jkr

அப்பாவை கள்ள இயக்கம் சுட்டது. - மூன்றரை வயதுக் குழந்தை வாக்குமூலம்.

வவுனியாவிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக அழைத்துவரப்பட்ட குடும்பம் ஒன்றிலிருந்த மூன்றரை வயதுப் பெண்குழந்தையொன்று எனது அப்பாவை கள்ள இயக்கம் சுட்டுவிட்டது என மழலைக் குரலில் தெரிவித்துள்ளது.



வன்னி இறுதிக்கட்ட சமரின்போது மண் அணைகளுக்கு பதிலாக பொதுமக்களையே தமது பாதுகாப்பு அரண்களாக புலிகள் வைத்திருந்தமை உலகறிந்த விடயமாகும். இச்சமயம் புதுமாத்தளன் சந்தியிலிருந்து புலிகளின் தடுப்பை உடைத்துக்கொண்டு வெளியேற முயன்ற பொதுமக்களை நோக்கி புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் செய்தவேளை பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டும் வேறு பலர் படுகாயமடைந்தும் இருந்தனர். இவ்வாறு பாதிக்கப்பட்டவர்களில் கண்ணன் குடும்பமும் ஒன்று. இதில் அருச்சுணன் கண்ணன் அவரது மனைவி கண்ணன் நிஷாந்தினி அவர்களது குழந்தையான கண்ணன் கனிஷ்டா (வயது மூன்றரை) ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.

புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் மேற்படி குடும்பத்தலைவரான அருச்சுணன் கண்ணன் கடுமையாகப் பாதிக்கப்பட்டு தற்போது இரு கால்களும் செயலிழந்த நிலையில் உள்ளார். அவரது மனைவியாகிய கண்ணன் நிஷாந்தினி ஒரு காலில் சூடு பட்ட நிலையில் சிகிச்சையின் பின்னர் தற்போது தேறிவருகின்றார். குந்தையான கண்ணன் கனிஷ்டா அதிஷ்டவசமாக சிறுசிறு சன்னச் சிதறல்கள் மட்டுமே பட்ட நிலையில் வேறு பாதிப்பின்றி உள்ளது.

வவுனியாவிலிருந்து மீள்குடியேற்றத்திற்காக யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டவர்களில் கண்ணன் குடும்பமும் உள்ளடங்கியிருந்தது. அதிலும் துரையப்பா விளையாட்டரங்கில் தனது மழலைக் குரலினால் அனைவரையும் தன்பக்கம் திருப்பிய குழந்தை கனிஷ்டா கள்ள இயக்கம் எனது அப்பாவை சுட்டுவிட்டது என கூறி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தாள்.

கனிஷ்டாவின் குடும்பத்தினர் உட்பட துரையப்பா விளையாட்டரங்கில் தங்கியிருந்த மக்களுடன் கலந்துரையாடிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அவர்களது தேவைகள் மற்றும் குறைபாடுகளைக் கேட்டறிந்து கொண்டதுடன் உரிய பதிவுகள் மேற்கொள்ளப்பட்டதும் உடனடியாகச் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அங்கு உரை நிகழ்த்திய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் பெரும் துன்ப துயரங்களை அனுபவித்த பின்னர் இன்றைய தினம் சொந்த இடங்களில் மீள்குடியமர்வதற்காக வந்துள்ளீர்கள். இன்று வழங்கப்பட்ட 5000 ரூபாவைத் தவிர மேலும் 20 ஆயிரம் ரூபா பிரதேச செயலாளர் அலுவலகத்தால் வழங்கப்படும். மேலும் 6 மாத காலத்திற்கு உலருணவுப் பொருட்கள் தொடர்ச்சியாக வழங்கப்படுவதுடன் வீட்டுப் பாவனைப் பொருட்களும் வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

கடந்த காலத்தில் நடைபெற்ற துன்ப துயரங்களை ஒரு கெட்ட கனவாக மறந்து எதிர்காலம் குறித்த நம்பிக்கையுடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குமாறு கேட்டுக் கொண்டதுடன் ஒளிமயமான எதிர்காலத்தை நோக்கி அனைவரும் ஒற்றுமையுடன் முன்செல்வோம் எனவும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை அங்கு வருகை தந்திருந்த வெண்மயில் அமைப்பின் தலைவரும் ஜேர்மன் பிராந்திய ஈபிடிபி அமைப்பாளருமான மாட்டின் ஜெயா அவர்கள் குழந்தை கனிஷ்டாவின் குடும்பத்தினரின் தேவைகள் கருதி நிதி உதவி வழங்கியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அப்பாவை கள்ள இயக்கம் சுட்டது. - மூன்றரை வயதுக் குழந்தை வாக்குமூலம்."

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates