jkr

கோப்பாய் நலன்புரி நிலையத்திலிருந்து 328 பேர் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் சென்றனர்!

யாழ். கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை கட்டிடத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்பட்டிருந்த இடம்பெயர்ந்த மக்களில் 136 குடும்பங்களைச் சேர்ந்த 328 பேர் இன்றைய தினம் (28) சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்னிலையில் அம்மக்களது சொந்த இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இம்மக்கள் மத்தியில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள், இன்றைய தினம் தங்களது சொந்த இருப்பிடங்களுக்கும் உறவினர்களது இருப்பிடங்களுக்கும் செல்லும் இம்மக்கள் அதிகம் மகிழ்ச்சி அடைந்திருக்கக்கூடும் என்றும் அதேவேளை இன்னும் 71 பேர் இன்றைய தினம் தங்களது சொந்த இடங்களுக்குச் செல்ல இயலாமல் இருப்பதாகவும் இவர்கள் தங்களது விபரங்களைத் தராமையே இதற்குக் காரணம் என்றும் எனவே கூடிய விரைவில் இவர்கள் தங்களது விபரங்களை வழங்கி தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் செல்ல இயலும் என்றும் தெரிவித்தார்.

அதே நேரம் தங்களுக்கு உறவினர்கள் நண்பர்கள் இல்லாத மக்கள் வேறொரு இடத்தில் தற்காலிகமாகத் தங்க வைக்கப்படுவர் என்றும் அந்த இடத்தில் இவர்கள் தொழில் வாய்ப்புகளில் ஈடுபட வசதிகள் செய்து தரப்படும் என்றும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

மேற்படி நிகழ்வில் யாழ் அரச அதிபர் கோப்பாய் பிரதேச செயலாளர் உதவி பிரதேச செயலாளர் கோப்பாய் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை அதிபர் இராணுவ அதிகாரிகள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கோப்பாய் நலன்புரி நிலையத்திலிருந்து 328 பேர் தங்களது சொந்த இருப்பிடங்களுக்குச் சென்றனர்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates