67 பவுண் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் : இரு இலங்கையர் மீது விசாரணை
கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 67 பவுண் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இது தொடர்பாக இலங்கை பெண் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.
அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 37) என்பவரிடம் சந்கேத்தின் பேரில் சுங்க இலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது சுந்தரம், அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் எதுவும் இருக்கவில்லை.
சுந்தரத்தை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கழுத்தில் புத்தம் புதிய தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்திருந்ததைக் கண்டனர். இது பற்றி கேட்டபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்ததாகவும், இந்தச் சங்கிலியைக் கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக ஒருவர் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் அணிந்திருந்த சங்கிலியின் எடை 40 பவுண் என்று தெரிய வந்தது.
மேலும் அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷினி (35) என்ற பெண் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுண் தங்க வளையல்களை இவர் கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.
இதையடுத்து மொத்தம் 67 பவுண் மதிப்புள்ள சங்கிலி, வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.
இது பற்றி தர்ஷினி, சுந்தரம் ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
0 Response to "67 பவுண் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் : இரு இலங்கையர் மீது விசாரணை"
แสดงความคิดเห็น