2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி
நாக்பூரில் நடந்த 2வது ஒரு நாள் போட்டியில் ,இந்திய அணி, அவுஸ்திரேலியாவை 99 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலிய அணி ஏழு போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் அவுஸ்திரேலியா வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டி நேற்று நாக்பூரில் நடந்தது. "நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற' அவுஸ்திரேலியா அணி சற்று வித்தியாசமாக பீல்டிங் களத்தடுப்பில் ஈடுப்பட்டது.
இந்திய அணிக்கு துவக்க ஆட்டக்காரர்களாக சச்சின், துவக்கினார் சேவக். மறுமுனையில் திணறிய சச்சின் (4) ஓட்டங்களை பெற்றார். தனது அதிரடியை தொடர்ந்த சேவக், ஜான்சனின் 2வது ஓவரில் ஒரு சிக்சர் அடித்து மிரட்டினார். இவர் 31 பந்தில் 40 ஓட்டங்களுக்கு (1 சிக்சர், 6 பவுண்டரி) வெளியேறினார்.
இதற்கு பின் காம்பிர், தோனி இணைந்து விவேகமாக ஆடினர். இந்த ஜோடி அவுஸ்திரேலிய பந்து வீச்சை எளிதாக சமாளித்தது. ஒன்று, இரண்டு ஓட்டங்கள் எடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கி விகிதம் குறையாமல் துடுப்பாடியது. காம்பிர் 18வது அரைசதம் கடந்தார். , காம்பிர் 76 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். 5வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 94 பந்துகளில் 136ஓட்டங்களை பெற்றுக்கொடுத்த நிலையில் தோனி (124), ரெய்னா (62) அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்
. மிகப்பெரிய இலக்கை நோக்கி ஆடிய அவுஸ்திரேலிய அணி ஆரம்பம் சரியாக அமையவில்லை. பெய்ன் (8), வாட்சன்(19) விரைவில் வெளியேறினர். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அணி தலைவர் பாண்டிங்(8), பிரவீண் குமார் வேகத்தில் அவுட்டாக, 3 விக்கெட்டுக்கு 45 ஓட்டங்கள் எடுத்து திணறியது.
ஹசி ஆறுதல்: சற்று போராடிய ஒயிட் (23), ஹர் பஜன் பந்தில் வீழ்ந்தார். மறுமுனையில் அரைசதம் கடந்து ஆறுதல் அளித்த ஹசியை (53), ஜடேஜா போல்டாக்கினார். பின் வோஜஸ் (36), மார்ஷ் (21) ஆறுதல் அளித்தனர். இறுதியில் ஆஸ்திரேலிய அணி 48.3 ஓவரில் 255 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது .பரிதாபமாக தோல்வியடைந்தது. இதையடுத்து தொடர் 11 என சமநிலையை எட்டியுள்ளது. ஆட்ட நாயகன் விருதை தோனி வென்றார். ,
0 Response to "2வது ஒரு நாள் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது இந்திய அணி"
แสดงความคิดเห็น