jkr

சீக்கியர் நியமனத்தை ஏற்றது அமெரிக்க இராணுவம்


அமெரிக்க இராணுவத்தில் சீக்கியரை தலைப்பாகையுடன் பணியாற்றுவதற்கு அந்நாட்டு இராணுவம் ஒப்புக்கொண்டுள்ளது.

அமெரிக்க இராணுவத்தில் பணியாற்ற கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் கேப்டன் கமல்ஜீத் சிங் கால்ஸி என்ற டாக்டரும், கேப்டன் தேஜ்தீப் சிங் ரட்டன் என்ற பல் டாக்டரும் நியமிக்கப்பட்டனர்.

சீக்கியர்களான இவர்கள் இருவரும்,பணியில் சேர்ந்த முதல் நான்கு ஆண்டுகளுக்கான பயிற்சியின்போது சீக்கியர்கள் அணியும் தலைப்பாகையுடன் பணி புரிய அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு தலைப்பாகையையும், தாடி மற்றும் நீண்ட தலைமுடியையும் வைத்திருக்க அனுமதி மறுக்கப்பட்டது.

இதனையடுத்து அவர்கள் தங்களது மதச் சின்னத்தை அணிய அனுமதிக்குமாறு அமெரிக்க இராணுவ தலைமைக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அவர்களுக்கு ஆதரவாக அமெரிக்க வாழ் சீக்கியர் சமூகமும் குரல் கொடுத்தது.அத்துடன் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் 43 பேரும், சென்ட உறுப்பினர்கள் 6 பேரும் குரல் கொடுத்தனர்.

இந்நிலையில்,கேப்டன் கமல்ஜீத் சிங் கால்ஸியை தொடர்ந்து பணியில் நியமிக்க அமெரிக்க இராணுவம் இன்று ஒப்புதல் அளித்தது.அதே சமயம் கேப்டன் ரட்டன் நியமனம் குறித்த முடிவை ஒத்திவைத்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "சீக்கியர் நியமனத்தை ஏற்றது அமெரிக்க இராணுவம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates