jkr

யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு மிகக் கோலாகலமாக ஆரம்பம்!


DO19DO18DO17DO16DO15DO13DO12DO12DO11DO10DO9DO8DO7DO6DO5DO4DO3DO2DO1யாழ்.மாநகர சபையின் முதலாவது கூட்டத் தொடர் ஆரம்பமாவதனை முன்னிட்டு நல்லூர் கந்தசுவாமி கோவில் முன்றலில் இருந்து சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் யாழ்.நகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா பிரதி முதல்வர் துரைராஜா இளங்கோ யாழ்.அரசாங்க அதிபர் கே.கணேஷ் யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்.சண்முகலிங்கன் மற்றும் மாநகர சபை உறுப்பினர்களும் மங்கள வாத்தியங்கள் சகிதம் மாலை மரியாதைகளுடன் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர்.

Quantcast

யாழ்.மாநகர சபை அலுவலகத்திற்குச் செல்லும் பாதையின் இரு மருங்கிலுமுள்ள வர்த்தக ஸ்தாபனங்களிலும் வீடுகளிலும் பூரண கும்பம் வைத்து மாலை அணிவித்து அனைவரும் வரவேற்கப்பட்டனர். நிகழ்வின் ஆரம்பத்தில் தேசியக் கொடியை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஏற்றி வைக்க யாழ். மாநகர சபைக் கொடியை மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா ஏற்றி வைத்தார். மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந்த நிகழ்வில் யாழ்.மாநகர தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் கலந்து கொண்டதும் குறிப்பிடத்தக்கதாகும்.

மதத் தலைவர்களின் ஆசியுரைகளைத் தொடர்ந்து சிறப்புரையாற்றிய மாநகர முதல்வர் திருமதி யோகேஸ்வரி பற்குணராஜா நாம் கடந்து வந்த பாதை மிகவும் கரடுமுரடானது என்பதுடன் நாம் பட்ட வேதனைகள் துன்ப துயரங்கள் எண்ணிலடங்காதவை என்பதை இச்சந்தர்ப்பத்தில் நினைவு கூர்வதாகவும் எதிர்ப்பு அரசியல் நடாத்தி மக்களுக்கு எதனையும் பெற்றுக் கொடுக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டியதுடன் அதன் விளைவாகக் காலாகாலமாக இந்த மண்ணில் வாழ்ந்தவர்கள் தற்போது புலம்பெயர்ந்து வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் வாழ்ந்து வருவதாகத் தெரிவித்ததுடன் அத்தகையவர்கள் தமது சொந்த வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பி வருவதற்கு வழிசமைத்துக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

எமது மாநகர சபை வளவில் ஏற்கனவே இருந்த கட்டிட வடிவமைப்பில் மாநகர சபையின் புதிய கட்டிடத்தை இரண்டு வருடங்களில் கட்டி முடிப்பதற்கான திட்ட வரைவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாகவும் அதே கட்டிட அமைப்பில் புதிய கட்டிடத்தினைக் கட்டி முடிப்பதின் மூலம் மாநகரத்தின் தேவைகளைச் சுதந்திரமாக நிறைவேற்றுவதும் எமது நோக்கங்களில் ஒன்றாகும். சுத்தமான நகரம் என்பது எமது தேர்தல் விஞ்ஞாபனத்தின் கருப்பொருளாக முன்வைக்கப்பட்டுள்ளது. இதனை நாம் படிப்படியாக நிறைவேற்றி வருகின்றோம். தொடர்ந்தும் நடவடிக்கைகளை மேற்கொள்வதின் மூலம் சுத்தமானதும் அழகானதுமான நகரம் என்ற இலக்கை அடைவதில் நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு ஆரோக்கியமான நகரத்தைக் கட்டியெழுப்புவோம் எனத் தெரிவித்த யாழ்.மாநகர முதல்வர் நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியினை அமைத்தல் தற்போது காணப்படும் மரக்கறிச் சந்தையினை நவீன சந்தைக் கட்டிடத் தொகுதியாக மாற்றுதல் என்பன எமது அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் சிந்தனையில் உருவான எண்ணக் கருவாகும் என்றும் இதனை அமைச்சரின் ஊடாகப் பெறப்படும் நிதியைக் கொண்டு நிறைவேற்றுவோம் எனத் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஒரு சமூகத்தின் சுதந்திரத்தை நோக்கிய ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் அந்தப் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களால் கருத்துச் சுதந்திரம் எழுத்துச் சுதந்திரம் உயிர்வாழும் சுதந்திரம் என்பன பலவந்தமாகப் பறிக்கப்பட்ட நிலையில் அதனை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தற்போது மீட்டுத் தந்துள்ளார். அதற்காகத் தமிழ் பேசும் மக்களும் அளப்பரிய தியாகங்களைச் செய்துள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

கடந்த 20 வருட காலங்களில் தமிழ் பேசும் மக்கள் இழந்தவற்றை எல்லாம் அனைவரும் ஓரணியில் திரண்டால் இரண்டு வருடங்களில் மீட்டெடுக்க முடியும் எனத் தமக்கு முன் கருத்துரைத்த பலர் எடுத்துக் கூறியதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இக்கூற்றானது யதார்த்தமானதும் நடைமுறைச்சாத்தியமானதுமாகும் என்றும் தெரிவித்தார்.

எமது சகோதர முஸ்லிம் மக்கள் மீளவும் யாழ்.குடா நாட்டில் குடியேற வேண்டும் என்பதை வலியுறுத்துவதாகத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஐக்கிய இலங்கைக்குள் சமாதான சகவாழ்வு என்னும் அடிப்படையில் குடாநாட்டிலிருந்து வெளியேறிய சகல சமூகங்களைச் சேர்ந்தவர்களும் மீள்குடியேற வேண்டியது அவசியம் என்றும் தெரிவித்தார். யுத்தத்தினால் ஏற்பட்ட அழிவுகளின் மிச்சசொச்சங்களை நகரத்திலிருந்து சிரமதான அடிப்படையில் அப்புறப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் கிடைத்த பல்வேறு சந்தர்ப்பங்களைத் தவறவிட்டது போலன்றி எதிர்காலத்தில் இணக்க அரசியலை பின்பற்றுமாறு அனைவரையும் வேண்டுவதாகவும் அதன் மூலமே அழிந்து போயுள்ள எமது தேசத்தையும் இழந்து போயுள்ள மக்களின் வாழ்வையும் மீளவும் கட்டியெழுப்ப முடியும் என அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை, யாழ்.மாநகர சபையினால் ஊழியர்களுக்கு துவிச்சக்கர வண்டிகளை வழங்கும் திட்டத்தினை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் ஆரம்பித்து வைத்ததும் குறிப்பிடத்தக்கதாகும்.

யாழ்.மாநகர சபையின் முதலாவது கூட்டத் தொடரில் பிரதேசச் செயலாளர்கள் திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் மாநகராட்சி மன்ற ஊழியர்கள் உட்பட தமிழ் முஸ்லிம் மக்களும் பெருமளவில் கலந்து கொண்டு முதலாவது கூட்டத்தொடரைச் சிறப்பித்தனர்DO14

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யாழ். மாநகர சபையின் முதலாவது அமர்வு மிகக் கோலாகலமாக ஆரம்பம்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates