங்கை அதிகாரிகள் நிராகரிக்கிறார்கள். இலங்கைக்கு 2.6 பில்லியன் அமெரிக்க டொலரை வழங்குவதற்கென கடந்த ஜூலை மாதத்தில் நடைபெற்ற சர்வதேச நாணய நிதியத்தின் வாக்கெடுப்பின் போது அமெரிக்காவும் ஏனைய மேற்கு நாடுகளும் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை. விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்தின் போது, இடம்பெற்ற மனித உரிமை மீறல்களை காரணங்காட்டி முன்வைத்து அமெரிக்கா இலங்கைக்கான இராணுவ உதவியை குறைத்துள்ளது.

எனினும் மேற்கு நாடுகளிலிருந்து தனிமைப்படுத்த முடியாத அளவிற்கு இலங்கை ஒரு முக்கியத்துவம் வாய்ந்த நாடாகும் என்றும் அமெரிக்க செனற் வெளியுறவுக் குழுவின் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தில் ஐரோப்பாவையும் மத்தியக்கிழக்கையும் சீனாவுடனும் ஏனைய ஆசிய நாடுகளுடனும் இணைக்கும் வர்த்தக மார்க்கத்தில் ஒரு கேந்திர ஸ்தானத்தில் இலங்கை அமைந்துள்ளது என்று அறிக்கை கூறுகிறது. கடல் மார்க்க வர்த்தகத்தை சீர்குலைக்கும் பயங்கரவாத நடவடிக்கைகளையும் கடற்கொள்ளைச் சம்பவங்களையும் முறியடிக்கும் அக்கறை அமெரிக்கா, இந்தியா, சீனா ஆகிய மூன்று நாடுகளுக்குமே உண்டு.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்காவில் 4 போலீஸ் அதிகாரிகள் சுட்டுக்கொலை .


அமெரிக்காவின் தெற்கு சியேட்டல் பகுதியில் உள்ள டோகாமாவில் விமான படை தளம் உள்ளது. இங்கு பணி புரியும் போலீஸ் அதிகாரிகள் கிரிக் ரிச்சர்ட்ஸ், லினா கிரிஸ் வேர்ல்ட், ரொனால்ட், மார்க் ரெனிஜர் ஆகிய 4 பேரும் தங்கள் வேலை நேரம் ஆரம்பிப்பதற்கு முன்னதாக அருகில் உள்ள 'காபி ஷாப்' பில் அமர்ந்திருந்தனர். அப்போது அங்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம மனிதன் இந்த 4 போலீஸ் அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் 4 பேரும் குண்டுகள் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.


நேற்றுக்காலை 8.15 மணியளவில் இடம்பெற்ற குறிப்பிட்ட சம்பவம் தொடர்பாக அமெரிக்க பொலிஸார் 37 வயதுடைய Maurice Clemmons, என்பவரை தேடுகின்றனர். இவர் தொடர்பாக தகவல்களை வழங்குவோருக்கு 10000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் பல குற்றங்களை புரிந்துள்ள குற்றவாளியெனவும் கடந்த வாரம் 150000 அமெரிக்க டொலர்கள் ரொக்கப்பிணையில் நீதிமன்றினால் விடுதலை செய்யப்பட்ட அவர் இச்செயலில் ஈடுபட்டள்ளதாக பொலிஸார் சந்தேகிக்கின்றனர். இறுதியாக அவர் பொலிஸ் அதிகாரி ஒருவரை தாக்கியமை , சிறுமி ஒருத்தியை கற்பழித்தமை போன்ற குற்றங்களுக்காக விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது.

அதே நேரம் கொல்லப்பட்ட நால்வரும் தமது கடமையை ஆரம்பிப்புதற்கு முன்னர் சிற்றுண்டிசாலையில் இருந்து, தங்கள் லப்டொப்களில் அலுவலக வேலைகளை தயார் படுத்தி கொண்டிருந்துள்ளனர். இருவர் இருக்கையிலேயே சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், மூன்றாமவர் எழுந்து நின்றபோது சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாகவும், நான்காமவர் கொலைகாரனுடன் சண்டையிட்டு தோல்வியில் உயிரிழந்துள்ளதாகவும் விசாரணைகளின்போது தெரியவந்துள்ளது.

அத்துடன் கொலைகாரன் காயங்களுக்கு உள்ளாகியிருக்க வேண்டும் என தெரிவிக்கும் பொலிஸார், துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் எவராவது வைத்தியசாலைகளுக்கு வந்தால் தெரியப்படுத்துமாறும் அறிவித்துள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெள்ளை மாளிகை விருந்தில் ரஹ்மான்-ஷியாமளன்


வாஷிங்டன்: வெள்ளை மாளிகையில் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அமெரிக்க அதிபர் ஒபாமா அளித்த சிறப்பு இரவு விருந்தில் இந்திய வாசமே தூக்கலாக இருந்தது. மேலும் அனைவரும் வியக்கும் வகையில் மன்மோகன் சிங்கை இந்தியில் வரவேற்று அசத்தினார் ஒபாமா.

ஒபாமாக அதிபரான பின்னர் முதல் முறையாக அரசு முறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார் பிரதமர் மன்மோகன் சிங். நேற்று ஒபாமாவை அவர் சந்தித்தார்.

அப்போது பிரதமரைக் கெளரவிக்கும் வகையில் வெள்ளை மாளிகையின் தெற்குப் புல்வெளிப் பகுதியில், பிரமாண்ட விருந்தளித்தார் ஒபாமா.

பிரதமர் மன்மோகன் சிங் விருந்துக்கு வந்தபோது ஆப்கா ஸ்வாகத் ஹை என்று இந்தியில் கூறி அசத்தினார் ஒபாமா.
பிரதமருடன் 300க்கும் மேற்பட்ட விருந்தினர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இந்த விருந்தில் இந்திய வாசம் தூக்கலாக காணப்பட்டது. சாப்பாட்டில் மட்டுமல்லாமல் வந்திருந்த புள்ளிகளும் பெரும்பாலும் இந்தியப் பிரபலங்களாக இருந்தனர்.

விருந்தில் இடம் பெற்ற காய்கறிகளில் பல அதிபரின் மனைவி மிஷல் ஒபாமாவின் நேரடி மேற்பார்வையில் பராமரிக்கப்பட்டு வரும் வெள்ளை மாளிகை தோட்டத்தில் வளர்ந்தவையாம்.

விருந்தின் முதல் சுற்றில் உருளைக்கிழங்கு மற்றும் எக்பிளான்ட் (கத்தரிக்காய்) சாலட், ஃபிரஷ் சீஸ் உடன் பருப்பு சூப் ஆகியவை பரிமாறப்பட்டன.

அடுத்து, கிரீன் கறி ப்ரான், வறுத்த உருளைக்கிழங்கு, தக்காளி சட்னி, தேங்காயில் ஊறவைத்த பாசுமதி என களை கட்டியது.

உணவு விருந்துக்கு பிறகு இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசை விருந்து அளிக்கப்பட்டது. இதனால் வயிறோடு, இதயமும் நிறைந்தது. ரஹ்மானின் இசையைத் தொடர்ந்து, கிராம்மி விருது வென்றவர்களான ஜெனிஃபர் ஹட்சனின் சொக்க வைக்கும் பாடல்கள் இடம் பெற்றன. கர்ட் எல்லிங்கின் ஜாஸ் இசையும் நிறைவு சேர்த்தது.

விருந்தினர்கள் வரிசையில், இந்தியா வின் பவர்ஃபுல் முகங்களோடு, அமெரிக்கா வாழ் இந்தியர்களான பெப்சி தலைமை செயலதிகாரி இந்திரா நூயி, ஆன்மிக ஆலோசகர் தீபிகா சோப்ரா, பிரபல ஹாலிவுட் இயக்குனரும் தமிழருமான (சிக்ஸ்த் சென்ஸ், வில்லேஜ், அன்பிரக்கபிள், சைன்ஸ் உள்ளிட்ட அட்டகாச படங்களை இயக்கியவர்) மனோஜ் நைட் ஷியாமளன் மற்றும் சர்வதேச மீடியா பெரும் புள்ளிகளும் விருந்தி்ல் பங்கேற்றனர்.

ஹாலிவுட் ஜாம்பாவான்களான ஸ்டீவன் ஸ்பீல்பர்க், டேவிட் ஜெஃபன், ஜெஃப்ரி கெட்சன்பர்க் மற்றும் ஆல்ஃப்ரே உடார்ட், பிளெய்ர் அண்டர்வுட் ஆகியோரும் வந்திருந்தனர்.

ரஹ்மான் நிகழ்ச்சியை தொடங்கும் முன்பு அவரை மிஷல் அறிமுகப்படுத்தினார். அப்போது மிஷல் கூறுகையில், இவர் ஆஸ்கர் விருது வென்றவர். ஸ்லம்டாக் மில்லியனர் படத்திற்கு இசையமைத்தவர். நீங்கள் எத்தனை பேர் அந்தப் படத்தைப் பார்த்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மிகவும் அற்புதமான படம் என்றார் மிஷல்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா-ஜப்பான் தளர்த்தின


வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வது ஆபத்தாக அமையக் கூடும் என அமெரிக்க மற்றும் ஜப்பான் அரசாங்கம் இதுவரையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.

இலங்கையின், வடக்கு கிழக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் ஜப்பானிய தூதரகம் என்பன ,"கிழக்கு மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பயணிக்க வேண்டும். வட மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்''.என குறிப்பிட்டுள்ளன.

இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பயணங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையின் கருத்து குறித்து அமெரிக்கா மௌனம்


இலங்கை மீது சுமத்தப்பட்ட யுத்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக அமெரிக்காவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை இராணுவ உயர் தளபதியை விசாரணை செய்ய திட்டமிடுகிறது என்று இலங்கை தெரிவித்தமை குறித்து அமெரிக்கா எதுவித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் சாதித்து வருகிறது.

தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகாவை விசாரணை செய்யும் திட்டத்தை கைவிடுமாறு அமெரிக்க உள்ளக பாதுகாப்பு திணைக்களத்திடம் கேட்கும்படி அரசாங்கம் கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவரை அழைத்து கோரிக்கை விடுத்துள்ளது.அத்தகைய விசாரணை ஒன்றுக்கு திட்டமிடப்பட்டுள்ளதா என்று அமெரிக்க உள்ளக திணைக்களத்தினால் உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ முடியாதிருக்கிறது என்று திணைக்கள பேச்சாளர் மெற் சன்டிலர் தெரிவித்தார்.ராஜாங்க திணைக்களத்தின் பேச்சாளர் அயன் கெலி, இந்த விடயம் தமக்கு சம்பந்தம் இல்லாதது என்று கூறினார்.

அமெரிக்காவில் நிரந்தர வதிவிட அனுமதியும் கிறீன் கார்ட்டும் பெற்றுள்ள இலங்கை பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் பொன்சேகா மத்திய மாநிலமான ஒக்ளஹோமாவில் வாழ்ந்துவரும் அவரது மகள்மாரை பார்ப்பதற்காக தற்போது அங்கு சென்றுள்ளார். அமெரிக்க குடிவரவு விவகாரங்களை கையாளும் உள்ளக பாதுகாப்பு திணைக்களம் பொன்சேகாவை இன்று புதன்கிழமை விசாரணை செய்ய இருப்பதாக கடந்த வாரம் அவருக்கு அறிவித்திருக்கிறது என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம தெரிவித்துள்ளார்.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளுக்கான ஆதாரங்களை பெற்றுக் கொள்ளவே அமெரிக்க அதிகாரிகள் ஜெனரல் பொன்சேகாவை விசாரிக்க முயல்கிறார்கள் என்றும் அமைச்சர் போகொல்லாகம தெரிவித்தார். இதேவேளை அமெரிக்காவிலுள்ள புலம்பெயர் தமிழ் சமூக அமைப்பு ஒன்று ஜெனரல் பொன்சேகா விசாரிக்கப்படுவதை வரவேற்பதாக தெரிவித்துள்ளது. அமெரிக்க பிரஜைகள் என்ற வகையில் இலங்கையில் நீதியை நிலை நாட்ட தங்கள் அமெரிக்க அரசாங்கம் எடுத்துள்ள இந்த முதலாவது நடவடிக்கை தங்களுக்கு உற்சாகத்தை தருவதாகவும் இலங்கையில் மக்கள் சமத்துவமாகவும் நிம்மதியாகவும் வாழ்வதற்கான வாஷிங்டன் அமைப்பின் பிரதிநிதி அஞ்சலி மணிவண்ணன் தெரிவித்தார்.

இந்த வருட முற்பகுதியில் இலங்கையில் கொல்லப்பட தமிழ் சிவிலியன்களின் தொகை பல்லாயிரக்கணக்காக அதிகரித்தமை குறித்து அமெரிக்கா பரõமுகமாக இருப்பதைக் கண்டு தாங்கள் பெருத்த ஏமாற்றத்திற்கு உள்ளானதாகவும் அவர் தெரிவித்தார்.தமிழ் மக்களின் அடிப்படை உரிமைகளை மதிக்கும் ஒரு அரசியல் தீர்வை பெற்றுத் தருவதில் அமெரிக்கா பெரு முயற்சி எடுக்குமென தாங்கள் நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடம் நடைபெற்ற சண்டையின் போது 7000 க்கும் அதிகமான சிவிலியன்கள் கொல்லப்பட்டிருப்பதாக ஐக்கிய நாடுகள் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கம் அதன் படைகளினால் ஒரு சிவிலியயேனும் கொல்லப்பட்டவில்லை என்று வலியுறுத்திக் கூறுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மீள்குடியேற்றத்தை விரைவுபடுத்தும் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்பு


இடம்பெயர்ந்த மக்களை அவர்களது சொந்த இடங்களுக்கு துரிதமாக அனுப்பிவைக்கும் இலங்கை அரசின் நடவடிக்கையை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இடம்பெயர்ந்து அகதிகளாயுள்ள சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேரில் அடுத்த சில வாரங்களுக்குள் சுமார் 40 ஆயிரம் பேரை இலங்கை அரசாங்கம் மீள்குடியேற்றவுள்ளதாக தெரிவித்துள்ளதை நாம் வரவேற்கின்றோம். மேலும், ஆயிரக்கணக்கானோர் மீள்குடியமர்த்தப்பட்டுள்ளதை நாம் அறிவோம். இந்த நிலைமைகளை அமெரிக்கா மிகவும் உன்னிப்பாக அவதானித்து

வருகின்றது என அமெரிக்க தூதரகம் நேற்று புதன்கிழமை விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் மேலும் மக்களை விடுவிப்பதும் அவர்கள் தாமாக தங்கள் சொந்த இடங்களுக்கு செல்லுவதும் இலங்கையின் தேசிய நல்லிணக்கத்துக்கு உதவுமென அமெரிக்கா உறுதியாக நம்புகின்றது. மனிதாபிமான உதவிகள் மற்றும் நிலக்கண்ணிவெடி அகற்றல் ஆகியவற்றுக்கு அமெரிக்கா தொடர்ந்து உதவி வருகின்றது.

யு.என்.எச்.சி. ஆர் மீள்குடியமரும் குடும்பங்களுக்கு உதவும் வகையில் உலக உணவுத்திட்டத்தின் ஊடாக ஆறுமாதங்களுக்கு உலர் உணவு வகைளை வழங்குகின்றது. மேலதிக உதவிகளை இலங்கைக்கு வழங்குவது குறித்தும் அமெரிக்கா ஆலோசித்து வருகின்றது. கடந்த இரண்டு வருடங்களில் இடம்பெயர்ந்த மக்களுக்கு உணவு வழங்குவது உட்பட இலங்கைக்கு மனிதாபிமான உதவிகளின் அடிப்படையில் 87 மில்லியன் டொலர்ககளை அமெரிக்கா செலவிட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

40 அங்குல 'டிவி'க்கு அமெரிக்காவில் தடை


LCD-Fernseherசாக்ரமேன்ட்டோ: அதிக மின்சாரத்தை விழுங்கி, உலக வெப்பமயமாதலுக்கு காரணமாகிறது என்று கூறி, 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள பெரிய்ய்ய "டிவி'க் களுக்கு கலிபோர்னியா மாநிலம் தடை விதிக்க முடிவு செய்துள்ளது. உலக வெப்பமயமாதலுக்கு மின்சார பயன்பாடு முக்கிய காரணமாகிறது. அதை குறைக்க வேண்டும் என்று, கலிபோர்னியாவை சேர்ந்த பல சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மின்சார பயன்பாடு குறித்த ஆய்வை மேற்கொண்ட இந்த மாநில எரிசக்தி கமிஷன்,"பெரிய "டிவி'க் களால் அதிக மின்சாரம் செலவாகிறது. அதை தடை செய்யலாம்' என்று பரிந்துரை செய்தது.

கவர்னர் ஆர்னால்டு ஷூவர்ஸ்நெக்கர், பிரபல ஹாலிவுட் நடிகராக இருந்து அரசியலுக்கு வந்தவர். குடியரசு கட்சி சார்பில் கவர்னராக பொறுப்பேற்றவர். டெர்மினேட்டர் உட்பட பல படங்களில் நடித்தவர். எரிசக்தி கட்டுப்பாட்டுக்கு இவர் ஆதரவு தெரிவித்து வருகிறார். கமிஷன் பரிந்துரையை ஏற்று, விரைவில் ஓட்டெடுப்பு நடத்தி தீர்மானம் போட திட்டமிட்டுள்ளார். இது நிறைவேறினால், சட்டமாக அமலுக்கு வரும். அமலுக்கு வந்தால், 2013 முதல் 40 அங்குல அகலத்துக்கு மேல் உள்ள "டிவி'க்களை தயாரித்து விற்க முடியாது.

கமிஷனின் இந்த முடிவை "டிவி' தயாரிப் பாளர்கள் எதிர்த்துள்ளனர். "பெரிய "டிவி' என்பது தொழில்நுட்ப வளர்ச்சியை காட்டுகிறது. அதை தடை செய்யக்கூடாது; மேலும், மற்ற "டிவி'க்களை விட, அதன் பயன்பாடு குறைவு தான். அதனால், மின்சார தேவையும் குறைவாகத்தான் இருக் கும். இப்படி இருக்கும் போது, இதை தடை செய் வது சரியான முடிவல்ல' என்று தெரிவித்துள்ளனர். கலிபோர்னியா முக்கிய மாநிலம். அந்த மாநிலத்தில் கொண்டு வரப்படும் சட்ட முடிவுகள், மற்ற மாநிலங்களை பின்பற்ற வைக்கும். அதனால், பெரிய "டிவி'க்கு வரும் தடையும் மற்ற மாநிலங்களில் சட்டமாக கொண்டு வரப்படும் என்பதால், "டிவி' தயாரிப்பாளர்கள் வரிந்து கட்டி எதிர்க்க ஆரம்பித்துள்ளனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சீக்கியர் நியமனத்தை ஏற்றது அமெரிக்க இராணுவம்


அமெரிக்க இராணுவத்தில் சீக்கியரை தலைப்பாகையுடன் பணியாற்றுவதற்கு அந்நாட்டு இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் கமல்ஜீத் சிங் கால்ஸி என்ற டாக்டரும், கேப்டன் தேஜ்தீப் சிங் ரட்டன் என்ற பல் டாக்டரும் நியமிக்கப்பட்டனர்.

சீக்கியர்களான இவர்கள் இருவரும்,பணியில் சேர்ந்த முதல் நான்கு ஆண்டுகளுக்கான பயிற்சியின்போது சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையுடன் பணி புரிய அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தலைப்பாகையையும், தாடி மற்றும் நீண்ட தலைமுடியையும் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தங்களது மதச் சின்னத்தை அணிய அனுமதிக்குமாறு அமெரிக்க இராணுவ தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வாழ் சீக்கியர் சமூகமும் குரல் கொடுத்தது.அத்துடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேரும், சென்ட உறுப்பினர்கள் 6 பேரும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில்,கேப்டன் கமல்ஜீத் சிங் கால்ஸியை தொடர்ந்து பணியில் நியமிக்க அமெரிக்க இராணுவம் இன்று ஒப்புதல் அளித்தது.அதே சமயம் கேப்டன் ரட்டன் நியமனம் குறித்த முடிவை ஒத்திவைத்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை


இலங்கையில் 25 வருடகால யுத்தம் முடிவுறும் தறுவாயில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரித்து அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கு இராஜாங்க திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்ட கதைகளூடாக இலங்கை அரசாங்கத்தை அபகீர்த்திக்குத் தள்ளிவிடும் உள்நோக்க நலன்களுடன் தொடர்புபட்ட முயற்சியாகவே இந்த அறிக்கையினை நோக்க வேண்டியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே யுத்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திணைக்கள அறிக்கையில் அடங்கியுள்ள அரசாங்க படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் லான் கெலி இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

முடிவில் குற்றவாளிகளாக காணப்படுவோர் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென கடந்த புதன்கிழமை காங்கிரஸுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து நிருபர்கள் மத்தியில் உரையாற்றிய கெலி இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகள்“ இளைஞர்களையும் யுவதிகளையும் தங்கள் கெரில்லா போரில் ஈடுபடுத்தியதாகவும் அரசாங்க படைகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் சரணடைய விருப்பம் தெரிவித்த புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கள் விவரமாக தெரிவிக்கப்ட்டுள்ளன. அரசாங்க படைகள் அல்லது அரசாங்க ஆதரவிலான துணைப்படைகள் தமிழ் சிவிலியன்களை கடத்தியதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளன.

முகாம்களுக்கு போதிய விநியோகங்களை அனுப்புவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் யுத்தசூனிய வலயங்களிலும் முகாம்களிலும் வாழும் சிவிலியன்களுக்கு போதிய உணவு, மருந்து. சுத்தநீர் ஆகியன கிடைப்பதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதியான கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த காலப்பகுதியான கடந்த மே மாதமுடிவு வரையிலான நிலைவரங்கள் அறிக்கையில் அடங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் அடங்கலாக பயங்கரவாத குழுவினர்கள் போன்ற அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களின் ஆயுத தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு அரசாங்கத்திற்குரிய இயல்பான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. ஆயுத போராட்டங்களின் போது அரசாங்க மற்றும் அரசாங்கங்கள்“ அல்லாத செயற்பாட்டாளர்கள் சிவிலியன்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு உட்பட அவர்களது சர்வதேச சட்ட கடப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. சர்வதேச மனதாபிமாõனத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் இது சம்பந்தமான பாதிப்புக்கள் தொடர்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறி வன்முறைகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் பற்றியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையில் யுத்தம் தொடபர்பான சட்டங்களை மீறுவதாக உள்ளனவா என்ற சட்டபு??ர்வ முடிவுக்கோ அல்லது இச்சம்பவங்கள் உண்மையில் இடம்பெற்றன என்ற முடிவுக்கோ அறிக்கை வரவில்லை.

களத்தில் தங்கியிருந்த சாவதேச நிறுவனங்களும் ஊடகங்களும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்தே குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கெலி தெரிவித்தார். இவை நம்பகமானவை என்று தாங்கள் கருதுவதாக பேச்சாளர் தெரிவித்தார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரதூரமான குற்றங்கள் புரியப்பட்டமைக்கான சந்தேகங்களை அறிக்கை போக்க வேண்டுமென நியு??யோர்க்கில் தளத்தை கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கைதான அமெரிக்க கோடீஸ்வரருக்கு விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா?-அதிகாரிகள் விசாரணை

அமெரிக்காவில் மோசடி வர்த்தகத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டி கைது செய்யப்பட்ட பாரிய நிதி நிறுவன உரிமையாளர் ராஜ் ராஜரத்னம் என்பவருக்கு தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்பு உண்டா என்று அதிகாரிகள் விசாரணை செய்து வருகிறார்கள். கெலியோன் கு×ப் எனப்படும் நிதி நிறுவன ஸ்தாபகரான ராஜ் ராஜரத்னம் உட்பட மேரிலாந்திலிருந்து இயங்கும் தரும நிறுவனம் ஒன்றுக்கு அமெரிக்காவிலுள்ள செல்வந்தர்களான இலங்கையர்கள் பலர் அன்பளிப்பு செய்யும் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்வதற்கு ஆதாரமான பல ஆவணங்கள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களை மேற்கோள்காட்டி வோல் ஸ்ரீற் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னொரு போதும் இல்லாத அளவிலான இந்த பாரிய நிதி மோசடி தொடர்பாக 52 வயதான ராஜரத்னம் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க மத்திய புலன் விசாரணை பணியகம் தெரிவித்ததாகவும் பத்திரிகை குறிப்பிட்டுள்ளது.

ராஜரத்னமும் அவரது சகாக்களும் தகாத வழியில் 20 மில்லியன் டொலரை சம்பாதித்தனர் என்று வழக்குத் தொடுநர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். ராஜரத்தினத்தின் நியூயோர்க் கேலியொன் நிதி நிறுவனம் 37 பில்லியன் டொலர் முதலீட்டை கொண்டுள்ளது. ராஜரத்னத்தின் சட்டத்தரணி ஜிம் வோல்டன் தமது கட்சிக்காரர் நிரபராதி என்றும் அவருக்கெதிரான குற்றச்சாட்டுக்களை அவர் எதிர்த்து வாதாடுவார் என்றும் தெரிவித்துள்ளார். இலங்கையிலும் ஏனைய நாடுகளிலும் 2004 ஆம் ஆண்டில் சுனாமி அனர்த்தத்தினால் அழிந்து போன வீடுகளை புனரமைப்பதற்கு ராஜரத்னம் அன்பளிப்பாக நிதி வழங்கியுள்ளார். ஆனால் அவருக்கும் விடுதலைப் புலிகளுக்கும் எதவித தொடர்பும் இல்லை என்று வோல்டன் தெரிவித்தார். நியூயோர்க், புக்ளினில் மத்திய புலன் விசாரணைப் பிரிவினர் நடத்திய பயங்கரவாதத்திற்கு எதிரான மற்றுமொரு விசாரணையில் அமெரிக்காவில் பயங்கரவாத இயக்கம் என்று அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு பொருளுதவி வழங்க முயற்சித்த வேறு 8 பேர் குற்றவாளிகளென ஒப்புக் கொண்டுள்ளனர்.

ஆனால் இந்த சம்பவத்தில் ராஜரத்தினமும் அவரது சகாக்களும் தங்கள் பணம் விடுதலைப் புலிகளுக்கு போய் சேர்கிறது என்பதை தெரிந்திருந்தனர் என்று வழக்கு தொடுநர்கள் குற்றம் சாட்டவில்லை.ஆனால் நியூயோர்க் கிழக்கு மாவட்டத்திலுள்ள மாவட்ட நீதிமன்றம் ஒன்றில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய குற்றவியல் முறைப்பாட்டுப் பத்திரத்தில் தமிழர் புனர்வாழ்வு கழகம் என்ற பெயரில் மேரிலாந்திலுள்ள அமெரிக்க தரும நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்யப்படும் பணம் விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கே போய்ச் சேர்கிறது என்று மத்திய புலன் விசாரணை அதிகாரிகளால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த வழக்கு விடுதலைப் புலிகளின் அமெரிக்க பிரிவுத் தலைவர் என்று வழக்குத் தொடுநர்களால் தெரிவிக்கப்பட்ட கருணாகரன் கந்தசாமி என்பவருக்கு எதிராக கொண்டு வரப்பட்டுள்ளது என்றும் வோல் ஸ்ரீற் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமிழர் புனர்வாழ்வுக் கழகம் என்ற நிறுவனத்திற்கு அன்பளிப்பு செய்தவரது பெயர், ""தனிப்பட்டவர் பி'' என்று மட்டுமே நீதிமன்ற உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட தேடுதலிலிருந்து கண்டு பிடிக்கப்பட்ட ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது என்று விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் ""தனிப்பட்டவர் பி'' என்று குறிப்பிடப்பட்டிருப்பது ராஜரத்தினத்தையே என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக விசாரணையாளர்களுடன் தொடர்புள்ளவர்கள் கூறியதாகவும் வோல் ஸ்ரீற் ஜேர்னல் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

41 ஆண்டுகளுக்கு பிறகு விமானம் கடத்தியவர் கைது


அமெரிக்காவை சேர்ந்தவர் லூயிஸ் ஆர்மன்டோ பெனா சோல்ட்ரன். கடந்த 1968-ம் ஆண்டு நவம்பர் மாதம் இவர் நியூயார்க்கில் இருந்து புறப்பட்ட ஒரு விமானத்தை கடத்தினார். அந்த விமானம் மீட்கப்பட்டது. ஆனால், இவர் தலை மறைவாக இருந்தார். இந்த நிலையில் 41 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று நியூயார்க்கில் உள்ள ஜான் எப். கென்னடி பன்னாட்டு விமான நிலையத்தில் சந்தேகப்படும் நிலையில் சுற்றித்திரிந்த இவர் கைது செய்யப்பட்டார். இன்று (13-ந்தேதி) இவர் மங்கட்டன் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகின்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்: ஒபாமா பங்கேற்கிறார்

Photobucketஅமெரிக்க வெள்ளை மாளிகையில் வரும் 14ஆம் தேதி நடைபெற உள்ள தீபாவளி கொண்டாட்டத்தில் அதிபர் பராக் ஒபாமா கலந்து கொள்வார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் புஷ்ஷின் ஆட்சிக் காலத்தில் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம் துவக்கப்பட்டது. எனினும், புஷ் அந்தக் கொண்டாட்டத்தில் பங்கேற்றதில்லை. அவருக்கு பதிலாக அமெரிக்க அரசு உயரதிகாரிகள் பங்கேற்று வந்தனர். அதே தருணத்தில் புஷ் பதவிக் காலத்தில் வெள்ளை மாளியை ஒட்டியுள்ள பகுதியிலேயே தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றது.

ஆனால் தற்போது வெள்ளை மாளிகையில் உள்ள ஈஸ்ட் ரூமில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் முதன் முறையாக நடத்தப்பட உள்ளது. இதில் அதிபர் ஒபாமா கலந்து கொள்வார் என வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஹிலாரியின் கருத்து தவறென அவரே ஒப்புக் கொண்டுள்ளார் : பாதுகாப்பு அமைச்சு


- இலங்கையில் இடம்பெற்ற மோதல்களின் போது பாலியல் வல்லுறவும் ஒரு ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்த கருத்து தவறுதலாக இடம்பெற்ற ஒன்றென அவர் ஏற்றுக்கொண்டிருப்பதாக பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் நோக்கில் வேண்டுமென்றே ஹிலாரியின் உரையில் இலங்கையின் பெயர் உள்ளடக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹிலாரி கிளிண்டனிடம் குறித்த அறிக்கையை எழுதிக்கொடுத்த நபர், இலங்கை தொடர்பாகவும் கூறியுள்ளதுடன் இது வேண்டுமென்றே நாட்டை அசௌகரியத்திற்குள்ளாக்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹிலாரி தனது குறிப்பில் பொஸ்னியா, பர்மா, இலங்கை உட்பட மற்றும் பல நாடுகளில், பெண்கள் மீதான பாலியல் வல்லுறவும் யுத்த ஆயுதமாகப் பயன்படுத்தப்பட்டதெனத் தெரிவித்திருந்ததாகக் கூறப்பட்டிருந்தது.

எனினும் தூதுவரின் தற்போதைய கூற்றுப்படி, 2006 -2009 இடைப்பட்ட கால கட்டத்தில் யுத்த ஆயுதமாக பாலியல் வல்லுறவு பயன்பட்டதாகத் தங்களுக்கு எவ்விதத் தகவலும் கிடைக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே இதன் பின்னணியில் எவரேனும் இருக்கக்கூடும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இந்தச் சூழ்ச்சித் திட்டத்தின் பின்னணியில் சில சக்திகள் இருக்கக் கூடுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையில் இலங்கைக்கு அபகீர்த்தி ஏற்படும் வகையில் அமெரிக்க ராஜாங்கச் செயலாளருக்கு அறிக்கையைக் குறித்துக் கொடுத்த நபர் தொடர்பாக ஹிலாரி கிளிண்டனும் தற்போது விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எது, எவ்வாறெனினும், தற்போது இடம்பெயர் முகாம்களிலுள்ள 250,000 மக்களை விடுவிப்பது தொடர்பான பிரச்சினைக்கே இலங்கை அரசு முகங்கொடுக்க வேண்டியிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்கா செல்லும் மன்மோகனுக்கு விருந்து கொடுக்கிறார் அதிபர் ஒபாமா

வாஷிங்டன் : அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு, அதிபர் ஒபாமா விருந்தளித்து கவுரவிக்க உள்ளார்.


அமெரிக்காவை பொறுத்தவரை, ஒருவர் அதிபராக பதவியேற்றால், அவர் முதல் முதலாக விருந்துக்கு அழைக்கும் வெளிநாட்டு தலைவர் யார் என்பதை, அங்குள்ள அதிகாரிகள் அனைவருமே பெரிதும் எதிர்பார்ப்பர். தங்களோடு நெருங்கிய நட்புறவு கொண்டுள்ள நாடுகளின் தலைவர்களை மட்டுமே, முதல் விருந்துக்கு அதிபர் அழைப்பார். இந்த விருந்து, அமெரிக்க அரசு சார்பில், அதன் அதிபரால் அதிகாரப்பூர்வமாக ஏற்பாடு செய்யப்படுவது என்பதால், இதற்கு அத்தனை முக்கியத்துவம் தரப்படுகிறது.


தற்போது, அமெரிக்க அதிபராக ஒபாமா பதவியேற்று, பத்து மாதங்கள் ஆகியுள்ள நிலையில், இதுவரை அரசு சார்பில் அவர், அதிகாரப்பூர்வமாக எந்த வெளிநாட்டு தலைவருக்கும் விருந்து அளிக்கவில்லை. தற்போது, இந்தக் கவுரவம் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கிடைத்துள்ளது. அடுத்த மாதம் அமெரிக்கா செல்லும் பிரதமருக்கு, அதிபர் ஒபாமா விருந்து அளித்து கவுரவிக்க உள்ளார்.


இதுகுறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கை: பிரதமர் மன்மோகன் சிங்கை, அதிபர் ஒபாமா வரவேற்பார். இரு நாட்டு தலைவர்களுக்கு இடையேயான பேச்சுவார்த்தையின் மூலமாக, இந்திய - அமெரிக்க உறவு மேலும் பலப்படும். பிராந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவிலான பல்வேறு முக்கிய விஷயங்கள் குறித்து இரு நாட்டு தலைவர்களும் பேச்சு நடத்தவுள்ளனர்.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தெற்காசியாவை பொறுத்தவரை பாகிஸ்தானுடன் தான் அமெரிக்கா அதிக உறவு வைத்துள்ளதாக கூறப்பட்டு வந்தது. நிதி மற்றும் ராணுவ உதவிகளை பாகிஸ்தானுக்கு, அமெரிக்கா தாராளமாக அளித்து வந்தது. இதனால், தெற்காசியாவில் பாகிஸ்தானுக்கு தான், அமெரிக்கா முக்கியத்துவம் அளிப்பதாக பேசப்பட்டது. தற்போது, மன்மோகன் சிங்கை, ஒபாமா விருந்துக்கு அழைத்துள்ளதன் மூலம், அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மகாத்மா காந்தியின் வழியில் அமெரிக்கா செல்கிறது : ஒபாமா

மகாத்மா காந்தி அறிமுகம் செய்த வன்முறை இல்லா போராட்டம் இன்று உலகுக்கே வழி காட்டியாக அமைந்து உள்ளது. இன்று அமெரிக்காவும் மகாத்மா காந்தியின் வழியிலேயே செல்கிறது" என அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
காந்தி பிறந்தநாளையொட்டி வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
"மார்ட்டின் லூதர் கிங் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்த போது மகாத்மா காந்தியின் கொள்கைகளையும், வழி காட்டுதல்களையும் தெரிந்து கொண்டு அதே முறையை அமெரிக்காவில் பின் பற்றினார். இந்த வழியில் எத்தனையோ உரிமை போராட்டங்கள் நடந்தன.
இன்று அமெரிக்கா மகாத்மா காந்தியின் வழியில் செல்கிறது.
அவருடைய போராட்டங்கள், கொள்கைகள், அறிவுரைகள் அனைத்தும் உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளன. அவருடைய கொள்கைகளை அனைவரும் பின் பற்ற வேண்டும்."
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

"எனது 'ஹீரோ' மகாத்மா காந்தி" என்று ஏற்கனவே ஒபாமா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஒபாமா கொல்லப்படவேண்டியவரா"? - 'பேஸ் புக்' கில் கருத்துக் கணிப்பு

இன்று பலரையும் கவர்ந்துவரும் 'பேஸ் புக்' எனும் சமூக இணையத்தளத்தினூடாக அமெரிக்க இரகசிய சேவை புதுமையான கருத்துக்கணிப்பு ஒன்றைப் பதிவேற்றம் செய்திருக்கின்றது.

"அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா கொல்லப்படவேண்டியவரா?" - இந்தத் தலைப்பிலான கருத்துக் கணிப்பே அது. "ஆம்"', "இல்லை", "இருக்கலாம்" என்றவாறு தத்தமது கருத்தை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கருத்துக் கணிப்பு(The Poll) கடந்த சனிக்கிழமை பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கின்றது.

இந்த கருத்துக் கணிப்பினூடாக அமெரிக்க இரகசிய சேவை விசாரணைகளை நடத்தி வருகிறது.

இது தொடர்பில் இரகசிய சேவைப் பேச்சாளர் டர்ரின் பிளக்போட் (Darrin Blackford,) கருத்து தெரிவிக்கையில்,

"இந்த கருத்து கணிப்பு தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொள்ள 'பேஸ் புக்' சமூக இணையத்தள குழு ஒத்துழைப்பினை வழங்க வேண்டும்" என்று தெரிவித்தார்.

அமெரிக்க இரகசிய சேவை விசாரணைகளுக்குத் தாம் முழு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர்களுக்கு தேவைப்படும் தகவல்களை நிறுவனம் வழங்கும் எனவும் 'பேஸ் புக்' இணையத்தள பேச்சாளர் பெர்ரி ஸ்கினிட் (Barry Schnitt) தெரிவித்துள்ளதாக பிபிசி இணையத்தளம் செய்தி வெளியிட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates